‘எனது இனிய நண்பர் டி.பி.கஜேந்திரன் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது’ – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

பிரபல இயக்குநரும், நடிகரும், தனது கல்லூரி காலத் தோழருமான டி.பி. கஜேந்திரன் மறைவுக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் மறைந்த இயக்குநர் விசுவின் உதவி இயக்குநராக பணியாற்றிய டி.பி. கஜேந்திரன், பின்னர் ‘வீடு மனைவி மக்கள்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பிறகு, ‘எங்க ஊரு காவல்காரன்’, ‘பாண்டி நாட்டுத் தங்கம்’, ‘பாட்டு வாத்தியார்’, ‘மிடில் கிளாஸ் மாதவன்’, ‘பாசமுள்ள பாண்டியரே’ உள்பட 27 படங்களை இயக்கினார் டி.பி. கஜேந்திரன். … Read more

AK 62: டைரக்ஷன் மட்டுமே மகிழ் திருமேனி, கதை யாருதுனு தெரிந்தால் மெர்சலாகிடுவீங்க

Ajith Kumar: ஏ.கே. 62 படத்தின் கதை பி.எஸ். மித்ரனுடையது என தகவல் வெளியாகி அஜித் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. ஏ.கே. 62துணிவு படத்தை அடுத்து அஜித் குமார் நடிக்கவிருக்கும் ஏ.கே. 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார், லைகா நிறுவனம் தயாரிக்கும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அனிருத் இசையமைப்பார் என்றார்கள். இந்நிலையில் விக்னேஷ் சிவனின் கதை பிடிக்காததால் அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள். அவருக்கு பதில் மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம். மித்ரன்அஜித்துக்காக மகிழ் … Read more

18 ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஒரே நாளில் ரஜினி-கமல் படங்கள்?

தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய தூண்களாக கருதப்படும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இருவருக்கும் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரியளவில் வரவேற்பு இருந்து வருகிறது. அன்றிலிருந்து இன்றுவரை இந்த இரண்டு நட்சத்திரங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு தான் உயர்ந்துகொண்டே இருக்கின்றது. தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிசில் ஒரே நாளில் அஜித்-விஜய் படங்கள் மோதியிருப்பதை இந்த தலைமுறையினர் கண்டுகளித்துள்ளனர். இப்போது தமிழ் சினிமாவின் பிரபலமான மற்றும் மூத்த நடிகர்களாக விளங்கும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரின் படங்கள் … Read more

Samantha: கணவரை பிரிந்தாலும் பாசம் மாறல: சமந்தாவுக்கு குவியும் பாராட்டு

Agent Teaser: நாக சைதன்யாவை பிரிந்த போதிலும் அவரின் தம்பி அகிலுடன் நட்பாகவே இருந்து வருகிறார் சமந்தா. சமந்தாசமந்தாவும், அவரின் காதல் கணவரான நாக சைதன்யாவும் பிரிந்துவிட்டது அனைவருக்கும் தெரியும். நாக சைதன்யாவை பிரிந்தாலும் அவரின் தம்பியும், நடிகருமான அகில் அகினேனியுடனான நட்பை இன்னும் தொடர்கிறார் சமந்தா. இந்நிலையில் தான் அகில் தான் நடித்திருக்கும் ஏஜென்ட பட டீஸரை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதை பார்த்த சமந்தாவால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. டீஸர் View this post … Read more

இயக்குநர் கஜேந்திரன் மறைவு: துக்க வீட்டிலும் நகைச்சுவை செய்த கவுண்டமணி…

சென்னை சாலிகிராமத்தில் மறைந்த இயக்குநர் கஜேந்திரனின் உடலுக்கு நகைச்சுவை நடிகர் கவுண்டமணி அஞ்சலி செலுத்தினார். மறைந்த இயக்குநர் கஜேந்திரனின் இல்லம் அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் உள்ளது. அவரது வீட்டிற்கு செல்வதற்கு ஒரு சிலர் லிப்டை பயன்படுத்தி வருகின்றனர். இன்று காலையில் முதலமைச்சர், அஞ்சலி செலுத்த வரும்போதும் லிப்ட் மிகவும் மெதுவாகவே இயங்கியது. இந்நிலையில், நகைச்சுவை நடிகர் கவுண்டமணி மறைந்த இயக்குநரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரும்போது, லிப்ட்டிற்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்தவரிடம்,’இயக்குனர் எப்போ … Read more

தலைக்கூத்தல் விமர்சனம்: தேர்ந்த நடிப்பு, மனதை உலுக்கும் க்ளைமாக்ஸ்; ஈர்க்கிறதா இந்த யதார்த்த சினிமா?

