Pathu Thala: இனிமே அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை..பத்து தல விழாவில் மனம்விட்டு பேசிய சிம்பு..!

​மீண்டு வந்த சிம்பு சிம்புவின் திரைவாழ்க்கை பல ஏற்ற இறக்கங்களை கொண்டதாக இருந்து வருகின்றது. மன்மதன், வல்லவன், விண்ணை தாண்டி வருவாயா என வெற்றிகளாக கொடுத்து வந்த சிம்பு ஒரு கட்டத்தில் படமே வெளியாகாமல் இருந்தார். மேலும் பல சர்ச்சைகளை சந்தித்து இனி சிம்புவின் திரைவாழ்க்கை அவ்வளவுதான் என்ற பேச்சுக்கு ஆளானார் சிம்பு. ஆனாலும் இந்த பேச்சையெல்லாம் அவரின் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் காலி செய்ததுஎன சொல்லலாம். அப்படத்தின் மாபெரும் வெற்றி சிம்புவை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்து வந்தது. அதைத்தொடர்ந்து வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் சிம்பு ஒரு சிறப்பான நடிகர் என்பதை நமக்கு மேலும் ஒருமுறை உணர்த்தியது. இதையடுத்து தற்போது பத்து தல படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய காத்துக்கொண்டிருக்கிறார் சிம்பு

​கமலுடன் கூட்டணி பத்து தல படத்திற்கு பிறகு சிம்பு எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்து வந்தார். இந்நிலையில் தான் சிம்பு மற்றும் கமலின் கூட்டணி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தை மிகப்பிரமாண்டமாக தயாரிக்க இருக்கின்றார் கமல். 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் சிம்புவின் திரைவாழ்க்கையை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்லும் என்ற நம்பிக்கையில் அவர் உள்ளார். மேலும் இப்படத்திற்காக சிம்பு தன் சம்பளத்தையும் குறைத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன

​எதிர்பார்ப்பு இது ஒருபக்கம் இருக்க இன்னும் சில நாட்களில் சிம்புவின் நடிப்பில் வெளியாகவுள்ள பத்து தல படத்தின் மீது தான் ரசிகர்களின் பார்வை இருந்து வருகின்றது. முதலில் பத்து தல படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் தான் நடித்தார். ஆனால் சிம்பு நடித்த காட்சி சிறப்பாக அமைந்ததால் அவரின் ரோலை தயாரிப்பாளரும், இயக்குனரும் விரிவுபடுத்தி பத்து தல படத்தை சிம்புவின் படமாக மாற்றியுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கிருஷ்ணாவின் இயக்கத்தில் சிம்பு ,கௌதம் கார்த்திக் நடித்த இப்படம் மார்ச் 30 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது. இப்படமும் சிம்புவிற்கு ஒரு வெற்றி படமாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்

​பேச்சு இந்நிலையில் பத்து தல படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பேசிய சிம்பு, இந்த விழாவில் நான் அழுதுவிடக்கூடாது என்ற ஒரே நோக்கத்தில் தான் நான் வந்தேன். இனிமே சோக சீனே கிடையாது, சந்தோஷமான சீன் தான். நான் கஷ்டப்படும் போது எனக்கு ஆதரவாக இருந்து என்னை தூக்கி விட்டது ரசிகர்களாகிய நீங்கள்தான். இப்போ நான் திரும்பி வந்துட்டேன். எனவே இனி சோஷியல் மீடியாக்களில் போய் மற்றவர்களுடன் சண்டையிட வேண்டாம். இனிமே அமைதியாக உட்கார்ந்து நான் என்ன பண்ணப்போறேன்னு மட்டும் பாருங்க.. இனி நான் உங்களை ஏமாற்றமாட்டேன் என புது உத்வேகத்துடன் பேசியுள்ளார் சிம்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.