ஆரம்பமானது வெற்றிக்கான கொண்டாட்டங்கள்(Video)

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டம் வெற்றி பெறும் நிலையில் உள்ளதை யாழ்.மக்கள் வெடி கொளுத்தி கொண்டாடியுள்ளனர். யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள முச்சந்தியில் இளைஞர்கள் வெடி கொளுத்தி கொண்டாடியுள்ளனர். இதேவேளை, கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்துக்கும் ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாக கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ச பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இதனை தெரிவித்துள்ளார்.    அம்பாறை – கல்முனை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பில் இடம்பெறும் … Read more

அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடி , உடனடித் தீர்மானம் எடுப்பதற்காகவே கட்சித்தலைவர்களின் கூட்டத்திற்கு  பிரதமர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். பாராளுமன்றத்தை கூட்டுமாறும், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோட்டாபயவின் பதவி விலகலை உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும்! கொழும்பில் இருந்து வரும் செய்தி

கோட்டாபயவின் பதவி விலகலை உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள்  தெரிவித்துள்ளனர்.  ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என தெரிவித்து கொழும்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஊரடங்கு சட்டம் நடைமுறைக்கு வந்தாலும் போராட்டம் தொடரும்  ஜனாதிபதி செயலகம் மற்றும் … Read more

சஜித் பிரேமதாச வைத்தியசாலையில்

சஜித் வைத்தியசாலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  அவர் வைரஸ் காய்ச்சலால் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.  ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார். ஜனாதிபதியை பதவி விலக வலியுறுத்தி இன்று கொழும்பில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியை வழி நடத்தவிருந்த நிலையிலேயே சஜித் பிரேமதாஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  ராஜித மீது தாக்குதல் இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் கலந்து … Read more

பிரதமர் பதவி விலக தயார்

பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு சர்வகட்சி அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்கத் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது. உலக உணவுத் திட்டத்தின் பணிப்பாளர் இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர் .சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிலைத்தன்மை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.இந்த விடயங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், எதிர்க்கட்சித் … Read more

சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம்

கட்சித் தலைவர்கள் கூட்டம் தற்போது, சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ,சபாநாயரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் நடைபெறுகிறது. இதில் கட்சித்தலைவர்கள் நேரடியாகவும் சிலர் ZOOM தொலை நுட்பத்தின் ஊடாக கலந்துகொண்டுள்ளனர்

அடுத்த ஜனாதிபதி மகிந்த யாபா! இறுதி முடிவு வெளியானது

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தற்போதைய சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன பதவியேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது.  இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றினை இட்டுள்ளார்.   இன்று பிற்பகல் இடம்பெற்ற அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.  இந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஜேவிபியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.  Source link

தகவல் தொழில்நுட்ப கல்வி புலமைப்பரிசில் திட்டத்தில் சகோதரக் கழக ஒப்பந்தம் மற்றும் ஒத்துழைப்பு

மணிலாவில் உள்ள இலங்கைத் தூதரகம், கொழும்பு ரோட்டரி கழகம் – ரீகனெக்ஷன்ஸ் மற்றும் மகதி ரோட்டரி கழகம்- நண்பர்கள் வட்டம் ஆகியவற்றுக்கு இடையே 2022 ஜூன் 29ஆந் திகதி சகோதரக் கழக ஒப்பந்தத்தில் மெய்நிகர் ரீதியாக கைச்சாத்திட உதவியது. 500 இலங்கைப் பயனாளிகளுக்கு இணையவழிச் சான்றிதழ் கற்கைகள், டிப்ளோமாக்கள் மற்றும் பட்டப் படிப்புக்களை உள்ளடக்கிய தகவல் தொழில்நுட்ப கல்வி புலமைப்பரிசில் திட்டத்தின் கட்டமைப்பை முறையாக நிறுவிய விழாவின் போது சர்வதேச கல்வி குளோபல் கல்லூரிகள் இன்க் மையம் … Read more

மதுபான விற்பனை நிலையங்கள்

நாடு மழுவதுமுள்ள மதுபான விற்பனை நிலையங்கள் இன்று மாலை 5.00 மணி முதல்  அமுலுக்கு வரும் வகையில் மூடப்படுவதாக கலால் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். இதற்கமைவாக நாளை (10) மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.