பிரதமரின் வீட்டிற்கு தீ :மூவர் கைது

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு. நிஹால் தல்துவ தெரிவித்தார். இவர்கள் 19 தொடக்கம் 24 வயதுக்கு உட்பட்ட மற்றும் 28 வயது பிரிவைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் கல்கிசை மற்றும் காலி பிரதேசத்தைச் வசிப்பிடமாகக் கொண்டவர்கள் .. ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு கொள்ளுப்பிட்டி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். பிரதமரின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவத்தை … Read more

இந்திய உரத்தின் முதலாவது தொகுதி அரசாங்கத்திடம் கையளிப்பு

இந்திய கடனுதவித் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படும் 65 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா உரத்தின் முதலாவது தொகுதியை அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (10) காலை இடம்பெற்றது. 44 ஆயிரம் மெட்ரிக் தொன் உரம் இதில் அடங்கியுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த உரத்தை அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். உரத்தை இறக்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஏற்பட்ட பல பிரச்சினைகளுக்கு கடந்த காலங்களில் தாம் தீர்வைக் கண்டிருப்பதாகவும் அமைச்சர் … Read more

திடீரென்று உயர்ந்த காமெடி நடிகர் சூரியின் சொத்து மதிப்பு – இத்தனை கோடியா?

நடிகர் சூரியின் சொத்து குறித்த தகவல் தற்போது வைரல் ஆகி வருகிறது.  தமிழ் சினிமாவில் தற்போது படு பிசியாக இருக்கும் காமெடி நடிகர்களில் நடிகர் சூரியும் ஒருவர்.  பல உணவகங்கள், பல படங்களில் நடிப்பதற்கான ஒப்பந்தங்கள் என நடிகர் சூரியின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவருக்கு சுமார் ரூ. 40 கோடி மதிப்பிலான சொத்து இருக்கும் என்று கூறப்படுகின்றது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் … Read more

மராட்டியத்தில் தொடர் மழை 76 பேர் உயிரிழப்பு

இந்திய மாநிலமான மராட்டியத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக ஜூன் முதலாம் திகதியில் இருந்து இதுவரை 76 பேர் உயிரிழந்துள்ளனர். மராட்டியத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் பருவமழைக்காலம் தொடங்கியது. இதில் கடந்த ஒரு வாரமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கொங்கன் உள்ளிட்ட பகுதிகளில் வருகிற 13 திகதி வரை மழை பெய்யும் என வானிலை நிலையம் எச்சரித்துள்ளது.இதையடுத்து மும்பை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் … Read more

சனிக்கிழமை நடந்த துப்பாக்கி சூடு பற்றி இராணுவம் விளக்கம்

கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்குள் சனிக்கிழமை (9) பிற்பகல் ஆர்ப்பாட்டக்காரர்கள் பலவந்தமாக நுழைய முற்பட்ட போது, அவர்களுக்கு வேண்டுமென்றே தீங்கு விளைவிக்கும் வகையில் இராணுவப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறும் சில காணொளிகள் பரவி வருவது இலங்கை இராணுவத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆர்ப்பாட்டகாளர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதை இராணுவம் திட்டவட்டமாக மறுக்கிறது, ஆனால் எதிர்ப்பாளர்கள் வளாகத்திற்குள் நுழைவதைத் தடுக்கும் நோக்கில், ஜனாதிபதி மாளிகை வளாகத்தின் பிரதான நுழைவாயிலின் பக்கவாட்டு தடுப்புச் சுவர்கள் மற்றும் … Read more

