இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வெறியரா நீங்கள்… இனி ஈஸியாக வீடியோக்களை டவுண்லோட் செய்யலாம்!

How To Download Reels In Mobile: சமூக வலைதளங்களில் இப்போது வீடியோதான் மற்றவைகளை விட ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாக உள்ளது. அதிலும் ஷார்ட்ஸ் வீடியோக்களான இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் யூ-ட்யூப் ஷார்ட் ஆகியவற்றை கூறலாம். தற்போது மக்கள் யூ-ட்யூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்களில் பெரிய பெரிய வீடியோக்களை விட இந்த ரீல்ஸ், ஷார்ட்ஸ் வீடியோக்களைதான் அதிகம் விரும்புகின்றனர். இன்ஸ்டா ரீல்ஸ் யூ-ட்யூப் ஷார்ட்ஸ் குறைந்தபட்சம் 15 வினாடிகளில் இருந்து அதிகபட்சம் 60 வினாடிகள்தான் இருக்கும். ஆனால் இன்ஸ்டாகிராம் … Read more

இந்த நம்பர்களை மொபைலில் டைப் செய்யாதீங்க… மோசடி வலையில் சிக்க வாய்ப்பு!

Call Forwarding Scam: இந்த காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் மக்களுக்கு பல்வேறு வகையில் நன்மைகள் விழைந்துவரும் நிலையில், டீப்பேக் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகும் போலி வீடியோ, புகைப்படம் மற்றும் ஆன்லைன் மோசடிகள் மக்களுக்கு கடுமையான பாதிப்பையும் ஏற்படுத்துகின்றன.  சமீப காலங்களில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகளை தடுக்க சைபர் பாதுகாப்பு வல்லுநர்களும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும், சைபர் குற்ற தடுப்பு அதிகாரிகளின் நடவடிக்கைகளையும் தாண்டி புது புது யுக்திகளில் ஆன்லைன் மோசடிகளை மோசடிக்காரர்கள் செய்கின்றனர். … Read more

சிறப்பான அம்சங்கள் கொண்ட மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்.. ஆரம்ப விலை வெறும் ரூ. 54,999

e-Sprinto Electric Scooter In India: எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன பிராண்டான இ-ஸ்பிரிண்டோ (e-Sprinto) நிறுவனம் செவ்வாயன்று (நவம்பர் 22) அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ராபோ (Rapo) மற்றும் ரோமி (Roamy) எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், இ-ஸ்பிரிண்டோ (e-Sprinto) நிறுவத்தின் தயாரிப்பு வரிசையில் இப்போது 6 மாடல்கள் என மொத்தம் 18 வகைகளில் இரு சக்கர வாகன உள்ளன. இது நிலையான மற்றும் அணுகக்கூடிய இயக்கம் தீர்வுகளை வழங்குவதில் பிராண்டின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. ரோமி … Read more

ஜியோ பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ்… இந்த ரீசார்ஜ் திட்டத்தில் 23 நாள்களுக்கு கூடுதல் வேலிடிட்டி!

Reliance Jio Recharge Plans: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமானமாக உள்ளது. வோடோஃபோன், ஏர்டெல், பிஎஸ்என்எல் போன்ற மற்ற நிறுவனங்களை காட்டினாலும் பல்வேறு வகையிலான வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளன. வரம்பற்ற வாய்ஸ் காலிங், டேட்டா பலன்கள், இலவச ஓடிடி பலன்கள் உள்ளிட்டவற்றை ஜியோ கொடுக்கிறது.   ஜியோ நிறுவனம் மாதாமாதம் புதிய திட்டங்களையும் அறிவிக்கின்றன. அதுமட்டுமின்றி பல ரீசார்ஜ் திட்டங்களிலும் மாற்றத்தை கொண்டு வருகின்றன. இது ஒருபுறம் … Read more

மொபைல் தொலைந்தாலும் சிம்மை தூக்கிப்போட முடியாது… இந்த ஆப்ஷனை பயன்படுத்துங்கள்!

How To Enable Airtel E-Sim: ஏர்டெல் நிறுவனத்தில் இ-சிம் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், பெரும்பாலான மக்கள் இன்னும் பிசிக்கல் சிம்மைதான் பயன்படுத்துகின்றனர். 1 இ-சிம் மூலம் உங்கள் சாதனத்தில் டிஜிட்டல் சிம்மை இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இது ஒரு சிம் கார்டை போனில் போட்டுவைப்பதற்கான தேவையை நீக்குகிறது. மொபைல் இணைப்பை ஆதரிக்கும் ஸ்மார்ட்வாட்ச்களில் இது மிகவும் பொதுவானதாக கருதப்படுகிறது.  அந்த வகையில் ஏர்டெல் நிறுவனத்தின் சிஇஓ கோபால் விட்டல் பயனர்கள் இ-சிம்மை தேர்வு செய்ய வேண்டும் என்று … Read more

சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை படம் பிடித்த எண்டோஸ்கோபி கேமரா: செலுத்தப்பட்டது எப்படி?

