அலரிமாளிகையில் கூரிய ஆயுதத்துடன் போராட்டக்காரர்களிடம் சிக்கிய இராணுவ வீரர்

அலரிமாளிகை பகுதியில் கூரிய ஆயுதத்துடன் இராணுவ வீரரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இராணுவ வீரர் இன்று மாலை அலரிமாளிகை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பையில் கத்தியொன்றுடன் குழப்பத்தினை ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிந்துள்ளார். சந்தேகநபரிடம் மீட்கப்பட்டுள்ள பொருட்கள் இதன்போது குறித்த நபரை அலரிமாளிகை பகுதியிலிருந்த ஆர்ப்பாட்டகாரர்கள் விசாரித்த வேளையில் அந்த நபர் கோபமடைந்து ஆர்ப்பாட்டகாரர்களுடன் முரண்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது அவரிடமிருந்து வெளிநாடு செல்வதற்கான ஆவணங்கள் இருந்துள்ளமையும் தெரியவந்துள்ளது. பதவியை இராஜினாமா செய்தால் … Read more

வாக்காளர்கள் தம்மை பதிவுசெய்துக் கொள்வதற்கான இறுதி நாள் நாளை

2022ஆம் ஆண்டிற்கான வாக்காளர் டாப்பில் வாக்காளர்கள் தம்மை பதிவுசெய்துக்கொள்வதற்கான  இறுதித் தினம் நாளை (12) யுடன் நிறைவடைகின்றது. இந்த வருடத்திற்காக வாக்காளர் பெயர் பட்டியல் ;தயாரிக்கப்பட்டுள்ளது.. அவை பிரதேச செயலகங்களில் தற்சமயம் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. பெயர் பட்டியலில் தமது பெயர் உள்ளனவா என வாக்காளர்கள் சரிபார்த்துக்கொள்ள முடியும். கடந்த வருடத்திற்கு அமைய வாக்காளர் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் பொது மக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கி சூடு – வெளியிடப்பட்டுள்ள விளக்கம்

ஜனாதிபதி செயலகம் மற்றும் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளியான காணொளி தொடர்பில் இராணுவத்தினர் உண்மைகளை தெளிவுபடுத்தியுள்ளனர். இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட இராணுவத்தினர், “ தடுப்பு உத்தியாக வானத்திலும், ஜனாதிபதி மாளிகைக்குள் நுழையும் பிரதான வாயிலின் பக்கவாட்டு சுவரிலும் பல துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குறிப்பிட்டுள்ளனர். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் போராட்டக்காரர்களுக்கு உடலில் காயம் ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது நேற்று முன்தினம் … Read more

ஐ.நா. மனித உரிமை சபையின் 50வது கூட்டத்தொடர்

Courtesy: கட்டுரையாளர் ச.வி.கிருபாகரன் ஐ. நா. மனித உரிமை ஆணைக்குழுவின் தொடர்ச்சியாக, 2006ம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட ஐ. நா. மனித உரிமை சபை, தற்பொழுது தனது 50வது கூட்டத்தொடரை நடாத்தியுள்ளது. இக்கூட்டத்தொடரிற்கு ஆஜன்டினாவின் ஐ.நா. பிரதிநிதி, பெடிறக்கோ வீலீகஸ், பிராந்திய சுற்றின் அடிப்படையில், 2022ம் ஆண்டிற்கான தலைவராக கடமையாற்றுகின்றார். ஐ.நா.மனித உரிமை சபை என்றவுடன், வடக்கு,கிழக்கு வாழ் தமிழீழ மக்களிற்கு, விசேடமாக பாதிக்கப்பட்ட மக்களிற்கு, இச்சபையின் செயற்பாடுகள் பற்றி, தினமும் மிகவும் அக்கறையாக உன்னிப்பாக … Read more

ஜனாதிபதி மாளிகைக்குள் முதலில் சென்ற இளைஞன்:வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

நுழைவு கதவில் ஏறி ஜனாதிபதி மாளிகைக்குள் முதலில் குதித்த தபாரே என்ற இளைஞன் தனது அனுபவத்தை விபரித்துள்ளார். ஜனாதிபதி மாளிகைக்குள் சென்ற போது அங்கிருந்த படையினர் தன்னை கடுமையாக தாக்கியதாகவும் துப்பாக்கியால் சுடுவார்கள் என்று தெரிந்தும் அச்சமின்றி உள்ளே குதித்ததாகவும் தபாரே கூறியுள்ளார். மரணப்பயம் இன்றி உள்ளே குதித்தோம் இளைஞன் என்ற வகையில் போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்து செயற்பட்டு வருகின்றேன்.கோட்டாபயவை வெளியேற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருந்தோம். ஆறு தடைகளை உடைத்துக்கொண்டே நாங்கள் உள்ளே வந்தோம். … Read more

அமெரிக்காவில் உள்ள கோட்டாபயவின் மகனின் வீடு முற்றுகை (Video)

இரண்டாம் இணைப்பு  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் புதல்வர் மனோஜ் ராஜபக்சவின் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வீட்டுக்கு எதிரில் இலங்கையர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். லொஸ் ஏஞ்சல்ஸ் வீட்டுக்கு எதிரில் ஆர்ப்பாட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 13 ஆம் திகதி கட்டாயம் பதவி விலக வேண்டும் என அழுத்தம் கொடுத்து இவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்காவில் வீடுகளை கொள்வனவு செய்ய எப்படி பணம் கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட … Read more