பஸ் சாரதியை தாக்கிய ,கடற்படை அதிகாரியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

காலி – தெவட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற பஸ் சாரதி ஒருவரை ,தாக்கிய குற்றச்சாட்டின் பேரில், கடற்படை அதிகாரி ஒருவரை கைது செய்யுமாறு காலி நீதவான் நீதிமன்றம் நேற்று(07) உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பான விடயம் காலி நீதவான் பவித்ரா சஞ்சீவனி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த 3 ஆம் திகதி காலி – கலஹே பிரதேசத்தில் வசிக்கும் தனியார் பஸ் சாரதி ஒருவர் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது இதுகுறித்து, சம்பந்தப்பட்ட சாரதி, காலி, துறைமுக … Read more

நாளைய போராட்டத்திற்கு வலுக்கும் ஆதரவு! தனியார் மருத்துவர்களின் தீர்மானத்தால் முடங்கும் சேவை

இன்றும் நாளையும் நாட்டில் பல போராட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புக்கள்  இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தின் மேற்கொள்ள நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில்,  கலவரங்கள் ஏற்படலாம் என்று கருதி கொழும்பு நகர் உள்ளிட்ட தலைநகரின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  போராட்டத்திற்கு வலுக்கும் ஆதரவு இந்தநிலையில்  நாளைய தினம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் அமைதிப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை தனியார் மருத்துவர்கள் சிகிச்சையில் ஈடுபடுவதை தவிர்க்க மருத்துவ நிபுணர்கள் … Read more

கொழும்பு பாதுகாப்பு கூட்டுக்குழுமம்

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மன்றத்தினால் 2022 ஜூலை 07 ஆம் திகதி கொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான 6வது மாநாட்டினை, கொழும்பு பாதுகாப்பு குழுமத்தின் உறுப்பு நாடுகளான இந்தியா, மாலைதீவு, மொரீஷியஸ் மற்றும் இலங்கை ஆகியவை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளன. இதேவேளை பங்களாதேஷ் மற்றும் சிஷெல்ஸ் ஆகியவை இம்மாநாட்டில் அவதானிப்பாளர்களாக கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   2.          இந்திய குடியரசின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஶ்ரீ விக்ரம் மிஷ்ரி,  மாலைதீவுகள் குடியரசின் வெளியுறவுச் செயலாளர் திரு. … Read more

யாழ் மக்களுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பான அறிவித்தல்

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் எரிபொருள் பெறுவதற்கான கோரிக்கையை முன் வைத்த பொதுமக்களின் ஒரு பகுதியினருக்கு முன்னுரிமை அடிப்படையில் ,அவர்களுடைய கோரிக்கை கடிதத்தில் குறிக்கப்பட்ட தொலைபேசி இலக்கங்களுக்கு இன்று (08) காலை மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர்களுக்குரிய எரிபொருள் டோக்கன் வழங்கப்பட்டு யாழ்ப்பாணம் ஐ ஓ சி எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் விநியோகிப்பதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். அத்தியாசிய சேவையில் ஈடுபடுவோரில் ஒரு பகுதியினருக்கான பெற்றோல் விநியோகத்தினை … Read more

நாளை வெடிக்கும் பல போராட்டங்கள்! இலங்கை மக்களுக்கு அமெரிக்கா கூறும் செய்தி

இலங்கையில் இன்றும் நாளையும் போராட்டங்கள் மேற்கொள்ள பல்வேறு தரப்பினரால் திட்டமிடப்பட்டுள்ளது.   இதன் காரணமாக கொழும்பின் முக்கிய பகுதிகளில் பலவற்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.   வன்முறை தீர்வல்ல! வலியுறுத்தும் தூதுவர் இந்த நிலையில்,  இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் நாளைய போராட்டங்கள் தொடர்பில் தமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளார்.  இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். குறித்த பதிவில், அமைதியான முறையில் போராட்டங்களை நடத்துமாறு  தூதுவர் ஜூலி சுங் இலங்கை மக்களை வலியுறுத்தியுள்ளார். “வன்முறை தீர்வல்ல” … Read more

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு தற்காலிகமாக ஊழியர்களை இணைத்துக்கொள்ளல்

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களை தற்காலிகமாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு நியமிக்க பொது நிர்வாக அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக பொது நிர்வாகம் உள்நாட்டலுவல்கள் ,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:  

நாளை எந்த பேருந்துகளையும் இயக்கப் போவதில்லை! வெளியானது அறிவிப்பு

நாளைய தினம் எந்த பேருந்துகளையும் இயக்கப் போவதில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவிக்கையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதன் காரணத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். ஊடகங்களுக்கு இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். எரிபொருள் பாவனை அதிகரிப்பு அத்துடன், பொலிஸார் வீதியை மூடியதன் விளைவாக மாற்று வழிகளைப் பயன்படுத்தும் போது எரிபொருள் பாவனை அதிகரித்துள்ளது. நாளைய தினம் பேருந்துகளை … Read more

கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவருடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சந்திப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஸ் சாய்பியை 2022 ஜூலை 06 ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். இக்கலந்துரையாடலின் போது, ஏனைய விடயங்களுக்கிடையில், தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பான அபிவிருத்திகள், 2012ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் ஒழுங்குமுறை இல. 1 இன் கீழ் தடைசெய்யப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் பட்டியலை மீளாய்வு செய்தல், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் … Read more

இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகளை அனைத்து நேபாள பிக்குகள் சங்கத்தின் கீழான 'இலங்கைக்கான கரங்கள்' நன்கொடை

அனைத்து நேபாள பிக்குகள் சங்கம் மற்றும் அனைத்து நேபாள பிக்குகள் சங்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ‘இலங்கைக்கான கரங்கள்’ குழு, திட்டத்தை ஒருங்கிணைப்பதற்காக நேபாள ரூபாய் 25 லட்சம் பெறுமதியிலான அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் நன்கொடையை 2022 ஜூலை 04ஆந் திகதி இலங்கைத் தூதரகத்திடம் கையளித்தது. இந்தக் கையளிக்கும் நிகழ்வில் நேபாளத்தின் பிரதம சங்கநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய போதிசேன மகா தேரர் மற்றும் அனைத்து நேபாள பிக்கு சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் துறவிகள், அதன் தலைவர் வணக்கத்திற்குரிய தம்ம சோபன … Read more