Moto G45 5G… 10,000 ரூபாயில் 50 MP கேமிராவுடன் அசத்தலான பட்ஜெட் ஸ்மார்போன்

Moto G45 5G: ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், எளிய நடுத்தர மக்களுக்கான பட்ஜெட் போன்கள் அதிக அளவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்திய சந்தையில் 10 ஆயிரத்துக்கும் குறைவான பட்ஜெட்டில் மற்றொரு புதிய 5G ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Moto G45 5G என்ற அசத்தலான போனை மொடோரோலா அறிமுகம் செய்துள்ளது. மொடோரோலாவின் இந்த போனுக்கு மூன்று ஆண்டுகளுக்கு பாதுகாப்பு புதுப்பிப்புகள் மற்றும் ஆண்ட்ராய்டு அப்டேட்டுகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  … Read more

கண்ணாடிக்கூரை கார்! எம்ஜி மோட்டர்ஸ் அறிமுகப்படுத்தும் அட்டகாசமான எலக்ட்ரிக் கார் டீஸர் வைரல்!

இந்தியாவில் செப்டம்பர் 11 அன்று அறிமுகமாவிருக்கும் MG Motor இன் Windsor EV,  ஒரு தனித்துவமான கண்ணாடி கூரை கொண்ட கார். இதுவரை இப்படிப்பட்ட காரை பலர் பார்த்திருக்கக்கூட மாட்டார்கள். சாய்ந்த பின் இருக்கைகள் மற்றும் வேகமாக சார்ஜிங் கொண்ட 50.6 kWh பேட்டரி கொண்டுள்ள இந்த புதிய கார், Tata Curvv EV மற்றும் மஹிந்திரா XUV400 உடன் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று வெளியான காரின் டீசரில், இன்ஃபினிட்டி வியூ கிளாஸ் ரூஃப் என்ற விரிவான … Read more

கூகுள் பிளே ஸ்டோரில் அதிரடி மாற்றங்கள்… செப்டெம்பர் 1ம் தேதி முதல் புதிய விதிகள்

கூகுள் ப்ளே ஸ்டோரில் விரைவில் பெரிய மாற்றம் வரப்போகிறது. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஆண்ட்ராய்டு பயனர்களை பாதிக்கப்படும் வகையில் கூகுள் பல ஆப்ஸ்களை பிளே ஸ்டோரில் இருந்து அகற்றலாம். புதிய தரக் கட்டுப்பாட்டை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிளே ஸ்டோரின் விதிகளில் பெரிய மாற்றம் கூகுள் ப்ளே ஸ்டோரில் பல தீங்கிழைக்கும் செயலிகள் பல மறைந்துள்ள நிலையில், அவற்றை முற்றிலும் நீக்க, இந்த முடிவை கூகுள் எடுத்துள்ளது. கூகுள் தனது பிளே ஸ்டோரின் … Read more

ஒப்போ ஏ3 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ ஏ3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் … Read more

புதிய வண்டிகளை திரும்பப் பெற்ற BMW! ஒன்றா இரண்டா? 7,20,000 கார்கள்! அதிர்ச்சியூட்டும் பின்னணி!

BMW Vehicles Recall 2024 Latest Update : BMW 720,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்திருப்பது கார் உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தகவல் வெளியிட்டிருக்கும் பிஎம்டபிள்யூ நிறுவனம், நீர் பம்ப் மின் இணைப்புகள் சரியாக இல்லை என்றும், கார்களில் தீ விபத்து ஏற்படும் ஆபத்து இருப்பதால் குறிப்பிட்ட சில வகைக் கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. .X1, X3 மற்றும் X5 உள்ளிட்ட பல்வேறு மாடல் கார்கள் திரும்பப் பெறப்படுகின்றன. போதுமான … Read more

வாட்ஸ்அப், டெலகிராம் பயனர்களுக்கு குட் நியூஸ்.. விரைவில் மத்திய அரசின் புதிய விதிகள் அமல்

வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற தகவல் பரிமாற்ற செயலிகளை பயன்படுத்தும் பயனர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் அளிக்கு வகையில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், புதிய தொலைத்தொடர்பு மசோதா மற்றும் டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் புதிய விதிகளை கொண்டுவர துரிதமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.  WhatsApp மற்றும் Telegram செயலிகளை பயன்படுத்தும் பயனர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், மத்திய அரசு கடந்த ஆண்டு டிசம்பர் 18, 2023 அன்று மக்களவையில் தொலைத்தொடர்பு மசோதா 2023 … Read more

AC Alert: வீட்ல விண்டோ ஏசி வைக்கறது ஒரு குத்தமா? ரூல்ஸ் ஃபாலொ பண்ணலைன்னா ஜெயில் தான்!

