Rajinikanth: உத்தர பிரதேசம் சென்ற காரணம்; யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது ஏன்? – ரஜினி விளக்கம்

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் பெரிய அளவில் ஹிட்டாகி இருக்கிறது. இதனால் ரஜினிகாந்த், இமயமலை, ஜார்க்கண்ட் உட்பட வடமாநிலத்திற்கு ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது லக்னோ சென்று உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத்துடன் சேர்ந்து ஜெயிலர் படத்தைப் பார்த்தார். படத்தின் சிறப்புக் காட்சியை காண ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்தும் சென்றிருந்தார். இதையடுத்து ரஜினிகாந்த் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இல்லத்திற்குச் சென்று யோகி ஆதித்யநாத் காலைத் … Read more

வெறித்தனமாக வொர்க்-அவுட் செய்யும் பொம்மி பிரகர்ஷிதா!

நடிகை பிரகர்ஷிதா 18 ஆண்டுகளுக்கு பின் சின்னத்திரையில் ரீ-எண்ட்ரி கொடுக்கிறார். அவர் நடிகை ராதிகா சரத்குமாருடன் 'தாயம்மா' என்ற சீரியலில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த தொடரானது பொதிகை சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்நிலையில், நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் திரையில் நடிக்க வரும் பிரகர்ஷிதா பிட்னஸுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஜிம்மில் வெறித்தனமாக வொர்க்-அவுட் செய்து வருகிறார். தற்போது அந்த வொர்க்-அவுட் வீடியோவானது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. பிரகர்ஷிதாவின் ரீசெண்ட் லுக்கை பார்க்கும் பலரும் அவரை … Read more

Kizhakku Vaasal: எங்க பொண்ணை தப்பா பேசாதீங்க.. தயாளனிடம் ஆத்திரப்பட்ட சாமியப்பன்!

சென்னை: விஜய் டிவியில் புதிதாக தன்னுடைய ஒளிபரப்பை துவங்கியுள்ளது கிழக்கு வாசல் தொடர். முதல் வாரத்திலேயே இந்தத் தொடர் ரசிகர்களை கவர்ந்து டிஆர்பியிலும் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. இந்தத் தொடரில் லீட் கேரக்டரில் விஜய்யின் அப்பா எஸ்ஏசி நடித்து வருகிறார். இது இந்தத் தொடருக்கு சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது. ரேணுகாவிற்காக தயாளனிடம் ஆத்திரப்பட்ட சாமியப்பன்: விஜய்

தளபதியின் 'குஷி' படம் போல.. விஜய் தேவரகொண்டாவின் ஆசை நிறைவேறுமா.?

‘அர்ஜுன் ரெட்டி’ படம் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு பரிட்சயமான முகமாக மாறியவர் விஜய் தேவரகொண்டா. ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து நடித்த ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றார். இந்நிலையில் தற்போது ‘குஷி’ படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்திற்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் விஜய் தேவரகொண்டா. இவரது நடிப்பில் கடைசியாக ‘லைகர்’ படம் வெளியானது. எக்கச்சக்கமான நெகட்டிவ் விமர்சனங்களை குவித்த இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் படு தோல்வியை சந்தித்தது. இந்தப்படத்திற்காக … Read more

இசை ஆல்பத்தில் நடித்த ஸ்வாதி ரெட்டி

'சுப்பிரமணியபுரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஸ்வாதி ரெட்டி, அதன்பிறகு கனிமொழி, போராளி, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், யாக்கை, திரி படங்களில் நடித்தார். 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லை. நடித்து முடித்துள்ள இரண்டு தெலுங்கு படங்களும் வெளிவரவில்லை. இந்த நிலையில் அவர் சாய் தரம் தேஜூடன் 'சோல் ஆப் சத்யா' என்ற வீடியோ இசை ஆல்பம் ஒன்றில் நடித்துள்ளார். 'சத்யாவின் … Read more

KT Kunjumon: பிரபல தயாரிப்பாளரை கடுப்பாக்கிய சரத்குமார்.. என்ன விஷயம் தெரியுமா?

சென்னை: பிரபல தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் தயாரிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள படம் ஜென்டில்மேன் 2. கடந்த 1993ம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த ஜென்டில்மேன் படத்தின் இரண்டாவது பாகத்தைதான் தற்போது இத்தனை ஆண்டுகள் கழித்து தயாரிக்கவுள்ளார் குஞ்சுமோன். இந்தப் படத்தின் பூஜை கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பல உருக்கமான விஷயங்களை குஞ்சுமோன்

கண்ணீர் விட்டு தேம்பி தேம்பி அழுத 'புஷ்பா' பட நடிகை: வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் அனசுயா பரத்வாஜ். இவர் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி சினிமாவில் நுழைந்தவர். ‘புஷ்பா’ படத்தில் வில்லியாக நடித்ததன் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். இந்நிலையில் அனசுயா பரத்வாஜ் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பதிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் ரசிகர்களுக்கும் பரிட்சயமான முகமான அனசுயா, கண்ணீர் மல்க தேம்பி தேம்பி அழும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனுடன் ஒரு நீண்ட பதிவு ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார். அனுசுயாவின் … Read more

தமிழ்நாட்டில் இருந்து அனிருத்தை கடத்திட்டு போய்டுவேன் – விஜய் தேவரகொண்டா

செப்டம்பர் 1 அன்று எங்க படம் குஷி வெளியாகிறது. கண்டிப்பாக எல்லோரும் பாருங்க உங்களுக்கு குஷி ஏற்படுத்தும் என்று தமிழில் பேசினார் நடிகர் விஜய் தேவரகொண்டா.

50வது வயதில் இரண்டாவது திருமணமா? சுகன்யா அளித்த பதில்

1991ம் ஆண்டில் பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து என்ற படத்தில் அறிமுகமானவர் சுகன்யா. அதன் பிறகு மகாநதி, சின்ன கவுண்டர், வால்டர் வெற்றிவேல், இந்தியன் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர், 2002ம் ஆண்டில் ஸ்ரீதரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறினார். என்றாலும் ஓராண்டுக்குள் திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவனை பிரிந்தார். அதன்பிறகும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்தவர், கடைசியாக 2019ம் ஆண்டில் திருமணம் என்ற படத்தில் நடித்தார். … Read more

A.R.Rahman – என்னது சிம்பு படத்துக்கு இசையமைக்கிறேனா?.. என்ன இதெல்லாம்.. கேள்வி எழுப்பிய ஏ.ஆர்.ரஹ்மான்

சென்னை: A.R.Rahman (ஏ.ஆர்.ரஹ்மான்) சிம்புவின் 48ஆவது படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாக தகவல் வெளியானது. உலக அளவில் பிரபலமான ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஆஸ்கர்கள், கோல்டன் குளோப் விருதுகள், கிராமி விருதுகள் என ஏகப்பட்ட விருதுகளை வென்றிருக்கிறார். அவர் சமீபகாலமாக மீண்டும் தமிழில் கவனத்தை அதிகம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அதன்படி அவரது இசையமைப்பில் பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2,