'மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்' கோவை குணா காலமானார்
பிரபல மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட் கோவை குணா(54), உடல்நலக்குறைவால் கோவையில் காலமானார். சின்னத்திரை நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு, அசத்தபோவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் பல குரல்களில் பேசி ரசிகர்களை கவர்ந்தவர் குணா. கோவையை சேர்ந்த இவர் கோவை குணா என்றே அழைக்கப்பட்டார். சின்னத்திரை மட்டுமல்லாது ஏராளமான மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார். குறிப்பாக நடிகர்கள் கவுண்டமணி, ஜனகராஜ் போன்றவர்களின் குரலையும், அவர்களது உடல் மேனரிசத்தையும் அப்படியே வெளிப்படுத்தும் திறமைப்படைத்தவர். கோவை மாவட்டம், சரவணம்பட்டி அடுத்த விநாயகபுரம் … Read more