உங்கள் வீட்டின் ஜன்னலில் ஏசி பொருத்தப்பட்டுள்ளதா? கவனமாக இல்லை என்றால் நீங்கள் சிறைக்குச் செல்லலாம்… அதிர்ச்சியாக உள்ளதா? உண்மை தான், வீடு நமதாக இருந்தாலும் அது பிறருக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் தண்டனையை நாம் தான் அனுபவிக்க வேண்டியிருக்கும். பொதுவாக, வீட்டில் ஏசி வைப்பது, பூச்செடிகள் வைப்பது போன்றவை இயல்பாக அனைவரின் வீடுகளிலும் நடைபெறும் வழக்கமான நிகழ்வு தான். ஆனால் அது ஒருவரின் உயிரைப் பறித்தால்? டெல்லியில் கரோல் பாக் பகுதியில், சாலையில் இருந்தவர் மீது வீட்டில் இருந்து … Read more

ஆபீஸ்ல வாட்ஸ்-அப் சாட் செய்தாலும் பிரச்சனையில்ல! தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க டிப்ஸ்!

WhatsApp Web : உபயோகத்தை பொது இடத்தில், வீடு அல்லது அலுவலகத்தில் பயன்படுத்தும் போது, ​​உங்கள் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என்பது சந்தேகம் தான். உங்கள் தகவல்தொடர்பு பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் முக்கியம். இந்தக் கவலைகளை நிவர்த்தி செய்ய, Google Chrome இன் செட்டிங்க்ஸ் மூலம் தனிப்பட்ட WhatsApp சாட்டிங்குகளை எவ்வாறு மறைப்பது என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள். இது மிகவும் அவசியமான பாதுகாப்பாகும், இல்லாவிட்டால் உங்கள் தரவுகளும், ரகசியங்களும் வெட்டவெளிச்சமாகிவிடும். தற்போது பலரும் தகவல்தொடர்புக்கு வாட்ஸ்அப்பை … Read more

ஓலா மின்சார மோட்டார் சைக்கிள்! ரோட்ஸ்டர் சீரிஸில் 3 புதிய பைக்குகள் அறிமுகம்! விலை & சிறப்பம்சங்கள்!

ஓலா மின்சார மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்துகிறது ரோஸ்டர் எக்ஸ், ரோட்ஸ்டர், ரோட்ஸ்டர் ப்ரோ என ரோட்ஸ்டர் வரம்பிற்கு உட்பட்ட ஓலா எலக்ட்ரிக் பைக் போர்ட்ஃபோலியோவில் மூன்று பைக்குள் அறிமுகமாகின்றன. இந்த பைக்குகளின் டெலிவரி அடுத்த ஆண்டு நான்காம் காலாண்டில் தொடங்கும். அதில், ரோட்ஸ்டர் புரோ டெலிவரி 2026 இறுதி காலாண்டில் டெலிவரி ஆகும். மின்சார மோட்டார்சைக்கிள் பிரிவில் மூன்று மாடல்களை அறிவித்துள்ள ஓலா, ரைட்-ஹெய்லிங் சேவையை ஓலா நுகர்வோர் என மறுபெயரிட்டுள்ளது, ONDC உடன் ஒரு கூட்டாண்மையை … Read more

ஐபோன்கள் தயாரிக்க உள்ள டாடா நிறுவனம்… 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

ஐபோன் வாங்குவது என்பது பலரின் கனவாக உள்ளது. தற்போது இஎம்ஐ போன்ற வசதிகள் வந்து விட்டதால், பிரீமியம் போன்க என்பது பலருக்கு கைக்கு எட்டும் கனவாக ஆகி விட்டது என்றால் மிகை இல்லை. மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்பு கொண்ட ஐபோன் மிகவும் சிறப்பு வாய்ந்த பல அம்சங்களைக் கொண்டுள்ளது. தவிர, அதன் தோற்றம் மற்றும் வடிவமைப்பும் சிறப்பாக உள்ளது. இந்நிலையில், நாட்டின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா ஐபோனை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில … Read more