பைக் டூரில் இருந்து சென்னை திரும்பிய அஜித் குமார்: விரைவில் துவங்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு

Ajith Viral Video: பைக் டூர் சென்றிருந்த அஜித் குமாரை சென்னை விமான நிலையத்தில் பார்த்த ரசிகர்கள் அவரை சுற்றி வளைத்தனர். ​அஜித் குமார்​மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித் குமார். படப்பிடிப்பு துவங்க தாமதமானதால் டென்மார்க், நார்வே, ஜெர்மனி ஆகிய நாடுகளில் தன் பைக்கில் டூர் சென்றார். டூரை முடித்துக் கொண்டு நேற்று துபாய் வந்தார். அங்கிருந்து சென்னை வந்து சேர்ந்தார். சென்னை விமான நிலையத்தில் அஜித் குமார் நடந்து சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ … Read more

சந்திரயான்-3 பட்ஜெட் இவ்வளவு தானா… ஆதிபுருஷ் படத்தை வம்பிழுக்கும் ரசிகர்கள்!

High Budget Movies Than Chandrayaan-3: இஸ்ரோ நிறுவனத்தின் சந்திரயான்-3 விண்கலத்தின் பட்ஜெட்டை விட பல ஹாலிவுட், பாலிவுட் படங்கள் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. 

"இன்று 500 கோடி வசூலிக்கும் படங்களில் ஒன்றுமே இல்லை. வன்முறை மட்டுமே!"- தங்கர் பச்சான் கருத்து

`சொல்ல மறந்த கதை’, `அழகி’, `பள்ளிக்கூடம்’, `ஒன்பது ரூபாய் நோட்டு’, `அம்மாவின் கைபேசி’, `களவாடிய பொழுதுகள்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் தங்கர் பச்சான். ஒளிப்பதிவாளராகவும் பல படங்களில் பணியாற்றியவர். மெல்லிய உணர்வுகளைத் திரைப்படத்தின் வழியே கடத்துவதில் கைதேர்ந்த இயக்குநரான இவர், தற்போது ‘கருமேகங்கள் கலைகின்றன’ எனும் படத்தை இயக்கியுள்ளார். பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு, எஸ். ஏ. சந்திரசேகர், அதிதி பாலன் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். தந்தை மகனுக்கு இடையேயானப் பாசப்போராட்டதை மையமாகக் … Read more

திருமணநாளை ஒன்றாக கொண்டாடிய பஹத் பாசில் – சாந்தனு பாக்யராஜ்

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர வாரிசு நடிகர்களாக களம் இறங்கி தங்களது திறமையால் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று தங்களுக்கென தனித்தனி இடத்தை தக்க வைத்துள்ளவர்கள் மலையாள நடிகர் பஹத் பாசிலும், நடிகர் சாந்தனு பாக்கியராஜும். பஹத் பாசில் நடிகை நஸ்ரியாவையும், சாந்தனு நடிகை மற்றும் டான்சரான கிகி விஜய்யையும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் இயக்குனர் விஜய் தனது நட்பு வட்டாரத்துக்காக ஏற்பாடு செய்திருந்த பார்ட்டி ஒன்றில் இந்த நட்சத்திர ஜோடிகள் கலந்து கொண்டனர். இரண்டு … Read more

King of Kotha Twitter Review: துல்கர் பாஸ் ஆனாரா..? கிங் ஆஃப் கோதா ட்விட்டர் விமர்சனம் இதோ!!

சென்னை: மலையாள முன்னணி நடிகரான துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கோதா திரைப்படம் இன்று வெளியானது. அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் பான் இந்தியா படமாக வெளியான கிங் ஆஃப் கோதாவுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இதனால், இந்தப் படத்துக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், கிங் ஆஃப் கோதா படத்திற்கு

முதல்வராக ஜோதிகா..பத்திரிகையாளராக சிம்பு..வாத்தியாராக விஜய்..இணையத்தில் வைரலாகும் தளபதி 68 கதை..!

விஜய் லியோ படத்தை முடித்துவிட்டு தளபதி 68 படத்திற்காக தயாராகி வருகின்றார். தற்போது லியோ படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படம் அக்டோபர் மாதம் திரையில் வெளியாகவுள்ளது. எனவே இப்படம் வெளியான பின்னர் தான் தளபதி 68 படத்தை பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என இப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு கூறியுள்ளார். இந்நிலையில் வெங்கட் பிரபு எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் அவரிடம் தளபதி 68 படத்தை பற்றி தான் கேள்வி கேட்கப்பட்டு வருகின்றது. … Read more

கேப்டன் மில்லர் : புது அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'. சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சுந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வருகின்ற டிசம்பர் 15ம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது. ஏற்கனவே இதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது தொடர்ந்து விரைவில் இந்த படத்திலிருந்து … Read more

Jailer Box Office: காத்துவாங்கும் ஜெயிலர் திரையரங்குகள்… 2வது வாரம் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ!

சென்னை: கடந்த 10ம் தேதி வெளியான ஜெயிலர் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆரம்பத்திலிருந்தே பாக்ஸ் ஆபிஸில் ஜெயிலருக்கு நல்ல ஓபனிங் கிடைத்ததால், முதல் வாரம் 375 கோடி ரூபாய் வரை வசூலித்தது. ஆனால், இரண்டாவது வாரத்தில் நிலைமை படுமோசமானதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், ஜெயிலர் வெளியான இரண்டு வாரங்களில் மொத்தம் எவ்வளவு

விடாமுயற்சியை கைவிட்ட லைகா, அதனால் பைக் டூரிலியே இருக்கும் அஜித்?: உண்மை…

அஜித் குமார் நடிக்கவிருக்கும் விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்குவார், அனிருத் இசையமைப்பார் என லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது. அதன் பிறகு படம் குறித்து எந்த அப்டேட்டும் இல்லை. ஜெயிலர் இன்னும் பாக்கல, ஆனால்.. Vijay Devarkonda.. படப்பிடிப்பு கடந்த மே மாதமே துவங்குவதாக கூறப்பட்டது. ஆகஸ்ட் மாதமும் முடியப் போகிறது. ஆனால் இன்னும் படப்பிடிப்பு துவங்கவில்லை. இந்நிலையில் தான் விடாமுயற்சியை லைகா ப்ரொடக்ஷன்ஸ் கைவிட்டுவிட்டது என தகவல் வெளியானது. அண்மைச் செய்திகளை உடனுக்குடன் … Read more

ரஜினி 170 எப்போது துவங்குகிறது

'ஜெயிலர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்கிறார். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். அமிதாப் பச்சன், சர்வானந்த், பஹத் பாசில், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது விறுவிறுப்பாக முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் தொடக்க விழா பூஜையை வருகின்ற ஆகஸ்ட் 26ம் தேதி நடத்த படக்குழுவினர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக … Read more