ஆஸ்கர் 2023-ல் ராக்கெட்ரி… மகிழ்ச்சியில் மாதவன் போட்ட போஸ்ட்!

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை “ராக்கெட்ரி”யாக கடந்த ஜூலை மாதம் திரைக்கு கொண்டு வந்திருந்தார் நடிகர் மாதவன். விஞ்ஞானியான நம்பி நாராயணன், நாசா வேலையை உதறியபின், நாட்டுக்கே துரோகம் செய்ததாக பழி சுமத்தப்பட்டதை மையமாக வைத்து இப்படத்தை நடிகர் மாதவன் எழுதி, இயக்கி நம்பி நாராயணனான நடிக்கவும் செய்திருந்தார். படத்தின் மீது பலதரப்பிலிருந்தும் கலவையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவை அனைத்தையும் கடந்து இந்திய சினிமாவில் முக்கிய படமாக மாறியது. இந்நிலையில் தற்போது ராக்கெட்ரி படம் … Read more

நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் க்ளோப் விருது..!!

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி சூப்பர் ஹிட்டடித்துள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்திருந்தார். உலகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் வெளியான இப்படம் 750 கோடிக்கு வசூல் சாதனை படைத்தது. இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஆலியா பட் மற்றும் ஒலிவியா மோரீஸ் என இருகதாநாயகிகள் நடித்திருந்தனர். சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான … Read more

வாரிசு விமர்சனம்: சச்சின், வசீகரா காலத்து துள்ளலுடன் விஜய்…பொங்கலை தித்திக்க வைக்கிறாரா?

தன் பிரமாண்ட சாம்ராஜ்ஜியத்தைத் தனக்குப் பின்னர் யார் ஆள்வது என்கிற அப்பாவின் கேள்விக்கு, மகன் சொல்லும் பதிலே இந்த வாரிசு. இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர் ராஜேந்திரன் (சரத்குமார்). அவருக்கு மூன்று மகன்கள். முதலிரண்டு மகன்கள் ஜெய் (ஸ்ரீகாந்த்), அஜய் (ஷ்யாம்) அப்பாவின் சொற்படி கேட்டு குடும்ப நிர்வாகத்தைப் பார்த்துக்கொள்ள, மூன்றாவது மகன் விஜயோ (விஜயே தான்) சுயம்புவாக முன்னேற வீட்டை விட்டு வெளியேறுகிறார். ஆனால், காலம் மூன்றாவது மகனை மீண்டும் வீட்டுக்குள் அழைத்து வருகிறது. இதற்கிடையே … Read more

துணிவு விமர்சனம்: மணி ஹெய்ஸ்ட் பாணி… மங்காத்தால கொஞ்சம் சோஷியல் மெசேஜ் சேர்த்தா…!

ஒரு வங்கியில் நடக்கும் கொள்ளையை நிகழ்த்துவது யார், அந்த கொள்ளை எதற்காக நிகழ்த்தப்படுகிறது போன்ற கேள்விகளுடன் வெளியாகியிருக்கிறது துணிவு. சென்னையின் பிரதானமான தனியார் வங்கி, யுவர் பேங்க். அங்கு கணக்கில் காட்டப்படாமல் பதுக்கப்பட்டிருக்கும் 500 கோடியை கொள்ளையடிக்க திட்டமிடுகிறது ஒரு கும்பல். இந்தக் கடத்தலை நடத்தத் துவங்கும் போது, என்ட்ரி ஆகிறார் அஜித். தானும் இங்கு கொள்ளையடிக்கத்தான் வந்திருப்பதாகச் சொல்லி அவரும் கொள்ளை கோதாவில் இறங்குகிறார். இரு கும்பல் வெர்சஸ் காவல்துறை வெர்சஸ் வங்கி நிர்வாகம் என … Read more

ஆர்ஆர்ஆர் படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ‛குளோடன் குளோப்' விருது

ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்து தெலுங்கில் தயாராகி, பான் இந்தியா படமாக வெளிவந்து 1200 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளிய படம் 'ஆர்ஆர்ஆர்'. ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் இப்படம் நேரடியாகக் களமிறங்கியுள்ளது. இதனிடையே, ஆஸ்கர் விருதுகளுக்கு முன்பாக அமெரிக்காவில் வழங்கப்படும் பிரபலமான 'கோல்டன் குளோப்' விருதுகளுக்காக 'ஆர்ஆர்ஆர்' படம் இரண்டு பிரிவுகளில் 'நாமினேட்' ஆகியது. ஆங்கிலம் அல்லாத மொழிகளில் சிறந்த படத்திற்கான நாமினேஷன் மற்றும் … Read more

உலகம் முழுதும் வெளியானது ‛துணிவு, வாரிசு' திரைப்படங்கள்: 9 ஆண்டுக்கு பின் அஜித், விஜய் படங்கள் மோதல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எப்போதும் பெரிய நடிகர்கள் திரைப்படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், பொங்கல் விடுமுறையை முன்னிட்டு இன்று (ஜன.,11) அதிகாலையிலேயே அஜித்தின் ‛துணிவு' படமும், விஜய்யின் ‛வாரிசு' படமும் வெளியானது. இயக்குனர் எச்.வினோத் – நடிகர் அஜித்குமார் கூட்டணியில் தொடர்ந்து 3வது முறையாக வந்துள்ள ‛துணிவு'படம் நடுஇரவு 1 மணிக்கும், தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‛வாரிசு' படம் அதிகாலை 4 மணிக்கும் உலகம் முழுவதிலும் உள்ள … Read more

Varisu vs Thunivu: இணையத்தை தெறிக்க விடும் வாரிசு – துணிவு மீம்ஸ்

Thunivu vs Varisu memes: இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் துணிவு, இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு ஆகிய  இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகி உள்ளது. இதனால் அஜித், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். சுமார் 9 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவின் இரு பெரும் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் ஆகியோரின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகியுள்ளது.  தமிழகம் முழுவதும் உள்ள இவ்விரு  ரசிகர்களுக்கும் பெரும் … Read more

Golden Globe 2023: ஆங்கிலம் அல்லாத மொழித் திரைப்படத்திற்கான விருது RRRக்கு இல்லை

80th Golden Globe 2023: கோல்டன் குளோப்ஸ் விருது வழங்கும் நிகழ்ச்சி, நேற்று இரவு (2023 ஜனவரி 10) நடைபெற்றது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற நிகழ்ச்சியை நகைச்சுவை நடிகர் ஜெரோட் கார்மைக்கேல், தொகுத்து வழங்கினார். கடந்த ஆண்டு ஆரவாரம் இல்லாமல் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழா, இந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற்றது.  சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருந்த முதல் இந்திய பாடல் என்ற பெருமையைப் பெற்றிருந்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ … Read more