ஹீரோயின் ஆனார் யு டியூப்பர் புவனேஸ்வரி
சமூக வலைத்தளத்தின் மூலம் பிரபலமாகும் பெண்கள் திரைப்படத்துக்கு வருவது அதிகரித்துள்ளது. தற்போது முன்னணியில் உள்ள மிருனாளினி உள்பட பலர் வந்துள்ளனர். அந்த வரிசையில் அடுத்து வருகிறார் புவனேஸ்வரி. 'டியூப்லைட்' என்ற சேனல் மூலம் புகழ்பெற்ற புவனேஸ்வரி ஏற்கெனவே அஜித் நடித்த 'துணிவு' படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது 'கிறிஸ்டினா கதிர்வேலன்' என்ற படத்தின் மூலம் நாயகி ஆகியிருக்கிறார். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி திரைக்கலைக்கூடம் சார்பில் ஆர்.பிரபாகரன் தயாரிக்கிறார். எஸ். ஜே. அலெக்ஸ் பாண்டியன் இயக்குகிறார். … Read more