விமான சேவைகள் அமைச்சுக்கும் தனியார் நிறுவனமொன்றுக்கும் இடையில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தவும்…ஜனாதிபதியின் உத்தரவு

விமான சேவைகள் அமைச்சு தனியார் நிறுவனம் ஒன்றுடன் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் நேற்று முன்தினம் (05) பாராளுமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உடனடியாக முறையான விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் உத்தரவிட்டுள்ளார். விசாரணைகள் முடியும் வரை ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் பேரில் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பதவியில் இருந்து தற்காலிகமாக விலகுவதற்கு  நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார். காமினி செனரத் ஜனாதிபதியின் செயலாளர் … Read more

இலங்கையை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்

நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இது தொடர்பான அறிவித்த்லை வெளியிட்டுள்ளது. கடுமையாகும் நெருக்கடி நிலை தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இவ்வாறு வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு காணப்படுவதாக  குறிப்பிடப்படுகின்றது.  வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் சுகாதார சேவைக்கு கடுமையான அழுத்தங்கள் ஏற்படும் என சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.   முடங்கும் நிலையில் வைத்தியத் துறை … Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்:கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு ,விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 51 பேரையும் தொடர்ந்தும் யூலை 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டுள்ளார். மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இதுதொடர்பான வழக்கு 5 ஆம்திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 04 கைதிகள் மாத்திரமே முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் 51 பேரும் எதிர்வரும் யூலை 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தினால் … Read more

10,000 அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவப் பொருட்களை குவைத் மனிதாபிமான நட்புறவுச் சங்கம் நன்கொடை

உயிர்காக்கும் மருத்துவப் பொருட்களை அரசாங்கம் பேணுவதற்கு உதவுவதற்காக, குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் வேண்டுகோளின் பேரில், குவைத் மனிதாபிமான மற்றும் நட்புறவுச் சங்கம் 10,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அவசர மருத்துவப் பொருட்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. குவைத் மனிதாபிமான மற்றும் நட்புறவுச் சங்கத்தின் தலைவர் அஹமட் அப்துல்லா அல்சரஃப் உடனான சந்திப்பின் போது, குவைத் நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் யு.எல். மொஹமட் ஜௌஹர் அவர்களின் தாராளமான பங்களிப்புக்கு இலங்கை மக்களின் சார்பாக ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார். மருத்துவப் … Read more

நாளை மற்றும் நாளை மறுதினம் நிலைமை மாறலாம்! கொழும்பில் குவிக்கப்படும் அதிரடிப்படையினர் – பாதுகாப்பு தீவிரம்

நாளை மற்றும் நாளை மறுதினங்களில் கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது.  நாளை மற்றும்  நாளை மறுதினம் கொழும்பில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால்  பதற்ற நிலை மற்றும் அவசர நிலை ஏற்படும் என கருதி கொழும்பின் முக்கிய பல இடங்களில்  இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணி நாளை நடத்தப்படவுள்ளது. பாரிய ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள நடவடிக்கை மேலும், நாளை மறுதினம் (09) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள பல அமைப்புக்கள் நடவடிக்கை … Read more

இலங்கையில் இருந்து 2105 பேர், வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக தென்கொரியாவுக்கு…

இலங்கை அரசாங்கத்திற்கும் தென் கொரிய அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, இலங்கை தொழிலாளர்களுக்கு தென் கொரியாவில் வேலை வழங்கும் திட்டத்தின் கீழ், 2022 ஜனவரி மாதம் முதல் இதுவரையிலும் 2105 பேர் தென்கொரியாவுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் (1611) கொரிய மொழிப் பரீட்சையில் தேர்ச்சி பெற்று சென்றுள்ளனர்.  மேலும், கொரியாவில் 04 வருடங்களும் 10 மாதங்களும் தொடர்ச்சியாகப் பணிபுரிந்து மீண்டும் இலங்கைக்கு வந்து, முன்னர் பணிபுரிந்த நிறுவனத்தில் சேவை … Read more

ஒலுவில் துறைமுகத்தினை வினைத்திறனாக மிக்கதாக மாற்றுவதே எதிர்பார்ப்பு – கடற்றொழில் அமைச்சர்

பிரதேச கடற்றொழிலாளர்களின் பங்களிப்புடன், தேவையானளவு தனியார் முதலீடுகளை பயன்படுத்தி ஒலுவில் துறைமுகத்தினை வினைத்திறனாக மாற்றுவதே தன்னுடைய எதிர்பார்ப்பு என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நேற்று (06) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கடுமையான முயற்சிகளை வரவேற்றுள்ள ஒலுவில் பிரதேச பலநாள் ஆழ்கடல் மீன்பிடிக் கலன்களின் உரிமையாளர்கள் ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை விரைவுபடுத்துவதற்கான … Read more

வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையின் அறிவிப்பு! நாட்டின் நிலைமை தொடர்பில் தகவல்

உக்ரைனில் இடம்பெறுகின்ற யுத்தச் செய்திகளை காட்டிலும் இலங்கையின் செய்திகள் இன்று முன்னிலை வகிப்பதாக வோசிங்டன் போஸ்ட் தெரிவித்திருக்கிறது. உக்ரைன் போர் இன்னும் சர்வதேச தரப்புகளில் ஆதிக்கம் செலுத்தினாலும் போர்க்களத்திலிருந்து தூரத்தில் உள்ள இலங்கையில் நெருக்கடி நிலை இன்றைய முக்கிய தலைப்பாக மாறியிருப்பதாக வோசிங்டன் போஸ்ட் குறிப்பிட்டிருக்கிறது. பல மாதங்களாக இலங்கை மரணச்சூழலில் சிக்குண்டுள்ளது. அத்துடன் கடன் பளு, தொற்று நோய்களின் அதிகரிப்பு என்பவற்றுடன் உணவு, எரிபொருள், சமையல் எரிவாயு ஆகியவற்றிலும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உணவு பண வீக்கம் … Read more

ரஷ்ய ஜனாதிபதியுடன் ,ஜனாதிபதி ஷ தொலைபேசியில் உரையாடல்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தொலைபேசியில் உரையாடியதாகவும் .இந்த உரையாடல் மிகவும் பயனுள்ளதாகவும் அமைந்ததாக ஜனாதிபதி தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்;டுள்ளார். கடந்த கால சவால்களை சமாளிக்க ரஷ்ய அரசாங்கம் வழங்கிய அனைத்து ஒத்தழைப்பிற்கும்; ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்தார். தற்போதைய பொருளாதார சவால்களை வெற்றிக்கொள்வதற்கும் நாட்டிற்கு எரிபொருளை இறக்குமதி செய்ய கடன் உதவிக் கோரியதாக ஜனாதிபதி தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.