பொருளாதார வீழ்ச்சிக்கு ராஜபக்ச அரசியல் வம்சமே காரணம் – மக்கள் ஆதங்கம்

நாட்டின் மிக சக்திவாய்ந்த கட்டிடங்களில் ஒன்றான உத்தியோகபூர்வ ஜனாதிபதி இல்லத்தை பார்வையிடுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் வெயிலில் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருப்பதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகையை அண்மித்த பகுதியில் வரிசைகள் நீண்டுள்ளது. உள்ளே நுழைவதற்கு ஆறு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருப்பதாக சிலர் தெரிவித்துள்ளதாக ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து ஸ்கை நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதியின் இல்லம் மக்களின் அரண்மனையாக மாறிவிட்டது, அவர்கள் தருணத்தில் மகிழ்கிறார்கள். … Read more

லங்கா ஐஓசியால் 100 எரிபொருள் பவுசர்கள் நேற்று விநியோகம்

லங்கா ஐஓசியால் 100 எரிபொருள் தாங்கிய பவுசர்கள் நேற்று (10) நாடு முழுவதிலுமுள்ள எரிபொருள் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நேற்று (10) 1.5 மில்லியன் லீற்றருக்கும் அதிகமான பெற்றோல் மற்றும் டீசல் அடங்கிய 100 பவுசர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. திருகோணமலை டெர்மினல் விரைவில் திறக்கப்படுவதன் மூலம் ஒரு நிலையான சேவை உறுதிப்படுத்தப்படும் என லங்கா ஐஓசி யின் முகாமைத்துவப் பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்தார். மேலும் அம்புலன்ஸ் சேவையை இடைநிறுத்த முடியாது எனவும், … Read more

ஐஸ் போதைப்பொருள்: சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

சுமார் 4 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை கடத்திய சந்தேக நபர் ஒருவர் வத்தளை பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் இருந்து 4 கிலோ 320 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர் வத்தளை ஹெந்தல பிரதேசத்தை சேர்ந்த (35) வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்கூட்டியே வரையப்பட்ட கோட்டாபயவை பாதுகாப்பதற்கான திட்டம்!

கடந்த சனிக்கிழமை 9ஆம் திகதியன்று ஜனாதிபதிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பேரணியை தடுப்பது தொடர்பில், புதன்கிழமை 6ஆம் திகதியன்று, கோட்டாபய ராஜபக்ச தலைமையில் தேசிய பாதுகாப்பு பேரவை கூடி ஆராய்ந்தது. இதன்போது, போராட்டக்காரர்கள், ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைவதை தடுப்பதற்கான பாதுகாப்பு பலப்படுத்தல் குறித்து ஆராயப்பட்டது. போராட்டம் நடத்தப்படுவதற்கு முன்னரேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பாதுகாப்பான இராணுவ முகாம் ஒன்றுக்கு அழைத்துச் செல்வது தொடர்பாகவும் பேசப்பட்டன. வகுக்கப்பட்ட திட்டம் இந்த போராட்டத்தை தடுப்பதற்காக சுமார் 10ஆயிரம் படையினரையும் பொலிஸ்காரர்களையும் ஈடுபடுத்துவதற்கும் … Read more

போராட்டத்தில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி கைது

கடந்த 09ஆம் திகதி மஹரகமவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் இணைந்து கொண்ட பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று அதிகாலை காலி முகத்திடல் போராட்டப் பகுதியில் செருப்பு அணிந்து கொண்டு நின்று கொண்டிருந்த போது கோட்டை பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அதிகாரி பொலிஸ் போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் கான்ஸ்டபிள் ஒருவர் ஆவார். அதிகாரி பொலிஸ் சீருடையுடன் காலணிகளை அணிந்து சந்தேகத்திற்கிடமான வகையில் அங்கு தங்கியிருந்தமையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக கோட்டை பொலிஸ் … Read more

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 77 பேர் கைது 

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த மேலும் 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு, கலவன்கேணி கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த குழுவினர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கலவன்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இடைக்கால அரசாங்கத்தில் 15 அமைச்சர்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும்  சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைத்ததன் பின்னர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.  இந்தநிலையில் தற்போதைய  அமைச்சரவையில் அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகுவதாக இன்று மதியம் அமைச்சர்  விஜேதாச ராஜபக்ச அறிவித்திருந்தார். புதிய அமைச்சரவையில் 15 பேர்  இவ்வாறான சந்தர்ப்பத்தில் இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடத்தப்பட்டு வருகின்றன.  அத்துடன், அடுத்து அமையப்போகும் … Read more

பசில் ராஜபக்ச அரசியல் சூதாட்டத்தை நிறுத்த வேண்டும்: இலங்கையில் இரத்தக் களரி ஏற்படும் – உலப்பனே சுமங்கள தேரர் எச்சரிக்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உடனடியாக ஆட்சி அதிகார பலத்தில் இருந்து விலகி, சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க இடமளிக்க வேண்டும் என்று உலப்பனே சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று அஸ்கிரிய மாநாயக்க தேரரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். பசில் அரசியல் தந்திரங்கள் மூலம் அதிகாரத்தை பெற முயற்சிக்கக்கூடாது அரசியல் தந்திரங்கள் மூலம் பொதுஜன பெரமுனவிடம் தொடர்ந்தும் அதிகாரத்தை வைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டாம். தொடர்ந்தும் இப்படி செய்தால், நாட்டில் இரத்த … Read more

இலங்கையை விட்டு வெளியேறினார் கோட்டாபய! உறுதிப்படுத்தினார் சபாநாயகர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன உறுதிப்படுத்தியுள்ளார். பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இந்த தகவலை வழங்கியுள்ளார். நாட்டை விட்டு வெளியேறினார் கோட்டபாய எதிர்வரும் புதன்கிழமை பதவி விலகுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவித்திருந்தார். இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக அவர் வெளிநாடு ஒன்றுக்கு சென்றுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. இதனை உறுதிப்படுத்திய சபாநாயகர், எதிர்வரும் புதன்கிழமை … Read more