ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவிப்பு

ரக்னா பாதுகாப்பு லங்கா லிமிடெட் (RALL) மற்றும் இரண்டு நிறுவனங்களை முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரும் அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச அண்மையில் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார். இதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டார். அத்துடன், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராகவும் அவர் நியமிக்கப்பட்டார். முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட நிறுவனங்கள் இந்நிலையில், … Read more

250 ரூபாவிற்கு எரிபொருளை விற்பனை செய்ய முடியும் – கோப் கூட்டத்தில் வெளியிட்டப்பட்ட தகவல்

தற்போதைய நிலையில், இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசலை 250 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பொது நிறுவனங்களுக்கான குழு (கோப்) கூட்டத்தில், பெட்ரோல் மற்றும் டீசலை நுகர்வோருக்கு தற்போதைய விலையை விட 200 ரூபாய் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, பெட்ரோல், டீசல் விலையை தோராயமாக 250 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என அவர் கூறியுள்ளார். 280 … Read more

12ம் திகதிக்கு பின்னர் கோட்டாபய ராஜபக்ச ஆட்சியை இழக்க நேரிடும் – பிரபல ஜோதிடர் கணிப்பு

எதிர்வரும் 12ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியை இழக்க நேரிடும் என பிரபல ஜோதிடர் ஜோதிர்வேதி கே.ஏ.யு. சரச்சந்திர தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை ஜூலை 09ஆம் திகதி மற்றும் அன்றைய தினத்துடன் தொடர்புடைய சில நாட்களில் மிகவும் தீவிரமடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜுலை 9ம் திகதி உட்பட ஒரு சில நாட்களுக்குள் … Read more

பதவி விலகினார் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன்

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் பழமைவாத கொன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். எனினும் புதிய பிரதமர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை  பிரதமர் பதவியில் நீடிக்கவுள்ளார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் அவர் விசேட உரை ஒன்றை நிகழ்த்திய பின் இவ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  கட்சி தலைமையில் இருந்து விலகும் அவர் இலையுதிர் காலம் வரை பிரதமராக நீடிப்பார் என்று பிபிசி தெரிவிக்கிறது. இந்த கோடையில் கொன்சர்வேடிவ் தலைமைப் போட்டி நடைபெறும்.மேலும் அக்டோபரில் கட்சி மாநாட்டில் புதிய … Read more

இலங்கையை மீட்க புலம்பெயர் தமிழர்களும் டொலர்களுமே தேவை! வெளியிடப்பட்டுள்ள தகவல்

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளும் டொலர்களுமே அவசியம் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். அவர் இன்று(7) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கைத்தீவில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார வீழ்ச்சியை மீள கட்டியமைக்க உதவும் நாடுகள் டொலர்களையோ அல்லது பொருள் உதவிகளையோ அல்லது நன்கொடைகளையோ வழங்கி நிரந்தரமாக நிமிர்ந்து நிற்க வைத்துவிடலாம் என்று நினைக்கின்றது. நாட்டின் நிலை அது தப்பு கணக்காகிவிடும் இவை … Read more

இன்று முதல் ரயில் சேவை வழமை போன்று

ஒரு சில ரயில்வே தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்த வேலை நிறுத்தத்தை இடைநிறுத்தியுள்ளன. போக்குவரத்து அமைச்சர் மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் தலைமையில், ரயில்வே பொது முகாமையாளர் உட்பட புகையிரத உத்தியோகத்தர்கள் மற்றும் தொழிற் சங்கங்கள் பலரின் பங்குபற்றலுடன் சுமார் 05 மணித்தியாலங்கள் இதுதொடர்பான பேச்சுவார்த்தை  இடம்பெற்றுள்ளது. புகையிரத திணைக்கள ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான அவசர வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்வதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் உறுதியளித்துள்ளார். அதன்படி இன்று முதல் ரயில் சேவைfs; வழமை போன்று இடம்பெறும் என ரயில்வே … Read more

பொதுமக்களுக்கு பொலிஸ் மா அதிபர் வழங்கும் அறிவுறுத்தல்

அமைதியான முறையில் ஒன்று கூடும் மக்களின் உரிமையை பொலிசார் மதிக்கின்ற போதிலும், அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து வன்முறையில் ஈடுபடும் மக்களுக்காக பொறுமையாக காத்திருக்க முடியாது என பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன வலியுறுத்தியுள்ளார். எனவே அனைவரும் தமது உரிமைகளை சட்ட கட்டமைப்பிற்குள் பயன்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பொறுப்புடன் செயற்படுங்கள்! சேதம் விளைவிக்காதீர் அடிப்படை உரிமைகளை அனுபவிக்கையில், அரச மற்றும் தனியார் சொத்துக்களுக்கும், … Read more