இலங்கையில் மோட்டார் வாகன காட்சியறைகளுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக கார் விற்பனை நிலையங்கள் சைக்கிள் விற்பனை நிலையங்களாக மாறியுள்ளன. அளுத்கம பிரதேசத்தில் உள்ள பிரபல கார் விற்பனை நிலையத்தில் கார் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இடங்களில் தற்போது சைக்கிள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதனை அவதானிக்க முடிந்துள்ளது. சைக்கிள் விற்பனை ஐம்பதாயிரம் முதல் எண்பதாயிரம் ரூபாய் வரை விலைபோகும் சைக்கிள்களின் விலையை விசாரிக்க இளைஞர்கள் தினமும் வந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. கார் விற்பனை செய்யும் இடத்தில் கோடி ரூபா பெறுமதியான வாகனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆனால் பல … Read more

பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் கற்றல்

மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட காங்கேயனோடை பகுதி பாலர் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் மாணவர்களுக்கான கற்பித்தல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (05) காங்கேயனோடை அல் அக்ஸா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் வின் தனிப்பட நிதியிலிருந்து காங்கேயனோடை பகுதி மற்றும் அதனை அண்டிய 4 பாலர் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் 4 பாடசாலைக்கான கற்பித்தல் உபகரணங்களும் இதன்போது வழங்கப்பட்டன. மலர்மாலை அணிவிக்கப்பட்டு பிரதம … Read more

கொழும்பிலுள்ள ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளருடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சந்திப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹன்னா சிங்கர்-ஹம்டியை 2022 ஜூலை 01ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். இக்கலந்துரையாடலின் போது அமைச்சர் பீரிஸ் நாட்டின் தற்போதைய நிலைமை, குறிப்பாக எரிபொருள், உணவு மற்றும் மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடு தொடர்பில் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கு விளக்கமளித்தார். இருதரப்பு மற்றும் பலதரப்பு நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்படும் மனிதாபிமான உதவிகளுக்கு அவர் ஆழ்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் … Read more

மக்கள் பொலிஸாரை தாக்க நேரிடும் – முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியுடன் பாரிய குற்ற அலைகள் உருவாகியுள்ளதாக முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையில் இத்தகைய நெருக்கடியை கையாள போதுமான பொலிஸ் அதிகாரிகள் இருந்தாலும், உயரடுக்கு பாதுகாப்பு கடமைகளுக்காக பலர் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளனர். தோற்கடிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் … Read more

தற்போதைய நெருக்கடியை சமாளிக்க நாங்கள் தயார் – விமல் வீரவன்ச அறிவிப்பு

எரிபொருள், எரிவாயு மற்றும் உர நெருக்கடிகளை இன்னும் சில வாரங்களில் தீர்க்க சுயேச்சை எம்.பி.க்கள் குழு தயாராக இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அரசாங்கம் சரியான கொள்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும், அதற்கான பிரேரணைகளை முன்வைக்க சுயேச்சை எம்பிக்கள் குழு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காக தமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அண்மைய நாட்களில் பல மாநிலங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடியதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். … Read more

எரிபொருள் வரிசையில் உயிருக்கு போராடிய நபரை காப்பாற்றிய மக்கள் (Video)

இலங்கையில் எரிபொருளுக்கான நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வரிசையில் காத்திருந்த நபர் இன்று உயிருக்கு போராடியுள்ளார். முழுமையாக மூச்சு பேச்சின்றி கிடந்த நபரை அவதானித்த அங்கிருந்த மக்கள் அவருக்கு அவருக்கு உடனடி முதலுதவி வழங்கி காப்பாற்றியுள்ளனர். இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. Source link

அடுத்த ஆண்டு மிகவும் கடினமாக இருக்கும் – வெளிப்படையாக பிரதமர் ரணில் அறிவிப்பு

அரசியல் சீர்திருத்தங்களுக்கு இளம் செயற்பாட்டாளர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு அவர்கள் மிகவும் திறந்த நிலையில் இருக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை ஒரு குறிப்பிட்ட ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வர இன்னும் ஒன்றரை வருடங்கள் ஆகும் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தாமல் மீளமைக்க முடியாது கேள்வி – பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப நீங்கள் என்ன நடவடிக்கைகளை எடுத்து வருகின்றீர்கள்? அவை … Read more

பரீட்சை நடைபெறும் திகதி: கல்வி அமைச்சர் அறிவிப்பு

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். அத்துடன் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் பெப்ரவரி – மார்ச் மாதங்களில் இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சர், பாராளுமன்றத்தில் … Read more

வெல்லவாயில் எரிபொருள் நிரப்பு நிலையம் மீது தாக்குதல்:13 பேர் கைது

வெல்லவாயவில் எரிபொருள் நிரப்பு நிலையம் மீது தாக்குதல்: சம்பவம் தொடர்பில் 13 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 18 முதல் 45 வயதுக்கு இடைப்பட்ட நபர்கள், எரிபொருள் தீர்ந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்ட பின்னர், போத்தல்கள் மற்றும் கற்களினால் நிரப்பு நிலையத்தைத் தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலைய சைன்போர்டுக்கு சேதம் ஏற்பட்டதில், சம்பவ இடத்தில் இருந்த பொலிஸ் ஒருவர் காயமடைந்த நிலையில், தொடர்ந்து 20 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்யதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.