ஐக்யூ ஸ்மார்ட்போன் விற்பனை 82 சதவீதம் உயர்வு

சென்னை: தமிழ்நாட்டில் ஐக்யூ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் விற்பனைகடந்த நிதி ஆண்டில் 82 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது என்று அந்நிறுவனத்தின் தலைமைச்செயல் அதிகாரி (சிஇஓ) நிபுன் மரியா தெரிவித்து உள்ளார். சீனாவைச் சேர்ந்த விவோ மொபைல்போன் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஐக்யூ கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளாக ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துவரும் இந்நிறுவனம், தமிழ்நாட்டில் தங்களது சந்தையை விரிவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது தொடர்பாக நேற்று சென் னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற … Read more

இந்த நம்பரில் இருந்து கால் வந்தா எடுக்காதீங்க… சிக்கினால் அவ்வளவு தான்!

+92 Mobile Number Online Scam: இந்தியாவில் தற்போது ஆன்லைன் மோசடி வழக்குகள் அதிகரித்து வருகின்றன. சைபர் மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து பணத்தை திருடுவதற்கு பல்வேறு புதிய வழிகளை பயன்படுத்துகின்றனர்.  ஓடிபி மோசடி, ஸ்கேனர் மோசடி போன்ற வைரலான மோசடிகளுக்கு மத்தியில், தற்போது புதியதாக மற்றொரு ஆன்லைன் மோசடி புழக்கத்திற்கு வந்துள்ளது எனலாம். அதாவது, இதில் மோசடி செய்பவர்கள் உங்கள் வாட்ஸ்அப் மூலமாகவே வந்து உங்களை தாக்குவார்கள்(!). உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு, அதன் … Read more

10 நிமிடம் சார்ஜ் போட்டா போதும்… ஒரு நாள் முழுவதும் பக்கவா நிக்கும் – வருகிறது புது மொபைல்!

OPPO K11 Specifications: தற்போதைய ஸ்மார்ட் யுகத்தில் ஸ்மார்ட்போன்கள் இன்றியமையாததாகிவிட்டது. சாமானியர்களுக்கே இன்றைய அன்றாட வாழ்வில் மொபைல் போனின் தேவை வந்துவிட்டது. அதாவது, பொருளாதார ரீதியில் மிகவும் நலிவடைந்த டெலிவரி செய்யும் இளைஞர்கள், தள்ளுவண்டியில் உணவு விற்கும் சிறு வியாபாரிகள் என அனைவருக்கும் இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு ரீதியில் உதவிகரமாக இருக்கிறது.  அதேபோன்று பலரும் குறைந்த விலையில் நல்ல அம்சங்களை உள்ளடக்கிய ஸ்மார்ட்போன்களை வாங்கவே முயற்சி செய்கின்றனர். கேமரா, பேட்டரி, மெமரி போன்ற அடிப்படை விஷயங்களை அவர்கள் … Read more

அட்டகாசமான Moto G14 விரைவில் அறிமுகம்: விலை, பிற விவரங்கள் இதோ

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான மோட்டோரோலா சமீப காலங்களில் பல அதிரடி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இப்போது இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் போனை அறிமுகப்படுத்த உள்ளது. இது குறித்து ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிப்கார்ட்டில் ஒரு லேண்டிங் பேஜ் வெளிவந்துள்ளது. அதன் மூலம் தொலைபேசியின் பெயர் மோட்டோ ஜி14 (Moto G14) என்பதும் இது ஆகஸ்ட் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரியவந்துள்ளது. இந்த போனின் விலை சுமார் 10 ஆயிரம் இருக்கும் என தகவல்கள் … Read more

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஐஆர்சிடிசி டிக்கெட் சேவை தற்காலிகமாக பாதிப்பு

புதுடெல்லி: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஐஆர்சிடிசி ரயில் டிக்கெட் பதிவு செய்வதற்கான சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐஆர்சிடிசி ட்வீட் செய்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஐஆர்சிடிசி வலைதளம் மற்றும் செயலியில் டிக்கெட் சேவையை பயனர்களால் பெறமுடியவில்லை. இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் நோக்கில் தொழில்நுட்பக் குழு பணியாற்றி வருகிறது. பயனர்கள் அமேசான், மேக் மை ட்ரிப் போன்ற மாற்று தளங்கள் மூலமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. வலைதளங்கள் முடக்கம் குறித்த … Read more

