அமேசான் பிரைம் பயனர்களுக்கு நல்ல செய்தி… சந்தா அதிரடி குறைப்பு!

Amazon Prime Lite: அமேசான் நிறுவனம் அதன் லைட் உறுப்பினர்களுக்கு நல்ல செய்தியை அறிவித்துள்ளது. அதாவது அதன் அமேசான் பிரைம் லைட் சந்தா குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அமேசான் பிரைம் லைட் இந்தியாவில் 999 ரூபாயில் வழங்கப்பட்டது. தற்போது இதில் 200 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அமேசான் பிரைம் லைட் இனி 799 ரூபாய்க்கு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.   அமேசான் இந்தியா நிறுவனம் அதன் பிரைம் லைட் உறுப்பினர் திட்டத்தின் விலையைக் குறைப்பதுடன், அமேசான் பிரைம் லைட் சந்தா … Read more

கிறிஸ்துமஸில் பிடிச்சவங்களுக்கு மொபைல் கிப்ட் பண்ணுங்க… இருக்குது முரட்டு தள்ளுபடி!

Christmas 2023 Gifts: கிறிஸ்துமஸ் பண்டிகை வந்துவிட்டாலே அனைவருக்கும் ஒரு குதூகலமும் வந்துவிடும் எனலாம். கேக் சாப்பிடுவது, பள்ளி – கல்லூரி – அலுவலகங்கள் விடுமுறை ஆகியவற்றுடன் புது வருடம் பிறக்கப்போகும் மகிழ்வையும் கிறிஸ்துமஸ் சேர்த்து கொண்டு வரும். எனவேதான், கிறிஸ்துமஸ் என்ற பெயரை கேட்டாலே டக்கென மனதில் சந்தோஷம் பிறந்துவிடும்.  ஸ்மார்ட்போனை பரிசாக கொடுங்கள் சந்தோஷமான தருணங்களை பலரும் தங்களின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நெருக்கமானவர்களுடனே செலவிட விரும்புவார்கள். அத்தகைய அன்புக்குரியவர்கள் இணையும் போது நினைவுகள் … Read more

பட்ஜெட் விலையில் லாவா ஸ்டார்ம் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள்

புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா ஸ்டார்ம் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா ஸ்டார்ம் 5ஜி போன் … Read more

விலங்குகள், பறவைகளிடம் இருந்து பயிர்களை காக்க சூரிய மின்சக்தியில் இயங்கும் நவீன கருவி!

மதுரை: புயல், மழை போன்ற இயற்கைச் சீற்றங்கள் மட்டுமின்றி பறவைகள், விலங்குகள்கூட விவசாயத்துக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. விவசாயிகள் பயிர்களைப் பராமரித்து விளைபொருட்களை அறுவடை செய்து சந்தைக்குக் கொண்டுவருவது ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் தாயின் பிரசவ வலிக்கு ஈடாகப் பார்க்கப்படுகிறது. புயல், மழையால் ஏற்படும் பயிர்ச் சேதங்களுக்கு விவசாயிகளுக்கு காப்பீட்டு இழப்பீடும், அரசு வழங்கும் நிவாரணமும் கிடைக்கிறது. விலங்குகள், பறவைகளால் ஏற்படும் சேதத்துக்கு இழப்பீடுகள் கிடைப்பதில்லை. ஆனால், இயற்கை சீற்றங்களைபோல், யானை, பன்றி, ஆடு, மாடு மற்றும் … Read more

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி: இந்தியாவின் முன்னணி 5ஜி ஸ்மார்ட்போன் இப்போது ரூ.13,499 முதல்

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ14 5ஜி (Samsung Galaxy A14 5G) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 5ஜி ஸ்மார்ட்போனாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அதன் சிறந்த விலை, 5ஜி இணைப்பிற்கும் பெயர் பெற்றது. இந்த நிலையில், சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போனின் மீது ரூ.1,000 கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகை மூலம், சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + … Read more

2024ல் அறிமுகமாகும் டாப் 5 எலக்டிரிக் கார்கள் – 500 கிமீ வேகத்தில் பறக்கும்

Electric Cars In 2024: இந்தியாவில் மின்சார வாகனங்கள் சந்தை வேகமாக விரிவடைந்து வருகின்றன. இந்த வரிசையில், வரும் 12 மாதங்களில் பல புதிய எலக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. சில கார் உற்பத்தியாளர்கள் 2024 ஆம் ஆண்டில் புதிய மின்சார மாடல்களை வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சில நிறுவனங்கள் அடுத்த ஆண்டுக்கான திட்டங்களில் மின்சார கார் உற்பத்தியில் வேலை செய்கின்றன. இந்த எலெக்ட்ரிக் கார்கள் நாட்டில் வாகனங்களைத் தயாரிக்கும் பெரிய நிறுவனங்களிடமிருந்து வரும். … Read more

