அவசர கட்சித் தலைவர்கள் கூட்டம்! ரணிலிடம் தனது முடிவை அறிவித்தார் கோட்டாபய

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு தாம் இணங்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவித்துள்ளார்.   ஜனாதிபதியை விலகுமாறு கூறி நாட்டில் நடத்தப்பட்டு வரும் போராட்டங்கள் தீவிர நிலையை அடைந்துள்ளன. இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். ரணிலுக்கு உறுதியளித்த கோட்டாபய  இந்த நிலையிலேயே கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது எடுக்கும் முடிவுகளுக்கு தாம் மதிப்பளிப்பதாக ஜனாதிபதி பிரதமருக்கு அறிவித்துள்ளார்.  இதேவேளை, ஜனாதிபதியை பதவி விலகுமாறு … Read more

இன்று மாலை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (09)  மாலை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையின் 72 வருட முன்னணி  நிறுவனமான ஹேமாஸ் ஹோல்டிங் பி.எல்.சி. ஓமான் சந்தையில் நுழைய உள்ளது.

ஓமான் வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் தலைவரான ரேதா ஜுமா அல் சலேஹ்வைச் சந்தித்த ஓமான் சுல்தானேற்றுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் மற்றும் சர்வதேச வர்த்தக ஊக்குவிப்புக்கான ஹேமாஸ் சிரேஷ்ட முகாமையாளர் கவீந்திர கசுன் சிகேரா, ஹேமாஸ் வர்த்தக நாமத்தை அறிமுகப்படுத்தி வைத்தனர். ஹேமாஸ் தயாரிப்புக்களை ஓமான் சந்தையில் வழங்குவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் மற்றும் சுல்தானேற்றில் ஹேமாஸ் உற்பத்தி நிலையத்தை நிறுவுவதற்கான எதிர்கால நோக்கம் குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர். வணிக இணைப்புகளை நிறுவுவதற்காக, ஹேமாஸின் … Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி விரையும் அதிசொகுசு வாகனங்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி  அதிசொகுசு கார்கள் சில விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க  மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என தெரிவித்து கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.  இந்தநிலையில் கொழும்பின் நிலை தீவிரமடைந்துள்ளது.  விமான நிலையம் நோக்கி விரைந்த கார்கள்  ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகங்களுக்குள் பொதுமக்கள் உள்நுழைந்துள்ளனர்.  இந்த நிலையில் போராட்டங்கள் ஆரம்பித்து ஒரு சில மணி நேரத்தில்  … Read more

அடுத்த வாரமும் பாடசாவைகளுக்கு விடுமுறை

எரிபொருள் பிரச்சினை காரணமாக மூடப்பட்ட நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் ஜூலை 18 ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சு இன்று (09) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது

தடைகளை மீறி ஜனாதிபதியின் இல்லத்தின் பிரதான நுழைவாயிலை அடைந்த ஆர்ப்பாட்டகாரர்கள்

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் கொழும்பில் தீவிரமடைந்துள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் தற்போது ஜனாதிபதி இல்லைத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அந்த பகுதியில் தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், போராட்டங்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டு வருகின்றனர். எனினும் போராட்டகாரர்கள் பின்வாங்காத நிலையில், தற்போது பொலிஸ் தடைகளை மீறி ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பிரதான நுழைவாயிலை ஆர்ப்பாட்டகாரர்கள் சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

உர விநியோகம் இன்று மாலை ஆரம்பம்

40 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உரத்தைக் கொண்ட கப்பல் இன்று (09) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்திய கடன் உதவியின் கீழ் கிடைத்துள்ள இந்த உரம் ,கப்பலில் இருந்து இறக்கப்பட்ட பின்னர், கொழும்பிலுள்ள இந்திய தூதுவரினால் அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது. இலங்கையில் உள்ள ஆய்வுகூடங்களிலும் யூரியா உரம் பரிசோதிக்கப்பட்ட பின்னர் இன்று (09) மாலையில் இருந்து உரத்தை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே சுட்டு கொல்லப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் சபை இரங்கல்

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே சுட்டு கொல்லப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் சபை இரங்கல் தெரிவித்து உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரஸ், ஜப்பான் முன்னாள் பிரதமர் அபேயின் ‘பயங்கரமான கொலையால் வருத்தமடைந்ததாக’ தெரிவித்துள்ளார். .‘அவர் பலதரப்புவாதத்தின் உறுதியான பாதுகாவலராகவும், மதிப்பிற்குரிய தலைவர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவாளராகவும் நினைவுகூரப்படுவார்’ என்று குட்டெரஸ் தெரிவித்துள்ளார். ஷின்ஜோ அபே சுட்டு கொல்லப்பட்டதற்கு பிரதமர் , இங்கிலாந்து பிரதமர் , ரஷிய ஜனாதிபதி  அவுஸ்திரேலிய பிரதமர் … Read more

கொழும்பை நோக்கிய படையெடுக்கும் மக்கள் – ஆயிரக்கணக்கானவர்களுடன் வரும் ரயில்கள்

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் இன்று மாபெரும் போராட்டம் முன்னெக்கப்படுகின்றது.  இந்நிலையில்,  தமது எதிர்ப்பை வலுப்படுத்தும் வகையில் புகையிரத நிலையங்களில் இருந்து புகையிரதங்களை கொழும்புக்கு வருமாறு ரயில்வே அதிகாரிகளை வலியுறுத்தி ரயில்களை இயக்க போராட்டகாரர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்படி, காலி, மாத்தறை, கண்டி மற்றும் அவிசாவளை ஆகிய ரயில் நிலையங்களில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பை நோக்கிய வரும் ரயில்கள் காலி புகையிரத நிலையத்தில் இருந்து ‘சமுத்திர தேவி’ ரயில் ஏற்கனவே போராட்டக்காரர்களுடன் புறப்பட்டு சென்றுள்ளதாக … Read more