சான்ஸ் அ இல்ல.. இவ்வளவு கம்மி விலையில் ரீசார்ஜ் பிளானா? ஏர்டெல் அசத்தல்

ஏர்டெல் 599 ரூபாய் திட்டம்: நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ தனது சொந்த சந்தையை உருவாக்கியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு ஏர்டெல் நிறுவனமும் தனது பகடைக்காயை வீசி பயனர்களை கவர்ந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், ஏர்டெல் பயனர்களுக்கு மலிவு விலையில் போஸ்ட்பெய்டு குடும்பத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல் இந்த திட்டத்துடன் ஜியோவுக்கு போட்டியை அளிக்கிறது. இந்தக் குடும்பத் திட்டத்தின் விலை வெறும் ரூ.599 ஆகும். இது தவிர, நிறுவனம் ரூ.799 மற்றும் ரூ.998 ஆகிய இரண்டு … Read more

காரில் தெரியாமல் கூட இந்த தவறுகளை செய்யாதீர்கள்! பெரிய செலவில் முடியும்!

உங்கள் வாகனத்தை அடிக்கடி மெக்கானிக்கிடம் கொண்டு செல்வதற்கு முன், நீங்கள் செய்யக்கூடா சில விஷயங்களை பற்றி பார்ப்போம். 1. டயர்களை கவனியுங்கள்​ கார் டயர்களில் இருந்த ரப்பர் பொதுவாக பலவீனமாக இருந்ததால், அவற்றை சரியாக பராமரிக்காமல் இருப்பது சக்கரத்தின் தரத்தை பாதிக்கும். “டயர்கள் உங்கள் காலில் உள்ள காலணிகள் போன்றவை, அவை உங்கள் காரினை சாலையில் பாதுகாப்புக்கான முதல் வரிசையாகும், எனவே டயர் சுழற்சியை ஒருபோதும் புறக்கணிக்காதீர், ஏனெனில் இது மிகவும் எளிதானது மற்றும் இது டயரின் … Read more

எஸ்எஸ்எல்வி வடிவமைப்பின் தொழில்நுட்பத்தை பகிர திட்டம் – தனியார் நிறுவனங்களுக்கு இஸ்ரோ அழைப்பு

சென்னை: சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட்களை வடிவமைப்பதற்கான பயிற்சி கருத்தரங்கில் பங்கேற்க தனியார் நிறுவனங்களுக்கு இஸ்ரோ அழைப்பு விடுத்துள்ளது. விண்வெளி ஆய்வில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்காக 2020-ம் ஆண்டு இன்ஸ்பேஸ் என்ற அமைப்பை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கியது. இதன்மூலம் ராக்கெட், செயற்கைக்கோள் வடிவமைப்பில் தனியார் நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட்களை வடிவமைக்கும் தொழில்நுட்பத்தை தனியார் நிறுவனங்களிடம் பகிர்வதற்கு இஸ்ரோ முன்வந்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்ட … Read more

ஆண்ட்ராய்டு போன்களிலும் ChatGPT! கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவு தொடங்கியது

ஐபோன்களுக்குப் பிறகு, OpenAI இன் வைரஸ் செயற்கை நுண்ணறிவு (AI) சாட்போட் ChatGPT அடுத்த வாரம் Android க்காக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மே மாதத்தில் iOS க்கு ஆப்ஸ் வெளியிடப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, ஆண்ட்ராய்டு ஃபோன்களுக்கான ChatGPT ஆனது Androidக்குக் கிடைக்கும். ChatGPTயை உருவாக்கிய ஓபன்ஏஐ, செயலியை முன்கூட்டியே ஆர்டர் செய்ய மக்களை அனுமதிக்கிறது, இதனால் அது தொடங்கப்படும்போது அதிகாரப்பூர்வ கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து தானாகவே பதிவிறக்கப்படும். ChatGPT நிறுவனம் ட்விட்டரில் ஆண்ட்ராய்டுக்கான செயலி அறிமுகம் குறித்த … Read more

ட்விட்டரின் லோகோவை 'X' என மாற்றிய எலான் மஸ்க்!

சான் பிரான்சிஸ்கோ: பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் தளத்தின் லோகோவை மாற்றினார் அதன் உரிமையாளர் எலான் மஸ்க். பாரம்பரிய நீலக் குருவிக்கு பதிலாக ‘X’ என லோகோவை மஸ்க் மாற்றியுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு வாங்கி இருந்தார். அது முதல் அந்த தளத்தில் பல்வேறு மாற்றங்களை தன் விருப்பத்துக்கு ஏற்ப மேற்கொண்டு வருகிறார். ஊழியர்களை பணி நீக்கம் செய்வது, ட்விட்டர் அலுவலக பொருட்கள் விற்பனை, தடை செய்யப்பட்டவர்களை மீண்டும் ட்விட்டர் தளத்தில் இயங்க … Read more