விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்

தெலுங்கின் முன்னணி நட்சத்திர இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடிக்கும் 'குஷி' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள். முன்னணி இயக்குநர் சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'குஷி'. இதில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகும் இந்த திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்து, இயக்குநர் சிவ … Read more

கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன்

'சுந்தரபாண்டியன்' படம் வாயிலாக இயக்குனர் ஆனவர் எஸ்.ஆர்.பிரபாகரன். 'சத்ரியன், கொம்பு வெச்ச சிங்கம் டா' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இவர், 'பங்கஜம் ட்ரீம்ஸ் புரொடக்சன்ஸ்' என்ற என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். 'றெக்கை முளைத்தேன்' என்ற முதல் படத்தை தானே இயக்க உள்ளார். இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் கதை நாயகியாக நடித்துள்ளார். கிரைம் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில், ஜெயப்பிரகாஷ், 'ஆடுகளம்' நரேன், போஸ்வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சுவாதிஸ், பிரபா, மெர்லின், நிதிஷா என்ற நான்கு … Read more

இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளார் காமெடி நடிகர் போண்டாமணி. சிறுநீரக அறுவை சிகிச்சையை ஆறு மாதங்களுக்குள் செய்து கொள்ள வேண்டும் என டாக்டர்கள் எச்சரித்த நிலையிலும் சிகிச்சைக்கான செலவை ஈடுகட்ட உடல்நலக்குறைவான நிலையிலும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருவதுடன், ஏற்கனவே ஒப்பந்தம் செய்த பத்துக்கும் மேற்பட்ட சினிமாக்களை முடித்து கொடுக்கும் மும்மரத்திலும் ஈடுபட்டிருந்த போண்டாமணியுடன் பேசினோம். நினைத்து கூட பார்க்கவில்லை எனக்கு இப்படி ஒரு நோய் வரும் என. அறுவை … Read more

கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி

வீரமே வாகை சூடும், தேவி 2 போன்ற பல திரைப் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை வதைக்கும் தேவதையாக உருவெடுத்து வருகிறார் டிம்பிள் ஹயாதி. பிறந்தது தெலுங்கு மண்ணாக இருந்தாலும் இவரது பூர்வீகம் திருநெல்வேலி. தாட்சாயிணி என்ற இயற்பெயரை விட்டு வீட்டில் செல்லமாக கூப்பிடும் டிம்பிள் என்ற பெயரே இவருக்கு நிலைத்து விட்டது. அதன்பின் எண் கணிதப் படி ஹயாதி என சேர்த்துக் கொண்டார். தமிழுக்கு புதுவரவான இவர் 19 வயதில் தெலுங்கில் வளைகுடா என்ற … Read more

விஜய்யின் ‛லியோ' படத்தின் கதை குறித்து புதிய தகவல் வெளியானது!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் புரோமோ வீடியோவில், காஷ்மீரில் சாக்லேட் தயாரித்துக் கொண்டிருக்கிறார் விஜய். அடுத்து இரும்பு பட்டறையில் வாள் ஒன்றை செதுக்கி கொண்டு இருக்கிறார். அவரது பின்னணியில் சிலுவை படம் இருக்கிறது. இதை வைத்து பார்க்கும் போது இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிப்பதாக தெரிகிறது. அதையடுத்து ஒரு மிகப்பெரிய கும்பல் அவரை தேடி வருவது … Read more

மோசடி வழக்கில் வில்லன் நடிகர் பாபுராஜ் கைது

மலையாள திரையுலகில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக வில்லன் நடிகராக நடித்து வருபவர் நடிகர் பாபுராஜ். சமீப காலமாக காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வரும் இவர், சில படங்களையும் இயக்கியுள்ளார். 90களில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த வாணி விஸ்வநாத்தின் கணவர் இவர்தான். தமிழில் விக்ரம் நடித்த ஸ்கெட்ச், விஷால் நடித்த வீரமே வாகை சூடும் ஆகிய படங்களில் கூட வில்லனாக நடித்திருந்தார் பாபுராஜ். இந்த நிலையில் தற்போது மோசடி … Read more

ஏஜென்ட் ரிலீஸ் தேதி அறிவிப்பு ; அகிலுக்கு வாழ்த்து சொன்ன சமந்தா

நடிகை சமந்தா முன்னணி நடிகையாக நடித்துக்கொண்டிருந்தபோதே தன்னுடன் நடித்த தெலுங்கு திரையுலகின் வாரிசு நடிகர் நாகசைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். சில வருடங்கள் மட்டுமே நீடித்த அவர்களது இல்லற வாழ்க்கை இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சீக்கிரமே முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து கணவர் நாகசைதன்யாவை பிரிந்து வாழும் சமந்தா, அதன்பின்னர் கணவர் மற்றும் மாமனார் நாகார்ஜுனா ஆகியோர் பற்றி எந்த ஒரு இடத்திலும் பேசுவது இல்லை. நாகார்ஜுனா படங்கள் வெளியாகும்போது கூட வாழ்த்துக்களும் … Read more

30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம்

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் வாணி ஜெயராம். சென்னை, நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த அவர் நேற்று (பிப்.,4) மயங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்தார். வழுக்கி விழுந்ததில் அவர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது உடல் அஞ்சலிக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது. நேற்று கவர்னர் ரவி, டிரம்ஸ் சிவமணி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலின், தமிழக பா.ஜ., தலைவர் … Read more

நடிகர்களை தலைவர் என்று அழைப்பது நெருடலாக உள்ளது – வெற்றிமாறன் கருத்து

விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக இயற்றியுள்ள வெற்றிமாறன் தற்போது அந்த படத்தின் இறுதி கட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தை மார்ச் மாதத்திற்கு பிறகு அவர் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற ‛தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை' என்ற நிகழ்ச்சியில் வெற்றிமாறன் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், பள்ளி, கல்லூரிகளில் சாதி சான்றிதழ் கேட்பதை … Read more

சர்ச்சையில் சிக்கிய விஜய்யின் 'லியோ' படத்தின் புரோமோ வீடியோ

மாஸ்டர் படத்தை அடுத்து மீண்டும் லியோ படத்தில் விஜய்யும், லோகேஷ் கனகராஜூம் இணைந்து இருக்கிறார்கள். இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் சமீபத்தில் அடுத்தடுத்து வெளியான நிலையில் படக்குழு தனி விமானத்தில் காஷ்மீர் சென்றுள்ளது. அது குறித்த வீடியோ புகைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில், நேற்று விஜய் 67வது படத்தின் டைட்டில் மற்றும் ப்ரோமோ வீடியோவும் வெளியானது. இதற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. என்றாலும் சோசியல் மீடியாவில் இந்த புரோமோ பல … Read more