கட்டாய தடுப்பூசிக்கு எதிர்ப்பு -கனேடியத் தலைநகரில் அவசரகால நிலை

கனடாவின் ஒட்டாவா நகர முதல்வர் அவசரகால நிலைமையைப் பிரகடனம் செய்துள்ளார். ட்ரக் வண்டி உரிமையாளர்களின் 10 நாள் ஆர்ப்பாட்டத்தை சமாளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ட்ரக் வண்டி ஓட்டுனர்கள் தலைநகரின் பல மையப் பகுதிகளை முடக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்ததால், அது அரசின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டமாக உருவெடுத்தது. இதனால் தலைநகரில் நிலைமை மோசமானதை தொடர்ந்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, குடும்பத்துடன் ரகசிய இடத்துக்கு மாற்றப்பட்டார். … Read more

உயர்தரப் பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்பவர்கள் தொடர்பில் விசேட அறிவித்தல்

கொவிட்- 19 தொற்றினால் பிற்போடப்பட்ட கல்வி பொதுத்தராதர உயர் தரப்பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளன. கல்வி பொதுத் தராதர உயர் தரப்பரீட்சை, இன்றைய தினம் முதல், எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதி வரையில் 2,437 பரீட்சை மையங்களில் இடம்பெறுகின்றது. இந்த பரீட்சைக்கு 345,242 பரீட்சார்த்திகள் தோற்றுவதற்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களில், 279, 141 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 66, 101 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குகின்றனர். பரீட்சை விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என … Read more

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் நடைபெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர்கள் குழுக் கூட்டம்

ஆளுங்கட்சி உறுப்பினர்கள் குழுக் கூட்டம் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது தலைமையில் இன்று (07) அலரி மாளிகையில் நடைபெற்றது. அடுத்த வார பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மின் நெருக்கடிக்குத் தீர்வு காணல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களைப் பயன்படுத்துதல், ஏற்றுமதிப் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டன. எதிர்காலத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பில் அதிக … Read more

இன்று மின் துண்டிக்கப்படுமா?

மின்சாரத் தடைக்கான எந்தவொரு கோரிக்கையையும் மின்சார சபை இன்று முன்வைக்கவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.  தற்போது உற்பத்தி செய்யப்படும் மின்சார கொள்ளளவு இன்றைய நாளுக்கான மின்சார கேள்வியை பூர்த்தி செய்யக்கூடியதாக உள்ளதென ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பு விரைவில் கிடைத்தால் இன்றைய தினம் மின்வெட்டு மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தேசிய மின் தேவை கடந்த வாரம் சராசரி … Read more

கொவிட் தொற்றுக்குள்ளான உயர் தர  பரீட்சாத்திகளுக்கு விசேட அறிவிப்பு

தற்போது நடைபெறும் உயர் தர பரீட்சைக்கு தோற்றவுள்ள கொவிட் தொற்றுக்குள்ளான பரீட்சாத்திகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பரீட்சாத்திகளுக்கு விசேட அறிக்கை ஒன்றை பரீட்சை ஆணையாளர் நாயகம் விடுத்துள்ளார். இதற்கமைவாக இவ்வாறான பரீட்சாத்திகள் சுகாதார அமைச்சின் ஆலோசனைகளுக்கு அமைவாக மாவட்ட மட்டத்தில் உள்ள வைத்தியசாலை மற்றும் இடை நிலை கொவிட் சிகிச்சை நிலையங்களுக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள மத்திய நிலையங்களில் பரீட்சைக்கு தோற்ற முடியும். இந்த மத்திய நிலையங்களில் பரீட்சை எழுதுவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். தொற்றுக்குள்ளான அனைத்து … Read more

மடவளையில் மண்சரிவு! மூவர் பலி

வத்துகாமம் – மடவளை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.   மேலும், குறித்த விபத்தில் சிக்குண்ட  ஒருவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மண்மேடு சரிந்து வீடொன்றின் மேல் வீழ்ந்ததனால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.    Source link

பயிலுனர் பட்டதாரிகளுக்கு விசேட அறிவிப்பு

பயிலுனர் பட்டதாரிகளை அரச சேவை, மாகாண சேவை மற்றும்  நிறுவகங்களில் நிரந்தர சேவையில் இணைத்துக் கொள்வது தொடர்பாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இதுவரை நிரந்தர நியமனங்கள் கிடைக்கபெறாத பயிலுனர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கும் நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உரிய சேவை நிலையங்களினால் செய்யப்படும் அழைப்புக்களுக்கு இணங்க சேவை நிலையங்களுக்கு பயிலுனர்களை சமூகமளிக்குமாறு செயலாளர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். செயலாளர் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு:

யாழ். பல்கலைகழக மாணவிகள் இருவருக்கிடையில் மோதல்!

யாழ். பல்கலைகழகத்தில் இரு மாணவிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழக மாணவிகள் இருவர் தாம் வாடகைக்கு தங்கியுள்ள வீட்டில் இன்றைய தினம் மதியம் மோதிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது காயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். Source link

5,000 ரூபா கொடுப்பனவுக்கு உரித்தானவர்கள்

நிதியமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களுக்கான 5,000 ரூபா கொடுப்பனவை ஜனவரி மாதம் தொடக்கம் மாதாந்த சம்பளம் பெறும் நிரந்தர, தற்காலிக, ஒப்பந்த உத்தியோகத்தர்களுக்கும், நாளாந்த சம்பளம் பெறும் உத்தியோகத்தர்களுக்கும் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என 03/2022 அரசாங்க நிர்வாக சுட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை பின்வருமாறு: 

பரீட்சைக்கு தோற்றும் சிறை கைதிகள்

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் க.பொ.த. உயர்தரப் பரீட்சை  ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. அந்த வகையில், வெலிக்கடை சிறைச்சாலையின் கைதிகள் இருவர் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கைதிகள் இருவரும் 43 மற்றும் 46 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மெகசின் சிறைச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையத்தில் இவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  Source link