கமலின் புதிய படத்தில் மலையாள இசையமைப்பாளர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் தயாரித்து, நடித்த ‛விக்ரம்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து ஏற்கனவே தான் நடித்து சூப்பர் ஹிட் ஆன சில படங்களின் இரண்டாம் பாகங்களை அடுத்தடுத்து தயாரிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில், விக்ரம் படத்தை அடுத்து மலையாளத்தில் மாலிக் உட்பட பல படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் கமல். இந்த படத்திற்கான கதையை கமல்ஹாசனே எழுதி இருப்பதாக கூறப்படுகிறது. விக்ரம் படத்திற்கு அனிருத் சிறப்பாக … Read more

ஷாருக்கான் மகன் ஆரியன்கான் பாஸ்போர்ட்டை திரும்ப வழங்க உத்தரவு

கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை மருந்து பயன்படுத்திய விருந்து நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன்கானும் கலந்து கொண்டார் என்ற குற்றத்திற்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஷாருக்கானின் மகன் உட்பட 8 பேரை கைது செய்தார்கள். அதையடுத்து நடந்த தீவிர விசாரணைக்கு பிறகு ஆரியன்கான் சிறையில் அடைக்கப்பட்டார். பலமுறை ஷாருக்கான் தரப்பில் இருந்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட பிறகு ஆரியன்கானுக்கு ஜாமீன் கிடைத்தது. … Read more

‛பொன்னியின் செல்வன்' – விக்ரமின் டீசருக்கான டப்பிங் வீடியோ வெளியானது

மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் டீசருக்காக விக்ரம் 5 மொழிகளில் டப்பிங் பேசிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் விக்ரம் தனது ஆதித்த கரிகாலன் கேரக்டருக்கு டப்பிங் பேசும் … Read more

கொட்டும் கனமழை.. வெள்ளப்பெருக்கு- 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை !!

தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் உட்பட அனைத்து மாவட்டங்களிலிலும் ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீர் நிலைகள் நிரம்பி உள்ளன. மேலும் ஆயிரக்கணக்கான குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் முடங்கி கிடக்கின்றனர். நகர் பகுதிகளில் கூட சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மழையும் தொடர்ந்ததால் கடந்த 11ஆம் தேதி முதல் நேற்று வரை பள்ளி, கல்லூரிகளுக்கு 3 … Read more

ஜூலை 15: இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide

ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதை தொகுத்து உங்களுக்கு வழங்குவது இந்தத் தொடரின் நோக்கம். இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்: திரையரங்கு The Warrior (தெலுங்கு) – ஜூலை 14இரவின் நிழல் (தமிழ்) – ஜூலை 15கார்கி (தமிழ்) – ஜூலை 15மை டியர் பூதம் (தமிழ்) – ஜூலை 15 நிலை மறந்தவன் … Read more

ஆக., 31ல் ‛பிசாசு 2' ரிலீஸ்

‛பிசாசு' படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள படம் ‛பிசாசு 2'. பூர்ணாவும் முக்கிய டேத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். முதல்பாகத்தை போன்று இந்த படமும் திரில்லர் பாணியில் தயாராகி உள்ளது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் வெளியாகிறது. ஆண்ட்ரியாவே முதன்முறையாக தெலுங்கில் தனது குரலில் டப்பிங் பேசி உள்ளார். இந்நிலையில் இந்த படம் வருகிற ஆக., 31ல் விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுபற்றி … Read more

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் : சிவன் சீனிவாசன் மீண்டும் தலைவராக தேர்வு

சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு 3 வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 2022- 2024ம் ஆண்டுக்கான தேர்தல் நடந்தது. இதில் மூன்று அணிகள் போட்டியிட்டன. தற்போதைய தலைவர் ரவிவர்மா தலைமையில் ஓர் அணியும், முன்னாள் தலைவர் சிவன் சீனிவாசன் தலைமையில் ஓர் அணியும், புதிதாக ஆதித்யா தலைமையில் ஓர் அணியும் போட்டியிட்டன. இதில் சிவன் சீனிவாசன் வெற்றி பெற்று தலைவர் ஆனார். அவர் மூன்றாவது முறையாக தலைவராக வெற்றி பெற்றுள்ளார். செயலாளராக போஸ் … Read more

சரத்குமார் ஆரம்பிக்கும் புது கழகம்! #Classics

ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர் என்று பலராலும் நினைக்கப்பட்ட சரத்குமார், முதன் முறையாக நவம்பர் மாதம் ஜூனியர் விகடனில் தமிழக முதல்வரைத் தாக்கி கொடுத்த பரபரப்புப் பேட்டிக்குப் பிறகு முழுமையாக அரசியலில் குதித்துவிட்டார். சரத்குமார் பல ஊர்களுக்குச் சென்று பொதுக்கூட்டங்களில் பேசுவதும் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டங்களில் கலந்துகொள்வதுமாக பிஸியாக இருக்கிறார். ரஜினிகாந்தின் ‘முத்து’ எவ்வளவு எதிர்பார்ப்புகளுக்கிடையே ரிலீஸானதோ, அதே அளவு எதிர்பார்ப்பு சரத்குமாரின் லேட்டஸ்ட் படமான ‘மகாபிரபு’வுக்கும் இருந்தது. இந்தப் படத்தில் விஜயன், சண்முகசுந்தரம் போன்ற வக்கீல்கள் தாக்கப்பட்ட … Read more

சாய்பல்லவிக்கு சிபாரிசு செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்

சாய்பல்லவி நடிப்பில் வரும் ஜூலை 15ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் கார்கி. நிவின்பாலி தமிழில் நடித்த ரிச்சி படத்தை இயக்கிய கவுதம் ராமச்சந்திரன் என்பவர் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். இன்னொரு கதாநாயகியாக ஐஸ்வர்ய லட்சுமி நடித்துள்ள இந்த படத்தில் சாய் பல்லவி ஆசிரியையாகவும் தன் தந்தை மீது போடப்பட்ட பொய்யான வழக்குக்கு எதிராக போராடுபவராகவும் நடித்துள்ளார். இந்த நிலையில் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக முதலில் பரிசீலனையில் இருந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தான் என்கிற … Read more

லீனா மணிமேகலை மீது காஷ்மீர் பைல்ஸ் இயக்குனர் பாய்ச்சல்

சர்ச்சையான விஷயங்களில் மட்டுமே சிக்கி அதன்மூலம் பிரபலமானவர் இயக்குனர் லீனா மணிமேகலை. இவர் தற்போது காளி என்கிற பெயரில் இயக்கியுள்ள டாக்குமென்டரி படம் மூலம் கடந்த சில நாட்களாக மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். தனது படத்தின் போஸ்டரில் காளி புகை பிடிப்பது போன்றும், இதை நியாயப்படுத்துவது போன்று சிவன்-பார்வதி வேடமிட்ட நபர்கள் புகை பிடிப்பது போன்றும் போட்டோக்களை வெளியிட்டு இந்துமத உணர்வாளர்களின் உணர்வுகளுடன் விளையாடி, கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார். அதுமட்டுமல்ல தான் உருவாக்கியுள்ள டாக்குமென்டரி படத்தில், “என்னுடைய … Read more