விமான நிலையத்தில் கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலை! தடுத்து நிறுத்திய அதிகாரிகள் – அம்பலப்படுத்திய சர்வதேச ஊடகம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போதிலும், குடிவரவு பணியாளர்கள் அதனை தடுத்ததாக உத்தியோகபூர்வ தரப்புக்களை மேற்கோள்காட்டி ஏஎப்பி செய்திச்சேவை தெரிவித்துள்ளது. இதனையடுத்து கோட்டாபய ராஜபக்சவும் அவரது மனைவியும் முக்கிய சர்வதேச விமான நிலையத்திற்கு அடுத்துள்ள இராணுவ தளத்தில் இரவைக் கழித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தநிலையில் அவர் நாளை புதன்கிழமை பதவி விலகுவதாகவும், அமைதியான அதிகார மாற்றத்திற்கான வழியை தெளிவுபடுத்துவதாகவும் உறுதியளித்தார். Sri Lanka’s president in humiliating standoff with airport … Read more

கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை குருநாகல் அலுவலகத்திலும் ஆரம்பம்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்களில் இருந்து ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை குருநாகல் அலுவலகத்திலும் ஆரம்பமானது. அதன்படி, முன்கூட்டியே திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மாத்திரம் கடவுச்சீட்டு வழங்கப்படுகிறது. மாத்தறை, வவுனியா, கண்டி மற்றும் குருநாகல் பிராந்திய அலுவலகங்களில் இருந்து ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே கடவுச்சீட்டு வழங்கப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. … Read more

கடல் மார்க்கமாக நாட்டிலிருந்து வெளியேறும் முயற்சியில் கோட்டாபய! உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரத்தை மேற்கோள்காட்டி வெளியான செய்தி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடல் மார்க்கமாக நாட்டைவிட்டு வெளியேற முயற்சித்துள்ளதாக ஏஎப்பி செய்திச் சேவை அறிவித்துள்ளது. விமான நிலையத்தினூடாக நாட்டை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டு வருவதால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இவ்வாறான மாற்று நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக  அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனி ஜெட் விமானத்தில் தப்பிச் செல்ல முயற்சிக்கும் கோட்டாபய உட்பட 19 பேர்: சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் குரல் பதிவு  நாடு சந்தித்துள்ள மிகப்பெரிய நெருக்கடி  சுதந்திரம் பெற்ற பின்னர் மிக மோசமான … Read more

இலங்கையை விட்டு வெளியேற முயற்சிக்கும் கோட்டாபய! விசா வழங்க அமெரிக்கா மறுப்பு

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு விசா வழங்குவதற்கு அமெரிக்கா மறுத்துள்ளது.  ஜனாதிபதி கோட்டாபய  நேற்று  நாட்டை விட்டு வெளியேற முயன்றதாக வெளியான செய்திகளை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ் கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.  கோட்டாபயவின் கோரிக்கை மறுக்கப்பட்டது வார இறுதியில் கலிபோர்னியாவுக்கு செல்வதற்கு கோட்டாபய ராஜபக்ச விசா கோரியதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பிரதிநிதி ஒருவர் SBS ஊடகத்திடம் குறிப்பிட்டுள்ளார்.   நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை … Read more

மீண்டும் ராஜபக்சர்களின் தந்திரோபாயம்! நாளை மற்றொரு போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை

 ஆட்சியாளர்கள் உடனடியாக வெளியேறவிட்டால், 9ஆம் திகதி  புயல் வந்தது, 13ஆம் திகதி  சுனாமி வரப் போகிறது என்பதை தெளிவாக நினைவில் கொள்ளுங்கள் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.   நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரும் மக்கள் நலனுக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.  புறக்கோட்டையில் நடத்தப்பட்டு வரும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டவர்களை சந்திப்பதற்காக வருகைத் தந்த போதே அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.  மீண்டும் தந்திரோபாயங்களை பயன்படுத்தும் ராஜபக்சர்கள் மேலும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத … Read more

இலங்கை கிரிக்கட் அணி: உலக டெஸ்ட் போட்டி தரப் பட்டியலில் மூன்றாமிடம்

இலங்கை அணி உலக டெஸ்ட் கிரிக்கட் போட்டி தரப் பட்டியலில் மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளது. அவுஸ்திரேலிய அணியுடன் நேற்று இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம்,  இந்த தரப் பட்டியலில் இலங்கை அணி முன்னேற்றம் கண்டுள்ளது. தரப்பட்டியில் முதலாம் இடத்தில் தென்னாபிரிக்க அணி இடம்பிடித்துள்ளது. அவுஸ்திரேலியா இரண்டாம் இடத்தில் உள்ளது.  

தென்னிலங்கை மக்களால் சர்வதேச ரீதியாக இலங்கைக்கு ஏற்பட்டுள்ள அவமானம்

இலங்கையில் ஊழல் ஆட்சி செய்தமைக்காக ராஜபக்ஷர்களை விரட்டும் மக்கள் போராட்டம் வெற்றி அடைந்துள்ள நிலையில், ஆட்சியாளர்களும் அகற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் போராட்டக்காரர்கள் என தம்மை அடையாளப்படுத்தும் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் நாட்டின் அதியுச்ச அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் செயலகம் மற்றும் மாளிகை என்பன முற்றுகையிடப்பட்டுள்ளன. மறுபுறத்தில் பிரதமரின் வாசஸ்தலமான அலரி மாளிகையும் மக்களின் வசம் உள்ளன. மக்களின் போராட்டம் சர்வதேச நாடுகளின் தலைவர்கள், ராஜதந்திரிகள் ஜனாதிபதியை சந்திக்கும் மற்றும் நாட்டின் முக்கிய தீர்மானங்களை கலந்தாலோசிக்கும் இடங்களாக இவை உள்ளன. எனினும் … Read more

ஜப்பானின் முன்னாள் பிரதமர் மறைந்த ஷின்சோ அபேக்கு பிரதமர் இரங்கல் தெரிவிப்பு

ஜப்பானின் முன்னாள் பிரதமர் மறைந்த ஷின்சோ அபேக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரகத்தில் ஜப்பானின் முன்னாள் பிரதமரின் மறைவு தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் பிரதமர் இதன் போது குறிப்பொன்றை எழுதினார்.

14ஆம் திகதி முதல் நாடு முழுவதும் நிர்வாக முடக்கல்! கடுமையான எச்சரிக்கை – செய்திகளின் தொகுப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நாளை பதவி விலகாவிடின் வியாழக்கிழமை முதல் நாடு தழுவிய ரீதியில் நிர்வாக முடக்கல் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்று ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க கடுமையாக எச்சரித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்து சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தொடர்ந்து பதவி வகிப்பதற்கு எவ்வித தார்மீக உரிமையும் அவர்களுக்கு … Read more