சுய நினைவிழந்து படுத்த படுக்கையாகக் கிடக்கும் தன் தந்தையை `தலைக்கூத்தல்’ முறையில் கருணைக்கொலை செய்வதற்கு எதிராகச் சொந்தங்களோடு மல்லுக்கு நிற்கும் மகனின் பாசப்போராட்டமே இந்த `தலைக்கூத்தல்’! தெக்கத்திப் பக்கம் அதிலும் குறிப்பாக விருதுநகர் மாவட்ட கிராமங்களில் வயதானவர்களை கருணைக்கொலை செய்யும் ‘தலைக்கூத்தல்’ என்ற நடைமுறையை மையமாக வைத்து ஏற்கனவே ‘பாரம்’, ‘கே.டி (எ) கருப்புதுரை’ போன்ற படங்கள் வெளிவந்திருக்கின்றன. அதிலிருந்து சற்றே மாறுபட்டு தந்தைக்கும் மகனுக்குமான பாசப்போராட்டமாக, யதார்த்தத்தோடு கொஞ்சம் மேஜிக்கல் ரியலிச பாணியைக் கலந்து கதை … Read more

AK62: AK62 பஞ்சாயத்து…வசமாக சிக்கிக்கொண்ட அஜித்..கொஞ்சம் கஷ்டம் தான் போலயே..!

அஜித் நடிப்பில் வினோத்தின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான துணிவு திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதன் காரணமாக உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கும் அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் AK62 திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது. விக்னேஷ் சிவன் கூறிய கதை அஜித் மற்றும் லைக்காவிற்கு பிடிக்காததால் AK62 படத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் விக்னேஷ் சிவன். இது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் கிட்டத்தட்ட இந்த தகவல் உறுதியாகியுள்ளது. TP Gajendran: … Read more

சிசிஎல் 2023: சென்னை அணியில் மீண்டும் விஷ்ணு விஷால், விக்ராந்த் – வைரலாகும் புகைப்படங்கள்!

சினிமா பிரபலங்கள் கலந்துகொள்ளும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கின் 9-வது சீசனில் கலந்துகொள்வதற்காக தமிழ் சினிமாவை சேர்ந்த நட்சத்திரங்கள் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. சிசிஎல் (CCL) என்றழைக்கப்படும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டியின் 9-வது சீசன் குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் இந்த கிரிக்கெட் லீக்கில் கலந்துகொள்ளவுள்ளனர். வருகிற 18-ம் தேதி பெங்களூருவில் தெலுங்கு வாரியர்ஸ் மற்றும் கேரளா ஸ்டிரைக்கர்ஸ் இடையே முதல் … Read more

பிரபல நடிகரும், இயக்குனருமான டி.பி.கஜேந்திரன் காலமானார்: முதல்வர் நேரில் அஞ்சலி

பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமானவர் டி.பி.கஜேந்திரன் (வயது68). இவர் கே. பாலசந்தர், விசு, ராம நாராயணன் போன்றோரிடம் 60 படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். மேலும், எங்க ஊரு காவல்காரன், மிடில் கிளாஸ் மாதவன், பட்ஜெட் பத்மநாபன், வீடு மனைவி மக்கள், பாண்டி நாட்டு தங்கம், சீனா தானா, பாட்டு வாத்தியார் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலான திரையுலக வாழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில … Read more

TP Gajendran Death:நண்பன் டி.பி. கஜேந்திரன் உடலுக்கு முதல்வர் அஞ்சலி

TP Gajendran: இயக்குநர் டி.பி. கஜேந்திரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். டிபி கஜேந்திரன்பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், பந்தா பரமசிவம் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய டி.பி. கஜேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் இருந்து வந்த கஜேந்திரன் பல படங்களில் சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். டி.பி. கஜேந்திரனின் மறைவு குறித்து அறிந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களின் … Read more