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா-பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி இந்த சுரங்கப் பாதையில் மண் சரிந்தது. அதனால் சுரங்கப் பாதைக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் முதல் முறையாக செவ்வாய்க்கிழமை காலை சுரங்கத்தில் சிக்கியுள்ள அவர்களது வீடியோ வெளியானது. எண்டோஸ்கோபி கேமரா மூலம் இது சாத்தியமானது. சுரங்கத்துக்கு வெளியில் இருந்து மண் … Read more

குளிர்காலத்திலும் உணவை சுட சுட சாப்பிட வேண்டுமா… இந்த லஞ்ச் பாக்ஸை வாங்கலாம்!

Electric Lunch Box: இப்போது தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வருகிறது. மழைக்காலம் முடிந்து அடுத்து டிசம்பர், ஜனவரியில் அதாவது தமிழ் மாதப்படி மார்கழி, தை மாதங்களில் பனியின் தாக்கமும் அதிகமாக இருக்கும். இதில் பலரும் சிரமப்படுவார்கள் என்றாலும் முக்கியமாக பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்வோர் காலையிலும், வீடு திரும்பும்போது மாலையிலும் கடும் சிரமத்திற்கு ஆளாவார்கள்.  சாலைகள் குண்டும் குழியுமாக மாறிவிடும், தெருதோறும் மழை நீராக இருக்க எப்போதும் ஒரு குளிர்ந்த சூழலிலேயே இருக்க நேரிடும். அந்த … Read more

உடல் எடையை குறைக்க நினைப்பவரா நீங்கள்… இந்த உடற்பயிற்சி உபகரணங்கள் உதவியாக இருக்கும்!

Fitness Gadgets: தற்போது ஃபிட்னஸ் என்பது அனைவரும் அதிக கவனம் செலுத்தும் ஒன்றாக மாறிவிட்டது. ஆரோக்கியமற்ற உணவுமுறை, சீரற்ற வாழ்க்கை முறை போன்றவற்றால் அதிக உடல் எடை பெறுவது, அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படுவது என பல உடல் சார்ந்த பிரச்னைகளும் அதிகமாகிவிட்டன. இதனால், மக்கள் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்.  இருப்பினும் சிலருக்கு தனியே உடற்பயிற்சி கூடத்திற்கு செல்ல வாய்ப்பில்லாததால் வீட்டிலேயே உடற்பயிற்சி உபகரணங்களை வைத்து பயிற்சி மேற்கொள்கின்றனர். குறிப்பாக, உடற்பயிற்சி வல்லுநர்கள், உடற்பயிற்சியில் … Read more

உங்கள் மொபைல் பேட்டரி நல்ல நிலையில் உள்ளதா… கண்டறிவது எப்படி?

Smartphone Hacks: இந்த காலகட்டத்தில் ஒரு மனிதருக்கு பல்வேறு வகையில் பிரச்னைகள் ஏற்படுகிறது என்றால், அதில் மொபைல், லேப்டாப் சார்ந்த மின்னணு சாதனங்களின் பிரச்னைகளும் அடக்கம். இப்போதெல்லாம் மொபைல், லேப்டாப்களை பிரச்னையில்லாமல் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள பல வழிகளை மக்கள் பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட்போன் என எடுத்துக்கொண்டால் உங்கள் பேட்டரியின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை பலரும் கவனிப்பார்கள். நீண்ட நேரம் வீடியோ பார்த்தாலோ, பாட்டு கேட்டாலோ அல்லது கேம் விளையாடினாலோ பேட்டரி எந்தளவிற்கு தாக்குபிடிக்கிறது என்பதை பலரும் பார்ப்பார்கள். … Read more

Innova சிறப்பு எடிஷன் அறிமுகம்… 8 பேர் வரை அமரலாம் – என்னென்ன ஸ்பெஷல் பாருங்க!

Toyota Innova Hycross Limited Edition: டொயோட்டா இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டொயோட்டா Rumion மாடல் காரை சந்தையில் அறிமுகப்படுத்தியது. இதில் 1.5 லிட்டர் எஞ்சின் உள்ளது. இதன் கட்டமைப்பு மாருதி சுசுகி எர்டிகாவை போல் இருப்பதாக கூறப்பட்டது. இந்த காரின் விலை 10.29 ரூபாய் லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.  இந்த காரில் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளேயை ஆதரிக்கிறது. ABD, Tow Alert மற்றும் … Read more