ஊடரங்கு உத்தரவை உடன் மீளப்பெறுங்கள் – சஜித் கோரிக்கை

பொலிஸ் ஊரடங்கு உத்தரவை அறிவிக்க பொலிஸ்மா அதிபருக்கு அதிகாரம் கிடையாது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை உடன் மீளப் பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். எந்தவொரு காவல்துறை அதிகாரிகளும் எந்தவொரு குடிமகனுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையை சட்டவிரோதமாக மீற முற்பட்டால், நீங்கள் தனிப்பட்ட முறையில் பொறுப்பாவீர்கள். அத்துடன், அரசியலமைப்பை மீறியதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார். If you fail to do so, … Read more

கொழும்பு கம்பஹா மாவட்டத்தின் பல பொலிஸ் பிரிவுகளில் இன்று இரவு 09 மணி முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தின் பல பொலிஸ் பிரிவுகளில் இன்று (08) இரவு 09 மணி முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுவதாக  பொலிஸ் மா அதிபர் சீ. டி. விக்கிரமரட்ன அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பொலிஸ் மா அதிபர்  விடுத்துள்ள அறிக்கையில், நீர்கொழும்பு பொலிஸ் பிரிவு களனி பொலிஸ் பிரிவு நுகேகொட பொலிஸ் பிரிவு கல்கிசை பொலிஸ் பிரிவு கொழும்பு (வடக்கு) பொலிஸ் பிரிவு கொழும்பு (தெற்கு) பொலிஸ் பிரிவு கொழும்பு (மத்திய) … Read more

நாளைய போராட்டம்! பேருந்துகளை வழங்குவது தொடர்பில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எடுத்துள்ள தீர்மானம்

அரசாங்கத்திற்கு எதிரப்பு தெரிவித்து நாளைய தினம் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பொதுமக்கள் இந்த போராட்டங்களில் கலந்து கொள்வதற்காக தலைநகரம் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.   பேருந்துகள் இல்லை.. இந்த நிலையில், நாளைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ள மக்களுக்கு தமது சங்கத்தின் பேருந்துகளை  வழங்கப்போவதில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், நாளைய … Read more

நாட்டின் பொருளாதாரம் குறித்து இலங்கை மத்திய வங்கி ஆளுநர்

அடுத்த சில மாதங்களில் இலங்கையின் பணவீக்கம் 70% ஆக உயரக்கூடும். நேற்று (07) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விளக்கமளிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இதனைத் தெரிவித்தார். எவ்வாறாயினும், மத்திய வங்கியினால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார ஸ்திரப்படுத்தல் நடவடிக்கைகள் காரணமாக, 2023 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து பணவீக்கம் வீழ்ச்சி அடையும் என்று  ஆளுநர் சுட்டிக்காட்டினார். இதற்கிடையில், 2022 ஜூன் மாத இறுதியில் இலங்கையின் மொத்த … Read more

மீண்டும் சூடு பிடிக்கும் கோட்டா கோ கம போராட்டக் களம்! ஒன்றுகூடியுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள்

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு காலி முகத்திடலில் இரண்டு மாத காலத்திற்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் தற்போது மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.  இதன்படி, தற்சமயம் பல்லாயிரக்கணக்கான மக்கள் காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கம போராட்டக் களத்தில் குழுமியிருப்பதாக தெரியவருகின்றது.  மீண்டும் சூடு பிடிக்கும் போராட்டக் களம்  தொடர்ந்து அதிகரிக்கும் பொருளாதார நெருக்கடி, வாழ்க்கைச் சுமை காரணமாக இலங்கை மக்கள் கடும் அதிருப்தி நிலையை அடைந்துள்ளனர். இந்த நிலையில் மக்கள் கடும் கொதிநிலையை அடைந்துள்ள … Read more

இம்முறை சிறு போகத்திற்கு பயன்படுத்தப்பட்ட வயல் காணி

இம்முறை சிறுபோகத்தில் பயிரிடப்பட்ட நெல் வயற்காணி ஐந்து இலட்சத்து ஐயாயிரம் ஹெக்டேயரைத் தாண்டியுள்ளதாக விவசாய அமைச்சின் அதிகாரிகள் நேற்று (07) அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ,விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவைச் சந்தித்து உரம் விநியோகம் தொடர்பில் கலந்துரையாடியதுடன், அந்தக் கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரமித பண்டார தென்னகோன், ராஜிகா விக்கிரமசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். … Read more

பாடசாலைகளுக்கு விடுமுறை! நாளை உத்தியோகபூர்வ அறிவிப்பு

நாட்டில் உள்ள பாடசாலைகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள விடுமுறை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.  இதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 18ஆம் திகதி முதல் பாடசாலைகளை மீளவும் ஆரம்பித்து நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.  எரிபொருள் நெருக்கடி காரணமாக  கடந்த வாரமும் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.   நாளை உத்தியோகபூர்வ அறிவிப்பு கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் ஆசிரிய தொழிற்சங்க கூட்டமைப்பிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் … Read more

போரிஸ் ஜோன்சனின் எதிர்கால திட்டம் இதுதான்… பல மில்லியன் கொட்டப்போகிறதாம்

பிரித்தானியாவின் பிரதமர் பொறுப்பில் இருந்து விலகியுள்ள போரிஸ் ஜோன்சன் இனி தமக்கு மிகவும் பிடித்தமான, எளிதாக செய்து முடிக்கக் கூடிய பணியில் ஈடுபடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மிக விரைவாக , பெரும் செல்வந்தராக மாறும் வாய்ப்புகள் அவருக்கு கைக்கூடும் என்றே கூறப்படுகிறது. 7 பிள்ளைகளுக்கு தந்தையான 58 வயது போரிஸ் ஜோன்சன், பிரதமராக தாம் பெற்றுவந்த 157,000 பவுண்டுகள் ஊதியம் என்பது மிகக்குறைவு என்றே அடிக்கடி கூறி வந்தார். அவர் பிரதமர் பதவிக்கு வரும் … Read more