ஹோலி பண்டிகையில் ‛லால் சலாம்' படத்தை துவங்கியது ஏன் ? – ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், டைரக்ஷன் பக்கம் தனது கவனத்தை திருப்பி தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து வை ராஜா வை என்கிற படத்தையும் இயக்கினார். இந்தநிலையில் மிகப்பெரிய இடைவெளி விட்டு தற்போது லால் சலாம் என்கிற படத்தை இயக்கி வருகிறார் ஐஸ்வர்யா. இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, தனது மகளுக்காக இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் … Read more

கிரிக்கெட் உடையுடன் யுவா பட போட்டோஷூட்டில் கலந்து கொண்டு தேர்வான காந்தாரா நாயகி

கடந்த வருடம் கன்னடத்தில் வெளியாகி, கன்னடம் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகளிலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று பாலிவுட்டிலும் கவனத்தை ஈர்த்த படம் காந்தாரா. ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சப்தமி கவுடா. ஆதிவாசி இனத்தை சேர்ந்த காவல்துறையில் பணிபுரியும் ஒரு பெண்ணாக நடித்து ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றார். இந்த படத்தை தொடர்ந்து அவருக்கு பாலிவுட்டிலும் வாய்ப்பு தேடி வந்துள்ளது. இந்த நிலையில் கன்னட திரை உலகின் மறைந்த மூத்த நடிகர் ராஜ்குமாரின் … Read more

மும்பை விமான நிலையத்தில் இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா – விக்னேஷ் சிவன்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியர் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்கள். அதையடுத்து தங்கள் குழந்தைகளுடன் தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டபோதும் அவர்களின் முகத்தை இதுவரை வெளி உலகிற்கு காண்பிக்காமல் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் அஜித்தின் 62வது படத்திலிருந்து விலகிய விக்னேஷ் சிவன் அதையடுத்து விஜய் சேதுபதி – அபிஷேக் பச்சனை வைத்து ஒரு பான் இந்தியா படத்தை இயக்கப் போவதாக கூறப்படுகிறது. கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த … Read more

வித்யாபாலன் ஏற்படுத்திய பரபரப்பு போட்டோஷூட்

தேசிய விருது பெற்ற நடிகை வித்யாபாலன். ஹிந்தியில் தி டர்டி பிக்சர்ஸ் உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களில் நடித்துள்ளார். தமிழில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் அவரது மனைவியாக ஒரு குடும்ப பாங்கான வேடத்தில் நடித்தார். தற்போது கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்த நிலையில் நியூஸ் பேப்பர் ஒன்றை மட்டுமே வைத்து தனது உடம்பை மறைத்தபடி அவர் ஒரு போட்டோ சூட் நடத்தி இருக்கிறார். இந்த போட்டோக்களை எடுத்த … Read more

லியோவில் அதிநவீன கேமரா : ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தகவல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். ஏற்கனவே விஜய் நடித்த நண்பன், பீஸ்ட் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த இவர், தற்போது லியோ படத்தின் மூலம் மூன்றாவது முறையாகவும் விஜய் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த நிலையில், லியோ படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ஒரு அதிநவீன கேமரா குறித்த ஒரு தகவலை சோசியல் மீடியாவில் அவர் … Read more

ஒரே நேரத்தில் மலையாளம், ஹிந்தியில் த்ரிஷ்யம் 3 : அஜய் தேவ்கன் விருப்பம்

மலையாளத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான த்ரிஷ்யம் திரைப்படம் தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாது ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. ஹிந்தியில் அஜய் தேவ்கன், ஸ்ரேயா, தபு ஆகியோர் நடித்திருந்தனர். அதேபோல இந்தப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி முதல் பாகத்தை போல மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதன் முதல் பாகத்திற்கு ஹிந்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்காவிட்டாலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்று கிட்டத்தட்ட … Read more

விஜய் குறித்த சர்ச்சை : தாயார் ஷோபா விளக்கம்

விஜய்க்கும், அவரது தந்தையான இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகருக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வரும் நிலையில், வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பெற்றோரை அவர் தவிர்த்ததாக விமர்சனம் எழுந்தது. அதோடு வாரிசு என்ற குடும்ப சென்ட்டிமென்ட் படத்தில் நடித்த விஜய் அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த பெற்றோரை சம்பிரதாயமாக மட்டுமே வரவேற்றார் என்றும் இணையதளத்தில் தொடர்ந்து அவருக்கு எதிரான கமெண்ட்டுகள் வலம் வந்தன. இந்த நிலையில் சமீபத்தில் விஜய்யின் தாயாரான ஷோபா சந்திரசேகர் … Read more

பத்து தல படத்தை அதிகம் எதிர்பார்க்கும் அனு சித்தாரா

மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க கதாநாயகிகளில் ஒருவராக பிஸியாக நடித்து வருபவர் நடிகை அனு சித்தாரா. இவரை பொறுத்தவரை கதையை தாங்கி பிடிக்கும் கதையின் நாயகியாக, முன்னணி ஹீரோவுடன் டூயட் பாடும் ஜோடியாக, ஒரே ஒரு காட்சியில் மட்டுமே வந்து செல்லும் கெஸ்ட் ரோல் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் மறுப்பு சொல்லாமல் ஏற்றுக் கொண்டு நடிப்பவர். இந்த நிலையில் தற்போது தமிழில் சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள பத்து தல படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் … Read more

வரலாற்று படம் மூலம் மலையாளத்தில் நுழைந்த ‛வேதாளம்' வில்லன்

தமிழில் அஜித் நடித்த வேதாளம் படத்தில் வில்லன்களில் ஒருவராக அறிமுகமானவர் நடிகர் கபீர் துஹான் சிங். அந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியின் றெக்க மற்றும் விஷாலின் ஆக்சன் ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார். அதேசமயம் அதிக அளவிலான தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி பிஸியாக நடித்து வருகிறார். சினிமாவில் நுழைந்த இந்த எட்டு ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடித்துவிட்ட கபீர் துஹான் சிங் தற்போது முதன்முறையாக மலையாளத்திலும் … Read more

“சப்தம்” படத்தில் இணைந்த லைலா

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் ஒருகாலத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் லைலா. திருமணம், குழந்தை பிறப்பு என வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு சென்றதால் சினிமாவை விட்டு சிலகாலம் விலகினார். நீண்ட இடைவெளிக்கு பின் கார்த்தியின் சர்தார் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். அதன்பின் வதந்தி வெப்சீரிஸில் நடித்தார். இப்போது ஈரம் படத்தின் வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி கூட்டணியில் உருவாகும் “சப்தம்” படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க லைலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் நாயகியாக, நடிகை லக்ஷ்மி … Read more