பிச்சைக்காரன் 2 : முதல் 4 நிமிட காட்சி வெளியானது

நடிகரும், இசை அமைப்பாளருமான விஜய் ஆண்டனி சற்று வித்தியாசமானவர். தான் நடிக்கும் படங்களின் கதையை வெளிப்படையாக கூறுவார். அதோடு பட வெளியீட்டுக்கு முன்பே படத்தின் பல நிமிட காட்சிகளை பத்திரிகையாளர்களுக்கு வெளியிட்டு காட்டுவார். ஆனால் இந்த முறை அவர் நடித்து வரும் பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தின் முதல் 4 நிமிட(3:45 நிமிடம்) காட்சிகளை பொதுமக்களின் பார்வைக்காக இன்று (பிப்.10) மாலை 5 மணிக்கு வெளியிட்டார். கடந்த 2016ம் ஆண்டு இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் … Read more

லியோ அறிவிப்பு பாடல் உருவான விதத்தை வெளியிட்ட அனிருத்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மன்சூரலிகான் உட்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லியோ படத்தின் டைட்டில் அறிவிப்பு சமீபத்தில் வீடியோவாக வெளியிடப்பட்டதிலிருந்து இப்படம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்திருப்பதோடு, இந்த லியோ படம் எந்த மாதிரியான கதையில் உருவாகி வருகிறது என்பதையும் ரசிகர்கள் உற்று நோக்கத் தொடங்கி விட்டார்கள். சமீபத்தில் விக்ரம் … Read more

கஜோலின் போன் நம்பர் கிடைத்தால் நன்றாக இருக்கும் : கிச்சா சுதீப்

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தான் நடித்த விக்ராந்த் ரோனா திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அந்த படத்தின் ஹீரோ கிச்சா சுதீப், “ஹிந்தி தேசிய மொழி கிடையாது.. பாலிவுட் நட்சத்திரங்களும் பான் இந்திய படங்களை எடுக்கிறார்கள்.. பிற மொழிகளில் டப் செய்து வெளியிடுகிறார்கள். ஆனால் அவர்கள் வெற்றி காண்பதில்லை” என்று பேசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் கூறும்போது, “இந்தி நமது தேசிய மொழி இல்லை என்றால் பின் எதற்காக … Read more

குடும்பத்துடன் சுற்றுலாவில் குஷ்பு

தமிழ் சினிமாவின் நட்சத்திரத் தம்பதிகளில் குஷ்பு, சுந்தர் சி முக்கியமானவர். சினிமா, டிவி, அரசியல் என பல்வேறு தளங்களில் பயணித்துக் கொண்டிருந்தாலும் அடிக்கடி சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு கருத்துக்களைப் பதிவு செய்பவர் குஷ்பு. தன்னைப் பற்றியும் அடிக்கடி ஏதாவது ஒரு அப்டேட் கொடுத்துக் கொண்டிருப்பார். தற்போது குடும்பத்தினருடன் துபாயில் உள்ள பிரபலமான ரிசார்ட் ஒன்றிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கிருந்து சில புகைப்படங்களைப் பதிவிட்டு, “முயற்சியிருந்தால் எதற்கும் ஒரு வழி உண்டு. உங்களது பிஸியான நேரத்திலும் சில தருணங்களை … Read more

ஊழியரிடம் தன் காலணிகளை கையில் எடுத்துவர கூறினாரா அமைச்சர் ரோஜா?வைரல் வீடியோவுக்கு விளக்கம்

நடிகையும், ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளது பேசு பொருளாகியுள்ளது. 1990-களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. பின்னர் அரசியலிலும் கவனம் செலுத்தி வந்த நிலையில், ஆந்திர மாநிலம் நகரி சட்டப்பேரவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தற்போது ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில், அம்மாநில சுற்றுலாத் துறை அமைச்சராக உள்ளார். வழக்கமாக தனது தொகுதிக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறியும் பொழுது அந்தப் … Read more

ஷங்கரின் பிரமாண்ட படம் : ஷாரூக்கான் – விஜய்யிடம் பேச்சுவார்த்தை?

கமல் நடிக்கும் இந்தியன்-2, ராம்சரண் நடிக்கும் 17வது படம் என இரண்டு படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார் ஷங்கர். இந்த நிலையில் இந்த படங்களுக்கு பிறகு இன்னும் பிரமாண்டமான பட்ஜெட்டில் ஷங்கர் ஒரு படத்தை இயக்க உள்ளாராம். இது ஒரு அண்டர் வாட்டர் கலந்த விஞ்ஞான கதையாக உருவாக உள்ளதாம். இந்த படத்தின் பட்ஜெட் மட்டும் ரூ.900 கோடி என்கிறார்கள். இதில் நடிகர் விஜய்யையும், ஹிந்தி நடிகர் ஷாரூக்கானையும் நடிக்க வைக்க முற்கட்ட பேச்சுவார்த்தை நடப்பதாக … Read more

பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் தேதி மாற்றமா?

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், பிரபு, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பக்கத்தின் இறுதி கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆனால் நேற்றைய தினம் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் இறுதி கட்டப் … Read more

Dada Review: 'டாடா' படம் பிடிக்கலன்னா.. டிக்கெட் காசு கொடுத்துடுறேன்… சவால் விடும் பிரபலம்!

டாடா திரைப்படம் பிடிக்காவிட்டால் டிக்கெட்டுக்கான தொகையை திருப்பிக் கொடுப்பதாக சவால் விட்டுள்ளார் சினிமா பிரபலம் ஒருவர். கவின்விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார் நடிகர் கவின். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவினுக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. கடைசியாக லிஃப்ட் படத்தில் நடித்திருந்தார் கவின். அந்தப் படம் பாஸிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. கவினின் நடிப்புக்கும் பாராட்டுகள் குவிந்தன. ​ Rachitha Mahalakshmi: மறக்க முடியாத நாள்.. கதறல் … Read more

மீண்டும் கதை நாயகனான அஸ்வின்

சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த அஸ்வின் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அதன்பிறகு அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தது. 'என்ன சொல்ல போகிறாய்' என்ற படத்தில் நாயகனாக நடித்தார். இந்த படத்தின் விழாவில் '40 கதைகள் கேட்டு தூங்கிவிட்டேன்' என்று அவர் சொன்ன ஒரு வரி அவரது சினிமா வாழ்க்கையை புரட்டிப் போட்டது. பலரும் அவரை கிண்டல் கேலி செய்ய வாய்ப்புகள் நின்று போனது. அதன்பிறகு சமீபத்தில் … Read more

AK62: விஜய் – அஜித்திற்காக மோதிக்கொண்ட ரசிகைகள்..!அதுக்குன்னு இப்படியா ?

தமிழ் சினிமாவில் சமபலம் வாய்ந்த நடிகர்கள் தான் விஜய் மற்றும் அஜித். ஆனால் இவர்களின் ரசிகர்கள் இதனை ஒப்புக்கொள்ளாது தங்கள் நாயகன் தான் நம்பர் ஒன் என சண்டையிட்டு வருகின்றனர். இந்த சண்டை கடந்த 20 வருடங்களாக நடந்து வருகின்றது. சமீபத்தில் இவர்களது நடிப்பில் வாரிசு மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்கள் ஒரே தினத்தில் வெளியாகின. பொங்கலை முன்னிட்டு இவ்விரு படங்களும் திரையில் மோதின. வம்சியின் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் ஒரு குடும்ப கதையம்சம் கொண்ட கமர்ஷியல் … Read more