இலங்கையின் குழப்ப நிலை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிவித்தல்! செய்திகளின் தொகுப்பு

இலங்கையில் அரசியல் ஸ்திரம் மற்றும் ஒத்துழைப்பு அதேபோல அமைதியான அதிகார பரிமாற்றம் ஆகியவை அவசியம் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருக்கிறது. மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தின் மத்தியில் கடந்த 9ஆம் திகதி இலங்கையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு ஆக்கிரமித்துள்ளனர். இதனையடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 13ஆம் திகதி பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார். அதேநேரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சர்வகட்சி அரசாங்கத்துக்கு இடமளிக்கும் வகையில் தாம் பதவி விலகப் போவதாக அறிவித்திருக்கிறார். இது தொடர்பான விரிவான தகவல்களுடன் … Read more

ஐந்து வயதுக்குக் குறைந்த குழந்தைகளைக் கொண்ட தாய்மார் வீட்டு வேலைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதிப்பது குழந்தைகளின் வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது

ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளைக் கொண்ட தாய்மார் வீட்டு வேலைகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதி வழங்குவது அந்தக் குழந்தைகளின் குழந்தைப் பருவ வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என  ஆண் – பெண் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழு தெரிவித்துள்ளது. வீட்டு வேலைகளுக்காக (பயிற்றப்படாத தொழில்) பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது பிரதேச செயலகங்களில் விசாரணைகள் நடத்தப்பட்டு குடும்பப் பின்னணி அறிக்கை வழங்கப்பட்டு, … Read more

'யாழ். ராணி' புகையிரத சேவை ஆரம்பம்

காங்கேசன்துறை புகையிரத நிலையத்திலிருந்து கிளிநொச்சி முறிகண்டி புகையிரத நிலையம் வரையிலான “யாழ். ராணி” புகையிரத சேவை இன்று காலை (2022.07.11) உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. “யாழ்.ராணி” புகையிரத சேவை காங்கேசன்துறை புகையிரத நிலையத்திலிருந்து காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகி காலை 8.30 மணிக்கு கிளிநொச்சி முறிகண்டி புகையிரத நிலையத்தை சென்றடையுமென மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.  இப் புகையிரத சேவை உரிய நேர அட்டவணையின்படி தொடர்ச்சியாக நடைபெறவுள்ளதோடு, நாளாந்த கடமையில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள், தனியார் உத்தியோகத்தர்கள் மற்றும் … Read more

தீவிரமடையும் இரகசிய சந்திப்புகள்: ஜனாதிபதி எங்கே…!

நாட்டில் ஏற்பட்டுள்ள மக்கள் புரட்சி பாரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ள நிலையில் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான தீர்மானமிக்க கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று இடம்பெறவுள்ள அதேநேரம் கட்சிகள் பலவும் இரகசிய கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றன. சபாநாயகர் தலைமையில் இன்று முற்பகல் 10 மணிக்கு கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க குறிப்பிட்டார். இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பலத்த பாதுகாப்புடன் எங்கேயோ ஓரிடத்தில் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக சுட்டிக்காட்டி தினக்குரல் பத்திரிகை … Read more

கோப் குழு தலைவரின் விசேட அறிவிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை பெற்றோலியக் களஞ்சிய முனைய நிறுவனம் மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆகியவற்றின் தலைவர்கள் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு (கோப் குழு) நாளை (12) முற்பகல் 10.00 மணிக்கு அழைக்கப்பட்டிருந்தபோதும், நாட்டில் காணப்படும் அரசியல் சூழ்நிலைகள் காரணமாக குழுவைக் கூட்டாதிருக்க தீர்மானித்திருப்பதாக அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் தெரிவித்தார். இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரினால் கடந்த கோப் … Read more

ஜனாதிபதி வழங்கும் தகவல்கள் சபாநாயகரால் மட்டுமே வெளியிடப்படும்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்  ஸ அவர்களினால் வெளியிடப்படும் அனைத்து விடயங்களும் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் அவரினால் அவை வெளியிடப்படும் . இதனால் இதுதொடர்பில் சபாநாயகர் வெளியிடும் அறிக்கைகள் மாத்திரம் ஜனாதிபதியினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிக்கையாக கருதுமாறு தயவுடன் கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி செயலகம் இன்று (11) விடுத்துள்ள  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்ற மற்றுமொரு வியூகம்! (VIDEO)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூத்த உறுப்பினர்கள் பலர் தொடர்ச்சியாக பிரதமர் பதவியில் ரணில் விக்ரமசிங்க பதவி வகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து வருவதாக மூத்த பத்திரிக்கையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார். இருப்பினும் பொதுஜன பெரமுனவின் முழுமையான ஆதரவு ஜனாதிபதி தெரிவிலோ அல்லது பிரதமர் தெரிவிலோ ரணிலுக்கு சார்பாக அமைய வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பதவியை இராஜினாமா … Read more

தலைமறைவாகி இருந்து கோட்டாபாய விமான நிலையத்தில்….

தோல்வியை ஏற்றுக் கொண்டு தலைமறைவாகியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மறைந்திருக்கும் இடம் தொடர்பில் நேற்றைய தினம் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து இன்று காலை கோட்டாபய மற்றும் அவரது குடும்பத்தினர் இரண்டு ஹெலிகப்டர்கள் மூலம் கொழும்பை வந்தடைந்துள்ளனர். கோட்டாபயவின் வருகைக்காக இரத்மலானை விமானப்படை தளத்தில் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதற்கமைய கடந்த அரை மணித்தியாலங்களுக்கு முன்னர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் குடும்பத்துடனான ஹெலிகப்டர்கள் இரத்மலானை விமானப்படை தளத்தில் வந்தடைந்துள்ளது. தற்போது, ​​கோட்டாபய இரத்மலானை விமானப்படைத் … Read more

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4910 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. முதித பீரிஸின் தகவல் விலை அதிகரிப்பு தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் முன்னர் தெரிவிக்கையில், எரிவாயு கொல்களன் ஒன்றின் விலையை சுமார் 200 ரூபாவால் அதிகரிக்கப்பட … Read more

வன்முறைச் சம்பவங்களுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை தாம் வன்மையாக கண்டிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று மாலை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர். போராட்டக்காரர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிலருக்கு பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. அதேபோன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு மேற்கொள்ளப்பட்ட தீ வைப்பு சம்பவத்தையும் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது. இதேவேளை,அரசியலமைப்புக்கு அமைவாக ஜனாதிபதி … Read more