போராட்டத்திற்கு மத்தியில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற சொகுசு கார்கள்! பயணம் செய்தவர் தொடர்பான தகவல் வெளியானது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அராசாங்கத்திற்கு எதிராக நேற்றைய தினம் நடத்தப்பட்ட போராட்டத்திற்கு இடையில் கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி சொகுசு கார்கள் பல சென்றிருந்தமை தொடர்பில் தகவல் வெளியாகியிருந்தது.  குறித்த வாகனங்களில் பயணம் செய்தவர்கள் தொடர்பில் தற்போது தகவல் வெளியிடப்பட்டுள்ளது.   அந்த வாகனங்களில் நாட்டை விட்டு முக்கிய பிரபுக்கள் சிலர் பயணம் செய்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் அந்த செய்திகள் பொய்யானவை என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்களில் பயணம் செய்தவர் யார்..? இதன்போது, இந்தியாவுக்கான விஜயத்தை … Read more

இலங்கையின் தற்போதைய நிலை கவலையளிக்கிறது! சோனியா காந்தி

இந்த நெருக்கடியான தருணத்தில் இலங்கைக்கு உதவுமாறு சர்வதேசத்தை  இந்திய காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொள்கிறது என   சோனியா காந்தி  தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நிலை தொடர்பில் கவலை  இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து காங்கிரஸ் கட்சி கவலையடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார சவால்கள், விலைவாசி உயர்வு மற்றும் உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு ஆகியவை இலங்கை மக்களுக்கு பெரும் சிரமத்தையும் துன்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த பாரதூரமான நெருக்கடியில் … Read more

தமிழீழ விடுதலைப்புலிகளின் 'ஓயாத அலைகளை' நினைவுபடுத்திய கொழும்பு போராட்டம்! ஆங்கில ஊடகத்தின் வர்ணிப்பு

அரசாங்கத்துக்கு எதிராக நேற்று இடம்பெற்ற வெகுசன போராட்டங்கள், 2004ஆம்  ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் ஆரம்பித்த, ‘ஓயாத அலைகள்’ நடவடிக்கையை நினைவுப்படுத்துவதாக ஆங்கில செய்தித்தாளின் ஆசிரியர் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் அன்று ஓயாத அலைகள் தாக்குதலே, அரசாங்கப் படைகள் மீதான அவர்களின் இறுதித் தாக்குதலாக கருதியதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். எனினும் நேற்றைய போராட்டத்தின்போது படையினரின் செயல்படாத நிலையை அடுத்து வன்முறைகள் காரணமாக, நாடு அராஜகத்தின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளதாக ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். வெகுஜன கிளர்ச்சி மாத்திரம் தீர்வு இல்ல … Read more

சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் உடன்பாட்டை எட்டாமைக்கான காரணம் தொடர்பில் வெளியான தகவல்

அரசியல் ஸ்திரமின்மையே சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள், இலங்கையின் அதிகாரிகளுடன் கடந்த வாரம் உடன்பாட்டை எட்டாமைக்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் உறுதியற்ற தன்மையை அவர்கள் மோப்பம் பிடித்த நிலையிலேயே உடன்பாட்டுக்கு அவர்கள் வரவில்லை. நிலையான அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை பொறுத்தவரையில், அவர்களின் திட்டத்தைச் செயல்படுத்த நிலையான அரசாங்கம் இருக்க வேண்டும். எனவே நேற்றைய மக்கள் புரட்சியின் பின்னர், பொருளாதார மீட்சிக்கான நீண்ட மற்றும் கடினமான பாதை இப்போதுதான் தொடங்கியுள்ளது. பேச்சுவார்த்தை நடத்தப்போவது யார்? இந்தநிலையில் … Read more

