ஆங்கில உளவாளியாக நடிக்கும் என்டிஆர் பேரன்

'அமிகோஸ்' படத்தின் வெற்றிக்கு பிறகு என்.டி.ராமராவ் பேரன் நந்தமுரி கல்யாண் ராம் நடிக்கும் புதிய படத்திற்கு 'டெவில்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. நவீன் மேதாராம் இயக்கத்தில் தயாராகும் படத்தில் சம்யுக்தா மேனன் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீகாந்த் எழுதியிருக்க, எஸ்.சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைக்கிறார். அபிஷேக் பிக்சர்ஸ் சார்பில் அபிஷேக் நாமா தயாரிக்கிறார். இந்த படம் பீரியட் படமாக உருவாகிறது. இதில் நந்தமுரி கல்யாண்ராம் ஆங்கில அரசின் உளவாளியாக நடிக்கிறார். … Read more

தமன்னாவின் காவாலா வைப்… ஒரிஜினலை விட இது சூப்பர்… ரசித்து பார்க்கும் பேன்ஸ்!

சென்னை: நடிகை தமன்னா ஜெயிலர் படத்தில் வரும் காவாலா பாடலுக்கு வேறு விதமாக ஆட்டம் போட்ட வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர், லால் சலாம் மற்றும் இயக்குநர் த.செ.ஞானவேல் படம் என மூன்று படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், அடுத்து ஒரு வெற்றிப்படத்தை கொடுத்ததே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஜெயிலர்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் … Read more

Simbu: 'எஸ் டி ஆர் 48' படத்திற்காக சிம்பு செய்யப்போகும் காரியம்: இதை சத்தியமா எதிர்பார்க்கல..!

சிம்பு நடிப்பில் தற்போது ‘எஸ்டிஆர் 48’ படம் உருவாகி வருகிறது. மாநாடு படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்துள்ள சிம்பு, தற்போது நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இந்நிலையில் இந்தப்படம் குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சிம்பு தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இதனையடுத்து ‘மாநாடு’ படத்தின் … Read more

தமிழ் சினிமாவுக்கு வரும் இன்னொரு ஐஸ்வர்யா

தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யாக்களுக்கு பஞ்சமே இல்லை. ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, லட்சுமி மகள் ஐஸ்வர்யா, ஐஸ்வர்யா மேனன், ஐஸ்வர்யா நாயர், ஐஸ்வர்யா தத்தா, இப்படி நிறைய உள்ளனர். கூடுதலாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குனராக உள்ளார். இந்த நிலையில் புதிதாக வந்திருக்கிறார் டாலி ஐஸ்வர்யா. மாடலிங் துறையில் 8 வருட அனுபவம் கொண்ட இவர் 'கலைஞர் நகர்' படம் மூலம் அறிமுகமாகிறார். இந்த படம் 23 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட சாதனை படம். சுகன் குமார் இயக்கி … Read more

Sivakarthikeyan Salary: வேற வழியே இல்ல… மாவீரனுக்காக சம்பளத்தை குறைத்த சிவகார்த்திகேயன்!

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் அடுத்த வாரம் 14ம் தேதி ரிலீஸாகிறது. மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் சிவகார்த்திகேயன். இதனால், மாவீரன் படத்துக்காக தனது சம்பளத்தை ரொம்பவே குறைத்துவிட்டாராம். மாவீரனுக்காக சம்பளத்தை குறைத்த சிவகார்த்திகேயன்:கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தற்போது மாவீரன் படத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை மடோன் அஸ்வின் … Read more

Adipurush: வெடித்த சர்ச்சை.. கை கூப்பி மன்னிப்பு கேட்ட 'ஆதிபுருஷ்' பட வசனகர்த்தா.!

