வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கான தகவல்! இலங்கையில் வங்கிகளுக்கு மத்திய வங்கியின் உத்தரவு

இலங்கையிலுள்ள வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு சலுகை வழங்கப்படுவது தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பான முக்கிய உத்தரவொன்று இலங்கை மத்திய வங்கியால் அனைத்து வங்கிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்படவுள்ள சலுகைகள் அதன்படி பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வங்கிக் கடன்களை செலுத்த முடியாதுள்ள வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. கொழும்பிலுள்ள மத்திய வங்கி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் … Read more

பெற்றோல் , டீசலை அண்ணளவாக 250 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்

தரவுகளை ஆராயும்போது பெற்றோல் மற்றும் டீசலை ஏறத்தாழ 250 ரூபா விலைக்கு இலங்கைக்குள் விற்பனை செய்ய முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக தெரிவித்தார். இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் 2018, 2019 வருடங்களக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் பேராசிரியர் கௌரவ சரித ஹேரத் தலைமையில் நேற்று முன்தினம் (06) கூடியபோதே அவர் … Read more

விமான சேவைகள் அமைச்சுக்கும் தனியார் நிறுவனமொன்றுக்கும் இடையில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தவும்.- ஜனாதிபதியின் உத்தரவு…

விமான சேவைகள் அமைச்சு தனியார் நிறுவனம் ஒன்றுடன் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர்  (05) பாராளுமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உடனடியாக முறையான விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் உத்தரவிட்டுள்ளார். விசாரணைகள் முடியும் வரை ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் பேரில் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பதவியில் இருந்து தற்காலிகமாக விலகுவதற்கு நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார். காமினி செனரத்ஜனாதிபதியின் செயலாளர்.ஜனாதிபதி ஊடகப் பிரிவு06.07.2022

முற்றுகையிடப்படவுள்ள கொழும்பு! நாட்டை முடக்குவது தொடர்பில் வெளியான தகவல்

ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக நாளைய தினம் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அந்த போராட்டங்கள் மோசமடையுமாக இருந்தால் நாட்டை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை கொழும்பில் இன்றும், நாளையும் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதால் முக்கிய இடங்களின் பாதகாப்பை உறுதிப்படுத்த விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக இன்றும், நாளையும் கொழும்பை முற்றுகையிட்டு பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதால் பல்கலைக்கழக மாணவர்கள், எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புகள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் … Read more

தென்னாபிரிக்காவின் பல துறை வர்த்தகக் கண்காட்சி 2022 இல் இலங்கை உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்பு

2022 ஜூன் 19 முதல் 21 வரை தென்னாபிரிக்காவின் ஜொஹான்னஸ்பேர்க்கில் உள்ள கல்லகர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற தென்னாபிரிக்க பல்துறை வர்த்தகக் கண்காட்சியில் இரண்டு முன்னணி இலங்கை உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்றன. கடந்த காலங்களில் 27 ஆண்டுகள் நடைபெற்றுள்ள தென்னாபிரிக்க பல்துறை வர்த்தகக் கண்காட்சி, உள்ளூர் மற்றும் சர்வதேச இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் ஆபிரிக்கப் பிராந்தியத்திற்குள் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் வர்த்தக வாய்ப்புகளைப் பயன்படுத்தி, சர்வதேச மற்றும் உள்ளூர் வர்த்தக உறவுகளை எளிதாக்கும் அதே நேரத்தில் … Read more

'கோல்டன் பரடைஸ் விசா திட்டம் , இலங்கையில் உள்ள ஏனைய விசா வசதிகள்' குறித்த ஊக்குவிப்பு நிகழ்வு தெஹ்ரானில் நடைபெற்றது

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம், இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்துடன் இணைந்து, 2022 ஜூன் 27 ஆந் திகதி அன்று சான்சரி வளாகத்தில் ‘இலங்கையின் கோல்டன் பரடைஸ் விசா திட்டம் மற்றும் ஏனைய விசா வசதிகள்’ என்ற ஊக்குவிப்பு நிகழ்வை ஏற்பாடு செய்தது. வர்த்தக சபையின் பிரதிநிதிகள், முக்கிய முதலீட்டாளர்கள், முக்கிய வர்த்தகர்கள், முன்னணி பயண முகவர்கள் மற்றும் சுற்றுலா நடத்துநர்கள், விமானப் பிரதிநிதிகள், ஊடகப் பணியாளர்கள் மற்றும் ஏனைய அழைப்பாளர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட … Read more

காய்ச்சல் ஏற்பட்டுள்ளவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்

தற்போது வேகமாகப் பரவி வரும் இன்புளுவன்சா வைரஸ் தொடர்பில் கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கடுமையான பாதிப்பு அதன்படி கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், குழந்தை பிரசவித்த தாய்மார்களுக்கும் மற்றும் குழந்தைகளுக்கும் இந்த வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை மகப்பேற்று மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் சனத் லெனாரோல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வைரஸ் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். அவசர அறிவுறுத்தல் அத்துடன் கர்ப்பிணித் தாய்மார்கள் … Read more

அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான மக்களின் உரிமையை மதிக்கின்றோம் 

அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான மக்களின் உரிமையை பொலிசார் மதிக்கின்றனர். அதேவேளை , பொது மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உரிமைகளை சட்ட கட்டமைப்பிற்குள் பயன்படுத்துமாறும் பொது மக்களின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை மதிப்பதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். சட்ட கட்டமைப்பிற்குள் மக்கள் தமது உரிமைகளை … Read more

எரிவாயு நெருக்கடிக்கு பசிலும், ஜனாதிபதியுமே பொறுப்பு – புபுது ஜாகொட குற்றச்சாட்டு

போதிய டொலர்கள் கிடைக்காத காரணத்தினால் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்ட போதிலும், பசில் ராஜபக்ஷ நிதியமைச்சராக இருந்து எடுத்த முடிவினால் நாட்டில் எரிவாயு நெருக்கடி ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட இதனை தெரிவித்துள்ளார். எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட பல நெருக்கடிகளால் நாட்டு மக்கள் அவதியுறுவதாகவும், அதிகாரிகளின் சீரற்ற தீர்மானங்களாலேயே எரிவாயு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இடைநிறுத்தப்பட்ட ஒப்பந்தம் லிட்ரோ நிறுவனம் … Read more