“மாடலிங்” ஆக தன்னை அறிமுகப்படுத்தி முகநூலின் ஊடாக பாடசாலை மாணவிகளை ஏமாற்றிய இராணுவ வீரர்

“மாடலிங்” ஆக தன்னை அறிமுகப்படுத்தி முகநூலின் ஊடாக பாடசாலை மாணவிகளை ஏமாற்றிய இராணுவ வீரர் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று முன் தினம் (04) கைது செய்யப்பட்டுள்ளார். நிர்வாண புகைப்படங்களை எடுத்து அவற்றை வெளியிடுவதாக கூறி மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கையில் இவர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் இராணுவ முகாமின் உதைபந்தாட்ட அணியில் அங்கம் வகிக்கும் இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு  கைது செய்யப்ட்டுள்ளார். இந்த இராணுவ வீரர் … Read more

இந்தியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயன்றவர்கள்

இந்தியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த குழுவொன்றை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று (5) இரவு மன்னார் கடற்பரப்பில் வைத்து எட்டு பேர் கொண்ட குழுவை கைது செய்துள்ளனர். குறித்த குழுவில் ஐந்து ஆண்களும், ஒரு பெண் மற்றும் மூன்று குழந்தைகளும் அடங்குகின்றனர். இவர்கள் மன்னார், வெலிமடை மற்றும் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. குழுவினர் மேலதிக சட்ட விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹிருணிக்கா குழுவினர் பிணையில் விடுதலை

ஜனாதிபதி மாளிகை முன்பு போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட ஹிருணிகா குழுவினர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஹிருணிகா பிரேமச்சந்திர குழுவினர் கைது செய்யப்பட்டதும் சட்டத்தரணிகள் சங்கம் உடனடியாக அவருக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்க முன்வந்தது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் சட்டத்தரணிகளுடன் நேரடியாக பொலிஸ் நிலையத்துக்கு சென்று தேவையான சட்ட உதவிகளை மேற்கொண்டனர். பிணையில் விடுதலை இந்நிலையில் ஹிருணிகா குழுவினர் சற்று முன்னர் … Read more

மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கும்! பிரதமர் ரணில் அறிவிப்பு

எதிர்காலத்தில் மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தெரிவித்துள்ளார்.  இன்றைய  நாடாளுமன்ற அமர்வின்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  எரிபொருளை கொண்டு வர நடவடிக்கை இதேவேளை, எதிர்வரும் 15ஆம் திகதி பெட்ரோல்  கப்பலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தேவையான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு குறித்து அதிகாரிகள் கூறுவதை பொருட்படுத்தாது, எரிபொருள் பிரச்சினையால் மக்கள் இன்னமும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், ஐ.ஓ.சி. நிறுவனத்துக்கு … Read more

முக்கிய அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர்: ஜனாதிபதி அதிரடி உத்தரவு

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து ஆகிய அமைச்சர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு  தெரிவித்துள்ளது. பதவி விலகல் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து பாரபட்சமற்ற மற்றும் சுதந்திரமான விசாரணை முடியும் வரை அமைச்சர் பதவியில் இருந்து தற்காலிகமாக … Read more

இலங்கைக்கு பெரும் செக் வைத்த இந்தியா

இலங்கைக்கு மற்றுமொரு கடனை வழங்குவதில் இந்தியா தயக்கம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு எரிபொருளை வழங்குவதற்காக இந்தியா முன்கூட்டியே பணத்தை பெற்றுகொள்ள எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமகாலத்தில் இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான கட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் கடனில் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்குவதை இந்தியா நிறுத்தியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் உணவு, மருந்துகள் மற்றும் எரிபொருளுக்காக 3.5 பில்லியன் டொலர் கடன் எல்லைகளை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்நிலையில் மேலும் … Read more

தமது நாட்டு பிரஜைகளை இலங்கைக்கு செல்ல வேண்டாம் என அறிவித்த மற்றொரு நாடு

அத்தியாவசிய காரணங்கள் இன்றி இலங்கைக்கு செல்வதைத் தவிர்க்குமாறு நியூஸிலாந்து தனது நாட்டுப் பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.   இதற்கு முன்னர் பிரித்தானியாவும் தனது நாட்டுப் பிரஜைகளுக்கு, அத்தியாவசிய காரணங்கள் இன்றி இலங்கைக்கு செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியிருந்தது.  இலங்கையை ஆக்கிரமித்துள்ள நெருக்கடி நிலை இலங்கையில் மருந்து, எரிவாயு, எரிபொருள், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும்  தமது பிரஜைகளுக்கு நியூஸிலாந்து சுட்டிக்காட்டியுள்ளது.   இதுதவிர இலங்கையில் மின்வெட்டு, போராட்டம், திடீர் சாலை மறியல், போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் நினைவு குறிப்பிட்டுள்ளனர். … Read more

இலங்கையில் நலிவடைந்து வரும் வங்கி நடவடிக்கைகள்! கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்

இலங்கையில் எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுத்து வங்கி முறையை ஒழுங்கான முறையில் பேணுவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரிக்கவில்லை என இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் உப தலைவர் தனுஷ்க குமாரசிங்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வங்கி நடவடிக்கைகள் படிப்படியாக நலிவடைந்து வருவதாக அவர் கூறியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இலங்கையிலுள்ள பல வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ள விசேட அறிவிப்பு  இதன்போது மேலும் தெரிவிக்கையில், … Read more