Moto e32s Launch: Redmiக்கு போட்டியாக Moto E32s போன் – விலை உங்கள் சட்டை பையை காலி செய்யாது!

Motorola E32s Launch: லெனோவாவுக்குச் சொந்தமான மோட்டோரோலா தனது புதிய மலிவு விலை ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. மோட்டோ E32s பட்ஜெட் போன் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. பல நாள்களாக போன் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில், மோட்டோரோலா நிறுவனம் தற்போது போனை இந்திய சந்தைக்குக் கொண்டுவந்துள்ளது. இந்த மோட்டோ போனின் விலை 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருப்பது சிறப்பு. 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் கொண்ட டிஸ்ப்ளே, பெரிய பேட்டரி, லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு … Read more

BSNL Recharge: பிஎஸ்என்எல் ரூ.22 ரீசார்ஜில் 90 நாள்கள் வேலிடிட்டி… நம்பினால் நம்புங்கள்!

BSNL Recharge: டெலிகாம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க பல்வேறு திட்டங்களை வழங்குகின்றன. இந்த திட்டங்கள் வரம்பற்ற அழைப்பு, இலவச டேட்டா, ஓடிடி அணுகல் போன்ற பலன்களை வழங்குகின்றன. ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா ஆகிய நிறுவனங்கள் தொடர்ந்து போட்டியில் இருக்கின்றன. ஆனால், மலிவான திட்டத்திற்கு வரும்போது, ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா பெயர்கள் மேலே வராது. ஏனென்றால், அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் மலிவு விலைத் திட்டங்களை வழங்குவதில் முதலிடத்தில் உள்ளது. இந்த நிறுவனம் பல … Read more

Xiaomi Redmi: இந்த சியோமி, ரெட்மி போன்களுக்கு இனி அப்டேட் கிடைக்காது!

Xiaomi Redmi: நீங்கள் சியோமி அல்லது அதன் எதேனும் இணை பிராண்ட் ஸ்மார்ட்போன்களான மி, ரெட்மி போன்ற போன்களைப் பயன்படுத்துபவராக இருந்தால், இது உங்களுக்கு அதிர்ச்சியூட்டும் செய்தியாக இருக்கலாம். ஏனெனில், சியோமி தனது கைவிடப்பட்ட அப்டேட் பட்டியலில் புதிய ஸ்மார்ட்போன்களை சேர்த்துள்ளது. இதன் காரணமாக, பட்டியலில் உள்ள ஸ்மார்ட்போன்களுக்கு இனி எந்த விதமான அப்டேட்டும் கிடைக்காது. நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியல் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இதில் Redmi K20, Redmi Note 7 Series, MI Pad ஆண்ட்ராய்டு … Read more

6G வருகையுடன் ஸ்மார்ட்போன் காலம் முடிவுக்கு வருமா?

மனிதர்கள் மொபைலைக் கண்டுபிடிக்க பல வருடங்கள் ஆனது. ஆனால் மொபைலில் இருந்து ஸ்மார்ட்போன் வரையிலான பயணம் மிகக் குறுகிய காலத்தில் முடிந்துவிட்டது. இந்த நிலையில் 5ஜி நெட்வெர்க்கைத் தொடர்ந்து 2030 ஆம் ஆண்டிற்குள் 6ஜி சேவை அமலில் இருக்கும் என நோக்கியா தலைமை செயல் அலுவலர் Pekka Lundmark கணித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தொழில்நுட்பம் வேகமாக மாறிவருகிறது. இந்த கேஜெட்டுகளில் சில காலப்போக்கில் பின்தங்கிவிட்டன. அதன்படி, ஸ்மார்ட்போன்களின் பயன்பாடும் நின்றுவிடலாம். இந்த சகாப்தமும் முடிவுக்கு வரலாம் … Read more

21000mAh Battery Phone: நம்புற மாதிரி இல்லையே… 94 நாள்கள் தாங்கும் பேட்டரியா!