ஜனாதிபதி மாளிகை தோட்டத்தில் விருந்து

போராட்டத்தின் மூலம் கோட்டாபய ராஜபக்ச, வெளியேற்றப்பட்ட பின்னர், நேற்று இரவு, போராட்டக்காரர்கள், ஜனாதிபதி மாளிகையின் முன்வாயில் தோட்டத்தில் வெற்றிக்கொண்டாட்டத்தின் விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்திருந்தனர். முன்னதாக நேற்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை முற்றுகையிட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் தலைமையிலான போராட்டக்காரர்கள், பிற்பகல் 2 மணியளவில் மாளிகைக்குள் உள்நுழைந்தனர். பாதுகாப்பு தரப்பினரின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இரண்டு போராட்டக்காரர்கள், மாளிகைக்குள் பிரதான வாயிலின் ஊடாக ஏறினர். தடுக்காத பொலிஸார்! கொண்டாட்டத்தில் போராட்டக்காரர்கள் இதன்போது அங்கிருந்த பொலிஸார்  தடுக்காத நிலையில், ஏனைய … Read more

நேற்று பொதுமக்கள் ஏற்படுத்திய புரட்சி! போராட்டக்காரர்களின் இன்றைய செயல்பாடு(Photos)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என தெரிவித்து நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் மக்கள் போராட்டங்கள் வெடித்தன. குறிப்பாக கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட போராட்டம் வரலாறு பேசும் அளவில் மாற்றங்களை கொண்டு வந்திருந்தது.  ஜனாதிபதி செயலகம், ஜனாபதி மாளிகை போன்றவற்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தாலும் நேற்று பிற்பகல் வேளையில் அவை ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன.  இந்த  போராட்டங்களின் விளைவாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் … Read more

கடந்த மாதம் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக எடுக்கப்பட்ட முடிவு! இது ஒரு எச்சரிக்கை – ஐ.நா

கோவிட் வைரஸ் தொற்று நோயினால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலிருந்து ஏற்கனவே அழுத்தத்தில் சிக்கியுள்ள நாடுகள் இலங்கையை போன்ற பொருளாதார ரீதியான கொந்தளிப்பையும் மனித அவலத்தையும் பார்க்கும் அபாயம் உள்ளது என்று ஐ.நா. கூறுகிறது. இலங்கையில் தற்போது இடம்பெற்று வரும் சோகமான நிகழ்வுகளை நாங்கள் காண்கிறோம் இந்த நெருக்கடியை எவ்வாறு கையாள்வது என்பதை நாடுகளே கண்டுகொள்ள வேண்டும் என்று நினைக்கும் எவருக்கும் இது ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஐ.நா. அபிவிருத்தி திட்டத்தின் நிர்வாகி அச்சிம் ஸ்டெய்னர் … Read more

இன்றும் தொடரும் புரட்சிப் போராட்டங்கள்! கொழும்பின் பாதுகாப்பு தீவிரம்

நேற்றைய மக்கள் புரட்சிப் போராட்டங்கள் இன்றும் தொடர்கின்றன.  காலி முகத்திடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இன்னும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு தமது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.  கொழும்பில் பாதுகாப்பு தீவிரம் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தமது இராஜினாமா கடிதத்தை கையளிக்கும் வரை தாமும்  தனது குழுவினரும் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். இதேவேளை, கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.  இராணுவ … Read more

புனித ஹஜ் பெருநாள் இன்று

தியாகத் திருநாளாம் புனித ஹஜ் பெருநாள் இன்றாகும். உலகளாவிய இஸ்லாமிய மக்களுடன் இணைந்து இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று புனித ஹஜ்ஜுப் பெருநாளை சிறப்பாக கொண்டாடுகின்றனர். புனித ஹஜ் பண்டிகையை முன்னிட்டு News.lk தமிழ் செய்திப் பிரிவு தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது. இப்ராஹீம் நபி குடும்பத்தின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் வருடந்தோறும் புனித ஹஜ் கடமை நிறைவேற்றப்படுகின்றது. இறைவன் வகுத்த சோதனையில் இப்ராஹிம் நபி அவர்களும் அவரது புதல்வர் இஸ்மாயில் மற்றும் மனைவி ஹாஜரா ஆகியோர் வெற்றி … Read more