அண்மையில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான படம் ‘ஆதிபுருஷ்’. பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு பான் இந்திய ஹீரோவாகவே மாறிவிட்ட பிரபாஸ் நடிப்பில் வெளியான இந்தப்படம் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை குவித்தது. இந்நிலையில் இந்தப்படத்தின் வசனகர்தா மன்னிப்பு கேட்டுள்ளார். ‘பாகுபலி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் சொல்லி கொள்ளும்படியான வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் ‘ஆதிபுருஷ்’ வெளியானது. ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு ஓம் ராவத் இயக்கத்தில் பான் … Read more

மலையாளத்தில் மீண்டும் உருவாகிறது ஒரு சூப்பர் ஹீரோ படம்

தென்னிந்திய மொழிகளில் சூப்பர் ஹீரோ படங்களை எடுப்பதற்கு பெரிய அளவில் யாரும் முன் வருவதில்லை. ஹாலிவுட்தில் பல்வேறு விதமான சூப்பர் ஹீரோ படங்களை பார்த்து ரசித்தவர்கள், அவற்றை இங்கே எடுக்கும்போது அதை பெரிய அளவில் வரவேற்பார்களா என்கிற சந்தேகம் நிறைய இயக்குனர்களுக்கு உண்டு. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான மின்னல் முரளி என்கிற திரைப்படம் கிராமத்து பின்னணியிலேயே உருவான சூப்பர்மேன் கதைய அம்சத்துடன் வெளியானது. படமும் ஓரளவுக்கு நல்ல விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்றது. … Read more

வர வர காதல் கசக்குதய்யா… திரைப்பிரபலங்களின் விவாகரத்து அலப்பறைகள்!

சென்னை: திருமணம் என்பது மனித வாழ்வில் முக்கியமாகி விட்டதைப் போல, இன்றைய காலகட்டத்தில் விவாகரத்து என்பதும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. உருகி உருகி காதலித்து, நீ இல்லை என்றால் நான் இல்லை என்று வைரமுத்து போல கவிதை எழுதி, லவ் பேர்ட்ஸ் போல் சுற்றித்திரிந்த காதலர்கள். திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைந்ததும் காதல் தேய்ந்து கட்டெறும்பாகி விடுகிறது. அப்படி காதலித்து திருமணம் செய்து கொண்ட திரைப்பிரபலங்கள் பலர் திடீரென திருமணத்தை முறித்து கொள்கின்றனர். அப்படி திரைப்பிரபலங்கள் … Read more

Jailer: தலைவர் வேற ரகம்.. விமர்சனங்களுக்கு மத்தியில் 'காவாலா' பாடலை பாராட்டி தள்ளிய பிரபலம்.!

ரஜினி நடிப்பில் அடுத்ததாக ‘ஜெயிலர்’ படம் வெளியாகவுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இதன் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகவுள்ளது. அண்மையில் இந்தப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘காவாலா’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப்பாடல் குறித்து ரஜினியின் தீவிர ரசிகரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் பகிர்ந்து பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘ஜெயிலர்’ படத்தின் முதல் அப்டேட்டாக ‘காவாலா’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்தப்பாடலின் அறிவிப்பை தனது ஸ்டைலில் ப்ரோமோ வீடியோவாக … Read more

22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியா திரும்பிய லகான் நடிகை

அமீர்கான் நடிப்பில் கடந்த 2001ல் ஹிந்தியில் வெளியான படம் லகான். கிராமத்தில் உள்ள இளைஞர்கள், கிரிக்கெட் பற்றி எதுவுமே அறிந்திராத நிலையில் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு வெல்வது தான் இந்த படத்தின் கதை. அசுதோஷ் கோவரிகர் இயக்கிய இந்த படத்தில் கிரேசி சிங் என்பவர் கதாநாயகியாக நடித்திருந்தார். இன்னொரு கதாநாயகியாக லண்டனைச் சேர்ந்த எலிசபெத் என்பவர் ரேச்சல் என்கிற ஆங்கிலேயப் பெண்ணாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தில் இவர் அமீர்கான் உள்ளிட் அவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி … Read more