பட்ஜெட்டை பதம் பார்க்காத பக்கா திட்டம்… 13 ஓடிடிகள் வெறும் 202 ரூபாயில்…

Vodafone Idea Entertainment Recharge Plan: இந்திய தொலைத்தொடர்பு துறையில் மூன்றாவது பெரிய நிறுவனம் என்பது வோடபோன் ஐடியா (Vi). அதாவது, ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய பெரும் நிறுவனங்களுக்கு இடையே கடுமையான போட்டியை வோடபோன் ஐடியா மேற்கொண்டு வருகிறது. மேலும் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், போட்டி நிறுவனங்களுடன் போட்டியிடவும் வோடபோன் ஐடியா நிறுவனம் புதிய திட்டங்களை கொண்டு வருகிறது.  இந்த தொடரில், மீண்டும் வோடபோன் ஐடியா நிறுவனம் தனது ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் கீழ் புதிய ரீசார்ஜ் திட்டத்தை … Read more

பிரதமரின் இந்தி உரையை தமிழில் மொழி பெயர்த்த ‘பாஷினி’ AI @ காசி தமிழ்ச் சங்கமம்-2

புதுடெல்லி: காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் இந்தி உரையை தமிழாக்கம் செய்ய ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முயற்சிக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் வாராணசியில் 2-வது ஆண்டாக காசி தமிழ்ச் சங்கமம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதை தொடங்கி வைத்த பிரதமர் மோடியின் இந்தி உரையை தமிழில் மொழிபெயர்க்க வேண்டி, ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் முதல்முறையாக இந்த முயற்சியை மேற்கொண்டது. இதையொட்டி விழாவில் தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்களுக்கு ஹெட்போன் வசதி … Read more

48 ரூபாய் விலையில் ஒரு மாதம் வேலிடிட்டி: பிஎஸ்என்எல் ப்ரீப்பெயட் பிளான்

பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பொறுத்தவரை மிக குறைந்த விலையில் நல்ல ப்ரீப்பெய்ட் திட்டங்களை கொண்டு வருகிறது. வாடிக்கையாளர்களின் தேவையின் அடிப்படையில் கொண்டுவரப்படும் இந்த திட்டங்கள் அதிக வரவேற்பையும் பெறுகின்றன. அந்தவகையில் குறைவான தேவை மற்றும் அதிகம் மொபைல் பயன்படுத்தாதவர்களுக்கு அல்லது அவசர தேவைக்காக குறைந்த கால வேலிடிட்டி கொண்ட பிளான் தேவைப்படுபவர்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த திட்டம் மிகவும் உபயோகமாக இருக்கும். அத்துடன் இரண்டாவது சிம் கார்டாக பிஎஸ்என்எல் பயன்படுத்துபவர்களுக்கும் இந்த ப்ரீப்பெய்ட் திட்டம் உபயோகமாக இருக்கும்.  அதேநேரத்தில், … Read more

காதலியின் வாட்ஸ்அப் செய்தியை ரகசியமாக படிப்பது எப்படி?

WhatsApp widget trick: வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு அப்டேட்டுகள் வந்தாலும் காதலி மற்றும் நண்பனின் வாட்ஸ்அப் மெசேஜ்களை ரகசியமாக படிக்க முடியும். அந்த தந்திரத்தைப் பற்றி தான் இன்று நாம் இங்கே தெரிந்து கொள்ளப்போகிறோம். உங்களால் நம்ப முடியாவிட்டாலும் உண்மையில் உங்கள் நண்பர் அல்லது காதலியின் வாட்ஸ்அப் செய்திகளை நீங்கள் ரகசியமாகப் படிக்கலாம். நீங்கள் வாட்ஸ்அப் செய்தியை படித்தவுடன் அதில் காண்பிக்கும் ப்ளூ நிற இரட்டை கோடுகள், நீங்கள் அவர்கள் அனுப்பிய செய்தியை படித்துவிட்டீர்கள் என்பதை காட்டிக்கொடுத்துவிடும். … Read more