ஜனாதிபதி பதவி விலகுவதாக அறிவித்துள்ளதால் நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை – சபாநாயகர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும ;புதன்கிழமை தமது பதவியில் இருந்து விலகுவதாக தமக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். இதனால், தொடரந்தும் நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் அமைதியான முறையில் நிர்வாகத்தை கையளிப்பதற்குத் தேவையான நிலையை உருவாக்குமாறும் சபாநாயகர் அனைவரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று (09) இடம்பெற்ற கட்சித் தலைவர்களது கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் தாம் தனிப்பட்ட முறையில் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் நாட்டு மக்களுக்கு தெரிவித்தார். தீர்மானத்தை … Read more

தீ வைக்கப்பட்ட ரணிலின் வீடு தொடர்பில் வெளிவரும் தகவல்

கொழும்பில் அமைந்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சொந்தமான பழங்கால பொருட்கள் கொண்ட வீட்டிற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் போல் மாறுவேடமிட்ட நாசகாரர்கள் குழுவொன்று தீ வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனக்குப் பின்னர் கொழும்பு றோயல் கல்லூரிக்கு இந்த வீட்டை நன்கொடையாக வழங்குவதற்கான கடைசி உயிலையும் பிரதமர் வெளியிட்டுள்ளார். மிகப்பெரிய நூலகம் ரணிலின் பாரம்பரிய வீட்டில் மிகப்பெரிய நூலகம் அமைந்திருந்ததது. இங்கு பொருட்களை விட அதிகளவிலான நூல்களே காணப்பட்டுள்ளன. இலங்கையில் எங்கும் கிடைக்காத அரிய புத்தகங்கள் இந்த நூலகத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. … Read more

கொழும்பில் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு தீ வைப்பு

கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்துக்குள் நுழைந்துள்ள போராட்டக்காரர்கள், இல்லத்திற்கு தீ வைத்துள்ளனர். இதனையடுத்து, குறித்த பகுதிக்கு தீயணைப்பு படையினர் வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டாம் இணைப்பு கொழும்பு 7இல் அமைந்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லம் அமைந்துள்ள பகுதியை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் தொடர்ந்து கண்ணீர்ப்புகை தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கடும் பதற்ற நிலை நீடித்து வருகிறது.  முதலாம் இணைப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்ல … Read more

ஜனாதிபதி மாளிகையில் பதுங்கு குழிக்குள் இருக்கும் இரகசிய அறை

கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை முற்றிலுமாக போராட்டகாரர்களில் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், இன்றிரவு பதுங்கு குழி ஒன்று இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த பதுங்கு குழிக்குள் இரகசிய அறை ஒன்று இருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. கடந்த மூன்று மாத காலத்திற்கு மேலாக போராட்டங்கள் இடம்பெற்று வந்த நிலையில் மே மாதம் 9ம் திகதி பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகினார். ஜனாதிபதி … Read more

அரசாங்க ஊடக நிறுவனங்களை தாக்கும் முயற்சியில் போராட்டக்காரர்கள்

இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஊடக நிறுவனங்களை நோக்கி போராட்டக்காரர்கள் சென்று கொண்டிப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.  அத்துடன் தற்போது  ரணில் விக்கிரமசிங்கவின் இல்ல வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. நாட்டில் இன்று மக்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது ஜனாதிபதி செயலகத்திற்குள்ளும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  Source link

இலங்கை அமைதியின்மை கொடியதாக மாறலாம் – பிரபல சட்டத்தரணி அச்சம்

 கொழும்பில் உள்ள பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி பவானி பொன்சேகா, இலங்கையின் நிலைமை கொடிய நிலை ஆகலாம் என அச்சம் தெரிவித்துள்ளார். பிபிசியிடம் பேசிய அவர், தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்று மக்கள் கருதினால், பொருளாதார நிலை மேலும் மோசமடைந்தால் வன்முறை ஏற்படலாம் என்ற கவலை உள்ளது என்றார். இலங்கையில் இது மிகவும் நிச்சயமற்ற நேரம், ஆனால் முன்னோடியில்லாதது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மருத்துவ நெருக்கடியும் நாடு எதிர்கொண்டிருப்பதாக அவர் வலியுறுத்தினார். மிகவும் ஆபத்தான சூழ்நிலைக்கு வழிவகுக்கும் … Read more

ஊடகவியலாளர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளினால் தாக்கப்பட்ட சம்பவம்: விசாரணைக்கு உத்தரவு

பிரதமரின் இல்லத்திற்கு முன்பாக இன்று (09) ஊடகவியலாளர் சிலர் ,பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளினால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ,விiவாக விசாரணை நடத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர் ,பிரதமரின் இல்லத்திற்கு அருகில் ஊடகவியலாளர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் தாக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் … Read more

கோட்டாபய ராஜபக்ச எங்கிருக்கின்றார் – பிபிசி வெளியிட்டுள்ள செய்தி

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் தொடரும் நிலையில், இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டுத் தப்பிச் சென்ற பின்னரும், அவர் சென்ற இடம் பற்றிய சரியான இடம் தெரியவில்லை. பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பதவி விலகக் கோரி தலைநகர் கொழும்பில் பெரும் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பில் உள்ள சொத்துக்கள் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பெரும் கூட்டத்தால் தாக்கப்பட்டன. வாயில்களுக்கு வெளியே மக்கள் கூடியிருந்ததைத் தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் … Read more

பதில் ஜனாதிபதியை  நியமிப்பதற்கு பாராளுமன்றம் 7 நாட்களுக்குள்  கூட்டப்பட வேண்டும் 

ஜனாதிபதியும் பிரதமரும் முடிந்தவரையில் கூடியவிரைவில் தமது பதவிகளில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டும். பாராளுமன்ற ஜனநாயக நடைமுறைக்கு அமைவாகவும்  ,அரசியல் யாப்பு அமைவாக அடுத்த நடவடிக்கையாக பதில் ஜனாதிபதி ஒருவரை நியமிப்பதற்காக 7 நாட்களுள் பாராளுமன்றத்தை கூட்டி பொது உடன்பாட்டில் தீர்மானம் மேற்கொள்ளபட வேண்டும் என்று இன்று நடைபெற்ற பாராளுமன்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.   சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (09)  நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சபாநாயகர், … Read more

ஜனாதிபதி ,ஜூலை 13ஆம் திகதி பதவி விலகுவார் – சபாநாயகர் அறிவிப்பு

எதிர்வரும் 13ஆம் திகதி பதவி விலகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  எதிர்வரும் 13ஆம் திகதி பதவி விலகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தம்மிடம் தெரிவித்திருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சற்று முன்னர் தெரிவித்தார்.