தனிப்பிறவி, அவ்வை சண்முகி, யசோதா – ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (மார்ச் 19) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்… சன் டிவிகாலை 09:30 – அழகு ராஜாமதியம் 03:00 – காஞ்சனாமாலை 06:30 … Read more

Pathu Thala: இனிமே அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை..பத்து தல விழாவில் மனம்விட்டு பேசிய சிம்பு..!

​மீண்டு வந்த சிம்பு சிம்புவின் திரைவாழ்க்கை பல ஏற்ற இறக்கங்களை கொண்டதாக இருந்து வருகின்றது. மன்மதன், வல்லவன், விண்ணை தாண்டி வருவாயா என வெற்றிகளாக கொடுத்து வந்த சிம்பு ஒரு கட்டத்தில் படமே வெளியாகாமல் இருந்தார். மேலும் பல சர்ச்சைகளை சந்தித்து இனி சிம்புவின் திரைவாழ்க்கை அவ்வளவுதான் என்ற பேச்சுக்கு ஆளானார் சிம்பு. ஆனாலும் இந்த பேச்சையெல்லாம் அவரின் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் காலி செய்ததுஎன சொல்லலாம். அப்படத்தின் மாபெரும் வெற்றி சிம்புவை மீண்டும் வெற்றி … Read more

Dhanush: தனுஷுக்கு மறுபடியும் நல்ல ஆள் கிடைச்சுடுச்சு: ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். அதற்காக தான் தாடி, மீசை எல்லாம் வளர்த்திருக்கிறார். கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடித்து வருகிறார். அவர் தனுஷுடன் சேர்ந்து நடிப்பது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில் தனுஷின் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மாரி செவ்ராஜுடன் சேர்ந்து மீண்டும் படம் பண்ணப் போகிறாராம் தனுஷ். அந்த படத்தில் நடிப்பதுடன் தயாரிக்கவும் முடிவு செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. … Read more

கோலிவுட்டில் புதிய கூட்டணி! செல்வராகவன் படத்தில் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி?

ரேடியோ ஜாக்கியாக இருந்து மக்கள் மத்தியில் பிரபலமாகி தற்போது நடிகராக பல ரசிகர்களை கவர்ந்திருப்பவர் ஆர்.ஜே.பாலாஜி.  தனது முதல் படத்திலேயே இவர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். LKG படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘வீட்ல விசேஷம்’ படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது, இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக அமைந்திருந்தது.  அதனைத்தொடர்ந்து வெளியான அதிரடி – த்ரில்லர் திரைப்படமான ‘ரன் பேபி ரன்’ ஆர்.ஜே.பாலாஜியின் நடிப்புத்திறனை மேம்படுத்தி காண்பித்தது.  இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி … Read more

‘நாட்டு நாட்டு Team-க்கு…’- வைரலாகும் பிரபுதேவாவின் அசத்தல் நடன வீடியோ!

95-வது ஆஸ்கர் விருது விழாவில், சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை பெற்றுவந்தது ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல். ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டனர். ஆஸ்கர் விருதை பெற்றதையடுத்து, ஆர்.ஆர்.ஆர். படக்குழுவுக்கு நடிகர்கள், திரைக்கலைஞர்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரை பலரும் பாராட்டினர். அந்தவரிசையில் நடன இயக்குநரும் நடிகருமான பிரபுதேவாவும் படக்குழுவுக்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார். இதில் விசேஷம் என்னவென்றால், தனக்கே உரிய பாணியில் நடனத்தின்மூலம் பாராட்டியுள்ளார் … Read more

Dhanush, Meena:பாடி டிமான்டை தவிர உங்களுக்கு வேறு எதுவும் தெரியாதா?: பயில்வானை விளாசும் தனுஷ், மீனா ரசிகர்கள்

Dhanush, Meena fans fume:தனுஷ், மீனா பற்றி பேசிய நடிகரும், மூத்த பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதனை சமூக வலைதளவாசிகள் இன்னும் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். ​தனுஷ்​காதல் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்து வாழும் தனுஷும், கணவர் வித்யாசாகரை இழந்த நடிகை மீனாவும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள். இருவருக்கும் வயசு இருக்கு, பாடி டிமான்ட் இருக்கும். அதனால் திருமணம் செய்து கொள்வதில் தப்பில்ல என யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார் பயில்வான் ரங்கநாதன். ​Dhanush, Meena: தனுஷுக்கும், … Read more

Rajini: ரஜினி ஒரு சிறந்த நடிகரா ?அவருக்கு ஏன் விருது ?பிரபல இயக்குனரின் பேச்சால் கிளம்பிய சர்ச்சை..!

​சூப்பர்ஸ்டார் தமிழ் சினிமாவில் கடந்த நாற்பது ஆண்டுகளாக சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினி. குணச்சித்திர நடிகராக தன் திரைப்பயணத்தை துவங்கி பின்பு வில்லனாக மிரட்டி மெல்ல மெல்ல ஹீரோவாக முன்னேறி சூப்பர்ஸ்டார் அந்தஸ்தை அடைந்தார் ரஜினி. இவரின் திரைவாழ்க்கையில் தோல்வி படங்கள் என்பதை நாம் விறல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு வெற்றி படங்களாக கொடுத்து வந்த ரஜினி கடந்த பத்து வருடங்களாக ஒரு வெற்றிப்படத்திற்காக போராடி வருகின்றார். எந்திரன் படத்திற்கு பிறகு ரஜினிக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு … Read more

‘இலவச டிக்கெட் இல்லை…’ ஆஸ்கர் விழாவில் கலந்து கொள்ளவே இத்தனை கோடி செலவுசெய்தாரா ராஜமௌலி?

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த பாடலுக்கு, கடந்த 13-ம் தேதி ஆஸ்கர் விருது கிடைத்திருந்த நிலையில், அவ்விருது விழாவில் பங்கேற்க அப்படத்தின் இயக்குநர் ராஜமௌலி உள்ளிட்டோருக்கு இலவச டிக்கெட் வழங்கப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. . 95-வது ஆஸ்கர் விருது விழாவில், சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை பெற்றுவந்தது ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல். ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டனர். ஆஸ்கர் மேடையில் விருதை … Read more

உத்தவ் தாக்கரே – ரஜினி திடீர் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ‛ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். அவருடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், சிறப்பு வேடத்தில் மோகன்லால், யோகி பாபு உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. சற்று ஓய்வில் உள்ள ரஜினி தற்போது மும்பையில் முகாமிட்டுள்ளார். நேற்று இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல்ஒருநாள் கிரிக்கெட் போட்டியை நேரில் சென்று ரசித்தார். இந்நிலையில் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவை … Read more

கோயில் கட்ட நடிகை காஞ்சனா இடம் கொடுக்க என்ன காரணம் ?

சென்னையில் பழம்பெரும் நடிகை காஞ்சனா தானமாக எழுதிக் கொடுத்த நிலத்தில் ஜி.என்.செட்டி சாலையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்ட பத்மாவதி தாயார் கோயில் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. தமிழ் திரை உலகில் பிரபல நடிகையாக ரசிகர்களின் மனதில் இடம் பெற்ற காஞ்சனா, திருப்பதி ஏழுமலையான் பக்தையாக மாறி தனது பலகோடி மதிப்புள்ள சொத்துக்களை தானமாக அளித்துள்ளார். அவர் அளித்த நிலத்தில்தான் இன்று திருச்சானூரில் இருந்து பத்மாவதி தாயார் சென்னைக்கு எழுந்தருளி அருள்பாலிக்கிறார். பத்மாவதி … Read more