வடிவேலு – பகத் பாசில் இணையும் மாரீசன்

மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படத்தில் இணைந்து நடித்த வடிவேலுவும், பகத் பாசிலும் அடுத்தபடியாக சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் மீண்டும் இணைந்துள்ளார்கள். கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கும் இந்த படம், ஒரு நடுத்தர வயதை சார்ந்தவரும் , ஒரு இளைஞரும் நாகர்கோவிலில் இருந்து பொள்ளாச்சி வரை சாலையில் பயணம் செய்யும் போது ஏற்படும் அனுபவத்தை மையமாக கொண்ட காமெடி கலந்த கதையில் உருவாகிறது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்த படத்திற்கு மாரீசன் என்று … Read more

ரஜினிகாந்த் அருகே லதா ரஜினிகாந்துக்கு சீட் இல்லையா?.. பக்கத்துல யாரு உட்கார்ந்தா தெரியுமா?

அயோத்தி: ராமர் கோயில் திறப்பு விழா இன்று அயோத்தியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு முன் வரிசையில் அமரும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், அவர் அருகே லதா ரஜினிகாந்த் அமரவில்லை என்றும் ரஜினிகாந்தின் குடும்பத்தினருக்கு முன் வரிசையில் அமர இடம் ஒதுக்கப்படவில்லை என்றும் சர்ச்சை வெடித்துள்ளது. அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட பால ராமர் கோயில் திறப்பு

தெலுங்கில் ஜனவரி 26ல் வெளியாகும் 'அயலான், கேப்டன் மில்லர்'

பொங்கலுக்கு வெளிவந்த படங்களில் தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' படத்திற்கும், சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' படத்திற்கும் இடையேதான் போட்டி நிலவியது. தனுஷ் படத்தை விட சிவகார்த்திகேயன் படம் சில கோடிகள் வசூலில் முந்தியிருப்பதாகச் சொல்கிறார்கள். விமர்சன ரீதியாக 'கேப்டன் மில்லர்' பாராட்டுக்களைப் பெற்றாலும் 'காப்பி கதை' என்ற புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதனால், படம் மீதான இமேஜ் குறைந்துவிட்டது. இந்நிலையில் இந்த இரண்டு படங்களின் தெலுங்கு டப்பிங்கும் ஜனவரி 26ம் தேதி வெளியாக உள்ளது. தமிழில் வெளியான … Read more

Music composer Ilayaraja: மன்னர்கள் செய்ததை பிரதமர் செய்துள்ளார்.. இளையராஜா நெகிழ்ச்சி!

சென்னை: அயோத்தியில் நீண்ட நாட்களாக பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ராமர் கோயில் கட்டப்பட்டு இன்றைய தினம் கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டுள்ளது. இந்த விழாவில் சர்வதேச அளவில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் சச்சின் டெண்டுல்கல், விராட் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த விழாவில் பங்கேற்று சிறப்பித்துள்ளனர்.

'ஹனு மான்' 200 கோடி வசூல், அதிக லாபம்

தெலுங்கில் பொங்கலை முன்னிட்டு மகேஷ் பாபு நடித்த 'குண்டூர் காரம்', வெங்கடேஷ் நடித்த 'சைந்தவ்', நாகார்ஜுனா நடித்த 'நா சாமி ரங்கா' ஆகிய படங்களுடன் இளம் ஹீரோவான தேஜா சஜ்ஜா நடித்த 'ஹனு மான்' படமும் வெளியானது. இதில் தேஜா நடித்த 'ஹனு மான்' படம் 200 கோடி வசூலைக் கடந்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் மூலம் இதுவரையில் 70 கோடிக்கும் அதிகமான லாபம் கிடைத்துவிட்டது என்கிறார்கள். அதே சமயம் 'குண்டூர் காரம்' படம் … Read more

Ram Temple: \"ரொம்ப தீவிரமான காலத்தை நோக்கி இந்தியா… கலை தான் ஆயுதம்..” ரஜினி பட இயக்குநர் கருத்து

சென்னை: அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள ப்ளூ ஸ்டார் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதில் பேசிய படத்தின் தயாரிப்பாளரும், கபாலி, காலா படங்களின் இயக்குநருமான பா ரஞ்சித், ராமர் கோயில் திறப்பு குறித்து மறைமுகமாக கருத்துக் கூறியுள்ளார். கலை தான் மக்களின் மனங்களை சரி செய்யும் ஆயுதம் என கருத்து தெரிவித்துள்ளார்.

சகோதரியின் நிச்சயதார்த்த நிகழ்வில் நடனம் ஆடிய சாய்பல்லவி

சினிமாவில் இருக்கும் பல பிரபலங்கள் தாங்கள் பிசியான நட்சத்திரங்களாக இருக்கும் நிலையில் தங்களது இளைய சகோதர, சகோதரிகளின் திருமணத்திற்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொள்வது வழக்கமான ஒன்றுதான். நடிகர்களில் சிம்பு, அதர்வா ஆகியோரை உதாரணமாக சொல்லலாம். தற்போது அதேபாணியில் நடிகை சாய்பல்லவியின் இளைய சகோதரியான பூஜா கண்ணன் திருமண நிகழ்வில் அடி எடுத்து வைக்க இருக்கிறார். இவருக்கும் இவரது நீண்ட நாள் நண்பரான வினீத் என்பவருக்கும் இரு குடும்பத்தினராலும் திருமணம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிச்சயதார்த்த விழா சாய்பல்லவியின் … Read more

Arun vijay: எலும்பு முறிவு.. 2 மாதம் அவதி.. மகன் குறித்து கலங்கிய விஜயகுமார்.. அருண்விஜய் நெகிழ்ச்சி

சென்னை: நடிகர் அருண் விஜய் அடுத்தடுத்த சிறப்பான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். நடிகர் விஜயகுமாரின் மகன் என்ற அடையாளம் இருந்தபோதிலும் அருண் விஜய்யின் வெற்றி போராடி பெற்றது. இந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ளும்வகையில் அவரது அடுத்தடுத்த படங்கள் அமைந்து வருகின்றன. தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து முடித்துள்ளார் அருண் விஜய்.

பல்லவியை கண்டுபிடிக்க கார்த்திக் எடுத்த முடிவு – கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

Karthigai Deepam TV Serial: நேற்றைய எபிசோட்டில் அபிராமி குடும்பத்துடன் பொங்கல் கொண்டாட ஐஸ்வர்யா செய்த சதியால் தீபா கெட்ட பெயர் வாங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.   

ஆனந்தியின் 'ஒயிட் ரோஸ்' படப்பிடிப்பு நிறைவு

பூம்பாரை முருகன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், சுசி கணேசன் உதவியாளர் ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்திருக்கும் திரில்லர் படம் 'ஒயிட் ரோஸ்'. இதில் ஆர்.கே.சுரேஷ் வில்லனாகவும், விஜித், கயல் ஆனந்தியின் ஜோடியாகவும் நடித்துள்ளார்கள். இவர்களுடன் புதுமுகம் ரூசோ ஸ்ரீதரன், சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இளையாராஜா ஒளிப்பதிவை கவனிக்கிறார். ஜோகன் செவனேஷ் இசையமைக்கிறார். 'ராவணக்கூட்டம்' படத்திற்கு பிறகு கயல் ஆனந்தி நடிக்கும் படம் இது. கமலி ப்ரம் நடுக்காவேரி, என் ஆளோட செருப்ப … Read more