சூர்யா ஸ்டார் இமேஜை ஒதுக்கிவைத்துவிட்டு இதை செய்தார்: பாராட்டிய விஜய் சேதுபதி

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி பார்த்து அஞ்சும் ரோலக்ஸ் ரோலில் நடித்திருந்தார் சூர்யா. படத்தின் இறுதியில் தான் சூர்யா சில நிமிடங்கள் மட்டுமே திரையில் தோன்றுவார். சில நிமிட ரோல் தான் என்றாலும் அவருக்கு தியேட்டரில் ரசிகர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து இருக்கும். இந்நிலையில் தற்போது ஒரு பேட்டியில் சூர்யா பற்றி விஜய் சேதுபதி பேசி இருக்கிறார். “ரோலக்ஸ் ரோலில் நடிக்க முதலில் வேறு ஒருவரை தான் தேர்ந்தெடுத்து இருந்தார்கள். ஆனால் ஷூட்டிங் தொடங்கும் ஒரு வாரம் … Read more

எரிவாயு பிரச்சினையை முடிவிற்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை

எரிவாயு பிரச்சினையை முடிவிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லிற்றோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதற்கமைவாக எரிவாயுவுடனான கப்பல் இன்று நாட்டின் கடல் எல்லைப்பகுதியை வந்தடையும். இந்த கப்பலில் 3,700 மெட்ரிக் தொன் எரிவாயு அடங்கியுள்ளது. மேலும் 3,740 மெட்ரிக் தொன் எரிவாயுவுடனான இரண்டாவது கப்பல் நாளை மாலை இலங்கை வரவுள்ளதாகவும் அவர் கூறினார்.. இன்று வந்த கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்கும் நடவடிக்கை மற்றும் விநியோக நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 3இ200 மெட்ரிக் … Read more

பாகிஸ்தானில் அடைமழை – 59 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பெய்துவரும் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 59 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக அடைமழை பெய்து வருகிறது.  அந்நாட்டின் பலூஜிஸ்தான், கைபர் பக்துவா ஆகிய மாகாணங்களில் மழை பெய்துள்ளது. கனமழை காரணமாக 8 அணைகள் உடைப்பெடுத்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல நகரங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக பல வீதிகள் துண்டிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் அனர்த்த மீட்புக்குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு செல்லாதீர்! எச்சரிக்கையுடன் தமது பிரஜைகளுக்கு அறிவித்த மற்றொரு நாடு

இலங்கைக்கு செல்ல வேண்டாம் என தமது நாட்டு பிரஜைகளுக்கு மத்திய கிழக்கு நாடான பஹ்ரைன் அறிவுறுத்தியுள்ளது.  அதேசமயம் இலங்கையில் தங்கியிருக்கும் தமது நாட்டு பிரஜைகளை உடனடியாக நாடு திரும்புமாறும் அந்த நாடு கோரிக்கை விடுத்துள்ளது.  எச்சரிக்கும் பஹ்ரைன்  இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக தமது நாட்டுப் பிரஜைகளை அழைத்துள்ளதாக பஹ்ரைன் குறிப்பிட்டுள்ளது.   அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில்  அந்நாட்டு குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் இருக்கும் அதன் பிரஜைகள் தமது சொந்த பாதுகாப்பிற்காக … Read more

காங்கேசன்துறை – கிளிநொச்சி நாளாந்த 'யாழ் ராணி' ரயில் சேவை நாளை ஆரம்பம்

காங்கசந்துறையில் இருந்து கிளிநொச்சி வரையிலான ‘யாழ் ராணி’ என்ற புதிய அலுவலக ரயில் சேவை நாளை (11) ஆரம்பமாகவிருப்பதாக ரயில்வே பொது முகாமையாளர் திரு.தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எமது செய்தி பிரிவுக்கு ரயில்வே பொது முகாமையாளர் தெரிவிக்கையில் காங்கசந்துறைக்கும் கிளிநொச்சிக்கும் இடையில் மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு தினசரி அலுவலக ரயில் சேவை இவ்வாறு ஆரம்பிக்கப்படுவதாக தெரிவித்தார். காங்கேசன்துறைக்கும் முறிகண்டிக்கும் இடையிலான இந்த ரயில் சேவை தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு   யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் நாளை … Read more