21000mah Battery Phone: சீன நிறுவனமான Oukitel, 21,000mAh பேட்டரியுடன் வரும் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போனின் பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 94 நாள்கள் வரை நீடிக்கும் என்பது தான் இப்போது டெக் டவுனின் ஹாட் டாக்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் வெறுப்பு பதிவுகள் அதிகரிப்பு

கலிஃபோர்னியா: சமூக வலைதளங்களில் வெறுப்பு பதிவுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தில் பேஸ்புக்கில் 53,000 வெறுப்பு பதிவுகள் கண்டறியப்பட்டதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 38% அதிகம். மார்ச்சில் பேஸ்புக்கில் 38,600 வெறுப்புப் பதிவுகள் கண்டறியப்பட்டன. அதேபோல் இன்ஸ்டாகிராமில் வன்முறைப் பதிவுகளின் எண்ணிக்கை 86% அதிகரித்துள்ளது. மார்ச் மாதம் இன்ஸ்டாகிராமில் 41,300 வன்முறை பதிவுகள் கண்டறியப்பட்ட நிலையில் ஏப்ரலில் அது 77,000 ஆக உயர்ந்துள்ளது என்று மெட்டா தெரிவித்துள்ளது. இவற்றில் … Read more

WhatsApp Account Ban: 16 லட்சம் பேர் இனி வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது!

உலகளவில் பிரபலமான மெட்டா நிறுவனத்தின் செய்தி பகிரும் தளமான வாட்ஸ்அப், இந்தியாவில் கோடிக் கணக்கிலான பயனர்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்த சூழலில், விதிகளை மீறியதாக 16 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை நிறுவனம் தடை செய்துள்ளது. பிற செயலிகளுடன் ஒப்பிடும்போது வாட்ஸ்அப் தான் அரட்டை, அழைப்பு என அன்றாட தேவைகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, விதிகளை மீறும் பயனர்களின் கணக்குகளையும் நிறுவனம் அவ்வப்போது முடக்கி வருகிறது. வாட்ஸ்அப் தற்போது அதன் 11வது மாத அறிக்கையை வெளியிட்டுள்ளது. வாட்ஸ்அப் … Read more

இந்தியாவில் ஏப்ரலில் மட்டும் 16.66 லட்சம் கணக்குகளுக்கு தடை விதித்த வாட்ஸ்அப்

புது டெல்லி: கடந்த ஏப்ரல் மாதம் மட்டுமே இந்தியாவில் சுமார் 16.66 லட்சம் கணக்குகளுக்கு தடைவிதித்துள்ளதாக மல்டி மீடியா மெசேஜிங் தளமான வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இதனை மாதாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது வாட்ஸ்அப். இந்திய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-இன் கீழ் மாதந்தோறும் பயனர் பாதுகாப்பு குறித்த அறிக்கையை வாட்ஸ்அப் தாக்கல் செய்து வருகிறது. பயனர்கள் கொடுக்கின்ற புகார்கள் மற்றும் வாட்ஸ்அப் கொள்கையை மீறும் பயனர்களை அடையாளம் கண்டு ஒவ்வொரு மாதமும் சம்பந்தப்பட்ட பயனர்களின் கணக்கை வாட்ஸ்அப் தடை … Read more

Netflix Account: ஒரே நேரத்தில் லட்ச கணக்கிலான சந்தாதாரர்களுக்கு குட்பை சொன்ன நெட்பிளிக்ஸ்!

Netflix Account: இப்போதெல்லாம் பல பயனர்கள் தங்களுக்குப் பிடித்த இணையத் தொடரைப் பார்க்க தங்கள் மொபைலில் நெட்பிளிக்ஸ் வைத்திருக்கிறார்கள். இதில் கொடுக்கப்படும் வீடியோக்களும், தொடர்களும் உலகளவில் பிரபலமானவை. ஆனால், பிரபல ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிக்ஸ் சமீபத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான பயனர்களை அதன் தளத்தில் இருந்து தடை செய்துள்ளது. தடைசெய்யப்பட்ட Netflix கணக்குகளில் பொதுவான ஒன்று உள்ளது. இந்த கணக்குகள் அனைத்தும் ரஷ்யாவில் வாழும் மக்களுக்கு சொந்தமானது. TikTok Re-Entry: இந்தியாவிற்குள் நுழையும் டிக்டாக்; அப்போ இனி … Read more

Recharge Price Hike: தீபாவளி பரிசா இது! ரீசார்ஜ் செய்ய கூடுதல் பணம்!

Recharge Price Hike: நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களாக இருக்கும் வோடபோன் ஐடியா, ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை இந்த ஆண்டு தீபாவளிக்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்த உள்ளன. மூன்று நிறுவனங்களும் தங்கள் மொபைல் ரீசார்ஜ் விலையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் மொபைல் ரீசார்ஜ் விலை 20 முதல் 25 விழுக்காடு வரை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. BSNL Recharge: ஜியோவை விரட்டியடிக்கும் பிஎஸ்என்எல்-இன் அதிரடி ரீசார்ஜ் திட்டங்கள்! செலவினங்கள் அதிகரித்து … Read more