Dhanush: மாமா ரஜினி மாதிரியே ஒரு காரியம் செய்த தனுஷ்: பெரிய மனசு தான்

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரிந்து வாழ்வது அனைவருக்கும் தெரியும். தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா தன் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் அப்பா வீட்டில் வசித்து வருகிறார். ஐஸ்வர்யாவை பிரிந்தாலும் ரஜினியை கொண்டாடத் தவறாதவர் தனுஷ். நான் தலைவரின் தீவிர ரசிகன் என்று இன்றும் பெருமையாக கூறி வருகிறார். இந்நிலையில் தான் டாடா படத்தை பார்த்த தனுஷ் அதன் ஹீரோ கவினுக்கு போன் செய்து மனதார பாராட்டியுள்ளார். நடிப்பு ராட்சசனான தனுஷ் பாராட்டிய சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார் … Read more

Ajithkumar: மணிரத்னம் உடன் ஏற்பட்ட மனஸ்தாபம்..முக்கிய படத்திலிருந்து வெளியேறிய அஜித்..

அஜித் அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித். படத்திற்கு படம் இவரின் நட்சத்திர அந்தஸ்து உயர்ந்துகொண்டே தான் இருக்கின்றது. ரசிகர்கள் இவரை வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு ரசித்து வருகின்றனர். கடந்தாண்டு அஜித்தின் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்களின் பேராதரவினால் வசூல் ரீதியாக இப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. எனவே விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு அஜித்தின் படங்களுக்கு ஆதரவு இருப்பதால் இவரை வைத்து படமெடுக்க பல தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு … Read more

Dada, Kavin: நான் தனுஷ் பேசுறேன்.. திடீரென வந்த போன் கால்: நெகிழ்ந்து போன கவின்..!

கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‘லவ் டுடே’ படத்தினை போன்றே கவினின் ‘டாடா’ படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நீண்ட காலமாக ஒரு மிகப்பெரிய வெற்றிக்காக காத்து கொண்டிருந்த கவினுக்கு இந்தப்படம் அமோகமான துவக்கத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் ‘டாடா’ படத்திற்காக நடிகர் தனுஷிடமிருந்து கிடைத்துள்ள வாழ்த்து குறித்து எமோஷனலாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் கவின். சின்னத்திரையில் வெள்ளித்திரைக்குள் பலர் நுழைந்தாலும், அதில் சிலர் மட்டுமே வெற்றி பெறுகின்றனர். அந்த வரிசையில் … Read more

நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி

சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் பிரபு நேற்று இரவு சிறுநீரக பிரச்சினை காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டு இன்று காலை யூரித்ரோஸ்கோப்பி லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகக் கற்கள் அகற்றப்பட்டன. அவர் தற்போது பூரண உடல் நலத்துடன் இருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு பிந்தைய-பொதுவான மருத்துவ சோதனைகளுக்குப்பிறகு ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டார தகவலில் தெரியவந்துள்ளது.

ஒரு நாள் கதையில் வெற்றி

சிகை, பக்ரீத் படங்களை இயக்கிய ஜெகதீசன் சுபு இயக்கி உள்ள புதிய படம் 'இரவு'. இதனை பக்ரீத் படத்தை தயாரித்த எம்.எஸ் முருகராஜ் தயாரித்துள்ளார். அரியா செல்வராஜ் என்ற புதுமுகம் நாயகியாக அறிமுகமாகிறார். இவர்கள் தவிர மன்சூரலிகான், சுனிதா கொகய், சாந்தனா பரத், தீபா சங்கர், பொன்னம்பலம், ஜார்ஜ் மரியான் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீனிவாசன் தயாநிதி ஒளிப்பதிவு செய்கிறார். எல்.வி.முத்து கணேஷ் இசை அமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் ஜெகதீசன் சுபு கூறியதாவது : சிகை … Read more

நடராஜர் உருவப்படத்தை முதுகில் டாட்டூவாக குத்திய அபிராமி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் திரிஷா, பிரியா ஆனந்தைத் தொடர்ந்து இன்னொரு கேரக்டரில் நடிக்கிறார் அபிராமி வெங்கடாசலம். இதுகுறித்த தகவலை தனது சோசியல் மீடியாவில் தெரிவித்திருந்த அபிராமி வெங்கடாச்சலம், சிவராத்திரி அன்று காளகஸ்திக்கு செல்லும் போது சாலையில் அதிரடி நடனமாடிய ஒரு வீடியோவையும் பதிவிட்டு இருந்தார். அதையடுத்து தற்போது மீண்டும் தனது இன்ஸ்டாவில் நடராஜரின் உருவப்படத்தை தனது முதுகில் டாட்டூவாக குத்தியிருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார் அபிராமி. அதோடு பக்தி … Read more

இந்தோனேசியா சிவன் கோயில் குளத்தில் புனித நீராடிய அமலாபால்

மலையாளம், தமிழ், ஹிந்தி என மூன்று மொழிகளிலும் தலா ஒரு படத்தில் நடித்து வரும் அமலாபால், வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். சமீபகாலமாக ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு காட்டி வரும் அமலாபால், அடிக்கடி ஆலயங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் பழனி முருகன் கோயிலுக்கு சென்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்த அமலா பால், மகா சிவராத்திரி அன்று இந்தோனேசியாவில் உள்ள ஒரு சிவன் கோவிலுக்கு சென்று அங்குள்ள குளத்தில் புனித நீராடி இருக்கிறார். … Read more

விஜய்யின் லியோ படத்தில் விஜய் சேதுபதியா?

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த் , சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், கௌதம் மேனன் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது இந்த படமும் லோகேஷ் கனகராஜின் எல்சியு படம் என்கிற தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அதனால் இந்த படத்தில் கைதியில் டில்லி வேடத்தில் நடித்த கார்த்தி, விக்ரம் படத்தில் கமல் மற்றும் ரோலக்ஸாக நடித்த சூர்யா … Read more

பேண்டஸி படமாக உருவாகும் 'வீரன்'

ஹிப் ஆப் ஆதி நடித்த அன்பறிவு படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் ஆதியை வைத்து அடுத்து தயாரிக்கும் படம் 'வீரன்'. 'மரகத நாணயம்' புகழ் ஏ.ஆர்.கே. சரவன் இயக்குகிறார். படம் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகிறது. ஆதியுடன், அதிரா ராஜ், முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஆதியே இசை அமைக்கிறார். தீபக் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது. கோடை விடுமுறையில் படத்தை … Read more

ரூ.1000 கோடி வசூலைக் கடந்த 'பதான்'

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் வெளிவந்த ஹிந்திப் படம் 'பதான்'. இப்படம் தற்போது 1000 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதல் கட்ட வெளியீட்டிலேயே உலக அளவில் 1000 கோடி வசூலைக் கடந்த முதல் ஹிந்தித் திரைப்படம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இந்தியாவில் மொத்த வசூலாக 623 கோடி, நிகர வசூலாக 516 கோடி, வெளிநாடுகளில் மொத்த வசூலாக 377 கோடியை … Read more