Shanthanu: 26 வயதில் மரணம்: உதவி இயக்குனரின் திடீர் மறைவால் கலங்கிப்போன நடிகர் சாந்தனு.!
சினிமாவில் உதவி இயக்குநராகப் பணிபுரிபவர் ராமகிருஷ்ணன். 26 வயதான இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் பணியாற்றிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். ராமகிருஷ்ணன் கடந்த இரண்டு வருடமாக நெசப்பாக்கத்தில் தங்கி, சாலிகிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். நேற்றிரவு பணியாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது ராமகிருஷ்ணன் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. … Read more