நாடு சீரழிந்து விட்டது! இதுவரையில் நாட்டை இப்படியொரு நிலைமையில் பார்க்கவில்லை – யாழ். மக்கள் ஆதங்கம்

இதுவரையில் நாட்டை இப்படியொரு நிலைமையில் நாம் பார்க்கவில்லை என யாழ்ப்பாண மக்கள் தெரிவித்துள்ளனர். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மற்றும் அடுத்த ஜனாதிபதி தொடர்பில் தமது நிலைப்பாடுகளை தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். அத்துடன், அடுத்த ஜனாதிபதியாக யார் வந்தாலும் எமக்கு பிரச்சினையில்லை. இவர்களிலும் பார்க்க தமிழீழ விடுதலைப் புலிகள் வந்தால் எமக்கு சந்தோசம். அவர்களிடம் ஒப்படைத்து பாருங்கள். அப்பொழுது தான் உண்மையாக நாட்டை முன்னேற்ற முடியும் என வயோதிபர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சஜித் … Read more

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 12.07.2022   

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 12.07.2022    பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்                                                                திகதி : 2022-07-12 நகரம் வெப்பநிலை (0C) சாரீரப்பதன் (%) வானிலை உச்ச குறைந்த உச்ச குறைந்த அனுராதபுரம் 33 25 90 50 பிரதானமாக சீரானவானிலை மட்டக்களப்பு 37 27 85 55 பிரதானமாக சீரானவானிலை கொழும்பு 31 25 90 70 அடிக்கடி மழைபெய்யும் காலி 29 25 90 70 அடிக்கடி மழைபெய்யும் யாழ்ப்பாணம் 32 27 85 60 … Read more

எம்மைத் தாக்க முற்பட்டால் சர்வதேச அளவில் கேவலப்படுவர்! போராட்டத்திற்கு மத்தியில் செயற்படும் சதி குழுவினர்(Video)

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் மேற்கொண்டவர்களை அடக்குமுறையால் கட்டுப்படுத்த இவர்கள்  நினைத்தால் சர்வதேச அளவில்  கேவலப்படுவர் என போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என அறிவித்து நடத்தப்பட்ட மக்கள் போராட்டம் பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.  பதவி விலகும் அரசியல் பிரமுகர்கள்    போராட்டங்களின் விளைவாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளைய தினம் பதவி விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், பதவி … Read more

மக்கள் போராட்டக்காரர்கள் அங்கம் வகிக்காத அரசாங்கம்! போராட்டம் வெடிக்குமென எச்சரிக்கை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதற்காக ஜுலை 9ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு விட்டது என காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் சார்பில் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார். பதவி விலகுவதற்கான காலம் வழங்கப்பட்ட நிலையில், பதவியில் இருந்து விலகுவதற்கு ஏன் 13ஆம் திகதி வரை காத்திருக்க வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அடுத்து ஆட்சிக்கு வரும் எந்த ஆட்சியாளராக இருந்தாலும் அரசாங்கமாக இருந்தாலும் மக்கள் போராட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அங்கம் வகிக்காத அரசாங்கமாக இருந்தால் … Read more

தேர்தலை நடத்துவதற்கு குறைந்தபட்சம் நான்கு மாதங்கள் தேவை! தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்

அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டாலும் தேர்தலை நடத்துவதற்கு குறைந்தபட்சம் நான்கு மாதங்கள் தேவை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்த கால அவகாசம் தேவை தேவையான நிதி கிடைக்கப் பெற்றாலும் தேர்தலை நடத்த நான்கு மாத அவகாசம் தேவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் நாட்டில் தற்போதைய சூழ்நிலை தேர்தலை நடத்துவதற்கு உசிதமானதல்ல எனவும் அவர் தெற்கு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார். சுயாதீனமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்த வேண்டுமாயின் முதலில் மக்கள் எதிர்நோக்கி … Read more

வெளிநாடு செல்ல முற்பட்ட பசில் – விமான நிலைய அதிகாரிகளின் நடவடிக்கையால் வீடு திரும்பினார்

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்காக இன்று (12) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், அவ்வேளையில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் விமான நிலையத்திலிருந்து திரும்பிச் செல்ல நேரிட்டதாக  தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மக்கள் புரட்சி வெடித்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மலரி மாளிகை என்பன முற்றிலும் போராட்டகாரர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. இதனையடுத்து … Read more

புதிய ஜனாதிபதிக்கான போட்டியில் சஜித்தின் பெயர் பரிந்துரை

புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள வாக்கெடுப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பெயரை முன்மொழிய ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இந்தப் பிரேரணை நாடாளுமன்றக் குழுவினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாசவின் பெயர் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவினால் முன்மொழியப்பட்டுள்ளதுடன், அதனை நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார உறுதிப்படுத்தியுள்ளார். கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் ஜனாதிபதி இராஜினாமா செய்துள்ளதாக எதிர்வரும் 15ம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்து 20ம் திகதி நடைபெறவுள்ள வாக்கெடுப்பின் மூலம் புதிய … Read more

பரபரப்பாகும் பாராளுமன்ற மூலமான ஜனாதிபதி தேர்வு

பரபரப்பாகும் பாராளுமன்ற மூலமான ஜனாதிபதி தேர்வு :2022-07-11 அரசியலமைப்பின் 40 ஆம் உறுப்புரையில் பிரகாரம் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறையானது 1981 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க சனாதிபதி தேர்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தில் குறித்துரைக்கிறது. அரசியலமைப்பின் 38 ஆம் உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதி பதவியானது ஜவறிதாயிருக்கும் பட்சத்தில் இந்தச் சட்டத்தின் ஏற்பாடுகள் பொருந்தும். அவ்வாறு வறிதாகின்ற நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். பாராளுமன்ற செயலாளர் நாயகம் தேர்தல் நடத்தும் அதிகாரியாகச் செயல்படுகிறார், மேலும் … Read more

ரஷ்யா மீதான தடையால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பெரும் சிக்கல்

ரஷ்யா மீதான SWIFT தடையினால் ஏற்படும் வர்த்தகச் சிக்கல்கள் காரணமாக ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெறுவதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. பொதுவாக, இலங்கை மத்திய வங்கி எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு SWIFT தளத்தைப் பயன்படுத்துகிறது. எனினும், உக்ரைன் படையெடுப்பைத் தொடர்ந்து, ரஷ்ய வங்கிகள் SWIFT அமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இந்நிலைமை காரணமாக ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான மாற்று வழிகளை நடைமுறைப்படுத்துவது கடினம் என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டபிள்யூ.ஏ.விஜேவர்தன தெரிவித்துள்ளார். இரு … Read more

இலங்கையில் நீடிக்கும் அரசியல் குழப்பம் – ஐ.நா பொதுச் செயலாளர் விசேட அறிவிப்பு

அரசாங்கத்தின் சுமூகமான மாற்றத்தை உறுதி செய்வதற்கும், நாட்டின் ஆழமான பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா.வின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் சார்பாக ஐ.நா பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஐ.நா பொதுச்செயலாளர் இலங்கை மக்களுடன் ஒற்றுமையுடன் இணைந்துள்ளார். அரசாங்கத்தின் சுமூகமான மாற்றத்தை உறுதி செய்வதற்கும் பொருளாதார நெருக்கடிக்கு நிலையான … Read more