AI சூழ் உலகு 15 | ‘ஏஐ தொழில்நுட்பம் கண்டு அஞ்சாதீர்…’ – பில் கேட்ஸ் அடுக்கும் காரணங்கள்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த பார்வை ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். கல்லூரி பயிலும் மாணவர்கள், ஐடி துறையில் பணியாற்றும் நபர்கள் அதனை தங்களது போட்டியாளர்களாக பார்க்கலாம். அதுவே டெக் வல்லுநர்கள், மனித வாழ்வினை மேலும் ஸ்மார்ட் ஆக்கும் கருவியாக அதனைப் பார்க்கலாம். இத்தகையச் சூழலில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ், ஏஐ தொழில்நுட்பத்தை எப்படி பார்க்கிறார் என்பதை பார்க்கலாம். ஏனெனில், 20-ம் நூற்றாண்டில் கணினி சார்ந்த டிஜிட்டல் புரட்சிக்கு வித்திட்டவர்களில் பில் கேட்ஸும் ஒருவர். … Read more