மார்க் ஆண்டனி படத்திற்கு தடை! விஷால் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் செப்டம்பர் 12ம் தேதி நேரில் ஆஜராகும்படி, நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   

Red Sandal Wood Review: செம்மர மாபியாவால் பலியாகும் தமிழர்களின் கதை; ஆனால் இத்தனை அவசரம் எதற்கு?

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞரான கர்ணனை (கபாலி விஷ்வந்த்) தேடி ஆந்திர மாநில திருப்பதியில் அலைந்துகொண்டிருக்கிறார் அவரின் நண்பரான குத்துச் சண்டை வீரர் பிரபா (வெற்றி). சட்டத்துக்குப் புறம்பாகச் செம்மரங்களைக் கடத்தும் கும்பலிடம் கர்ணன் மாட்டியிருக்கிறார் என்பதையும் அந்தச் செம்மர கடத்தல் சாம்ராஜ்ஜியத்தை அரசியல், அதிகாரம், பணபலம் உள்ள ஒருவன் ஆள்கிறான் என்பதையும் பிரபா கண்டறிகிறார். அதைத் தொடர்ந்து, தன் நண்பனை மீட்கத் தனியாளாகக் களமிறங்குகிறார் பிரபா. இறுதியில் கர்ணனை மீட்டாரா, கடத்தல் சாம்ராஜ்ஜியத்தின் முக்கிய … Read more

சந்திரமுகி கவர்ச்சியாக இருக்கிறார் : ஜோதிகா பாராட்டு

ரஜினி நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற 'சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. இதில் ரஜினி நடித்த கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். ஜோதிகா நடித்த சந்திரமுகி கேரக்டரில் கங்கனா நடித்துள்ளார். இவர்கள் தவிர மகிமா நம்பியார், வடிவேலு நடித்துள்ளனர். முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு இயக்கி உள்ளார். படம் வருகிற 15ம் தேதி வெளிவருகிறது. இந்த நிலையில் சந்திரமுகியாக நடித்துள்ள கங்கனா குறித்து ஏற்கெனவே சந்திரமுகியாக நடித்த ஜோதிகா தனது சமூக வலைத்தளத்தில் எழுதியிருப்பதாவது: … Read more

Leo: “அந்த சிங்கிள் ஷாட் ஃபேக்டரி ஃபைட் சீன்..” லியோவில் விஜய்யின் அதிரிபுதிரி ஆக்‌ஷன் ட்ரீட் ரெடி!

சென்னை: ரஜினியின் ஜெயிலர், ஷாருக்கானின் ஜவான் படங்களைத் தொடர்ந்து, விஜய்யின் லியோ அடுத்த மாதம் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் லியோவில் இருந்து, அடுத்த வாரம் செகண்ட் சிங்கிள் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கிள் ஷாட்

Leo: ஒர்கவுட்டான தளபதியின் மாஸ்டர் பிளான்..சாதனை படைக்க காத்திருக்கும் லியோ.!

விஜய்யின் லியோ திரைப்படத்தை தான் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் மற்றும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் என்னதான் வசூல் ரீதியாக வெற்றிபெற்றாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. எனவே லியோ படத்தின் மூலம் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற வேண்டும் என்பதில் தளபதி உறுதியாக இருக்கின்றார். அதன் காரணமாகத்தான் இப்படத்தை முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலிலேயே எடுக்க சம்மதித்துள்ளார் விஜய் என ஒரு கருத்து பரவி வருகின்றது. இது ஒருபக்கம் … Read more

“மாரிமுத்துவின் இறப்பு அதிர்ச்சியளிக்கிறது..” நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!

நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து உயிரிழந்துள்ளதை தொடர்ந்து அவருக்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். 

நூடுல்ஸ் விமர்சனம்: 20 நிமிடத்தில் சொல்ல வேண்டியதை 2 மணி நேரம் சொன்னால்… படம் எப்படி இருக்கு?

தன் மனைவி சக்தி (ஷீலா) மற்றும் மகளுடன் (ஆழிவா) சென்னையில் வாழ்ந்து வருகிறார் உடற்பயிற்சி பயிற்றுநரான சரவணன் (ஹரீஷ் உத்தமன்). எதிர்பாராத நிகழ்வில் சரவணன் வீட்டிற்குள் சக்தியின் கையால் ஒருவர் கொலையாகிறார். செய்வதறியாது பதறும் அக்குடும்பம் சடலத்தை ஒரு அறையில் மறைத்து வைக்கிறது. இந்நிலையில், முந்தைய தினம் சரவணனுடன் மோதலில் ஈடுபட்ட காவல்துறை ஆய்வாளர் இளங்கோ (மதன் தட்சணாமூர்த்தி) அக்குடும்பத்திற்கு இடைஞ்சல் தர வீட்டிற்கு வருகிறார். மறுபுறம் தங்கள் எதிர்ப்பையும் மீறி காதல் திருமண செய்துகொண்ட மகளைக் காண முதன்முறையாக மகளின் வீட்டிற்கு வந்து  கொண்டிருக்கிறார்கள் சக்தியின் … Read more

மாரிமுத்து மறைவு : திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி

நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். சின்னத்திரையில் எதிர்நீச்சல் என்ற சீரியலில் ஆதி குணசேகரன் என்ற ரோலில் நடித்து அசத்தி வந்த இவரின் மறைவு திரையுலகினர் மற்றும் சின்னத்திரை ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாரிமுத்துவின் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் மற்றும் சின்னத்திரை நடிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாசர், சரத்குமார், ரோபோ சங்கர், ராஜேஷ், இயக்குனர் வசந்த், எஸ்வி சேகர், … Read more

Jawan Box Office: ஜவான் ஒரேநாளில் 130 கோடி வசூல்… பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டிய ஷாருக்கான்!

சென்னை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் நேற்று வெளியானது. அட்லீ இயக்கத்தில் பான் இந்தியா படமாக வெளியான ஜவான், பாசிட்டிவான விமர்சனங்களுடன் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் முதல் நாளிலேயே ஜவான் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் தரமான சம்பவம் செய்துள்ளது. அதன்படி ஜவான் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 130 கோடி

'ஜவான்' படம் செய்த வரலாற்று சாதனை: முதல் நாளே ரூ. 129 கோடி வசூல்.!

அட்லீ இயக்கத்தில் ‘ஜவான்’ படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வந்தவர், தற்போது பாலிவுட் சென்று அங்கும் வெற்றி கொடி நாட்டியுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வெளியாகியுள்ள ‘ஜவான்’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக விஜய்யை வைத்து ஹிட் படம் கொடுத்தவர் தான் அட்லீ. தெறி, பிகில், மெர்சல் என ஹாட்ரிக் ஹிட் கொடுத்தார். இதனை தொடர்ந்து … Read more