சல்மானின் 58வது பிறந்தநாள் விழாவில் குவிந்த திரைப்பிரபலங்கள் – ரசிகர்கள் மீது தடியடி

பாலிவுட் நடிகர் சல்மான்கான் நேற்று தனது 58வது பிறந்த நாளை கொண்டாடினார். மும்பையிலுள்ள சல்மான்கானின் கேலக்ஸி வீட்டின் முன்பு ரசிகர்கள் பதாகைகளுடன் பெரிய அளவில் கூடியுள்ளனர். அப்போது சல்மான்கான் தனது தந்தை சலீம்கானுடன் இணைந்து தனது வீட்டு பால்கனியில் நின்றபடி ரசிகர்களைப்பார்த்து கையசைத்தார். அப்போது அங்கு கூடிநின்ற ரசிகர்களுக்குகிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனிடையே சல்மான்கானின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஷாரூக்கான், தபு, பூஜா ஹெக்டே, சுனில் ஷெட்டி உள்பட பல … Read more

ரஜினி முதல் சிவகார்த்திகேயன் வரை… நடிகர்களின் கல்வித் தகுதி தெரிந்துக்கொள்ளுங்கள்

Actor’s Qualifications: டாப் தமிழ் நடிகர்களின் கல்வித் தகுதி என்னவென்று தெரியுமா? அதுக்குறித்து விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உங்களை கவர்ந்த நடிகரின் கல்வித் தகுதி என்னவென்று தெரிந்துக்கொள்ளுங்கள். ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பள்ளிப் படிப்பை ஆச்சார்யா பாடசாசாலையில் பயின்றார். பின்னர் 1973ல் மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் டிப்ளமோ படித்தார். கமல்ஹாசன் கமல்ஹாசன் உயர்நிலைப் பள்ளி வரை படித்துள்ளார். விஜய் தளபதி விஜய் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பாலலோக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், மேல்நிலைப் … Read more

விஜய் 67 – பொங்கல் தினத்தில் வெளியாகும் புரோமோ வீடியோ

வாரிசு படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 67வது படத்தில் நடிக்கிறார் விஜய். கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில், ஜனவரியில் இருந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற உள்ளது. இப்படத்தின் நாயகியாக திரிஷா நடிப்பதாக கூறப்படும் நிலையில் வில்லன்களாக சஞ்சய்தத், அர்ஜூன், கவுதம் மேனன், மன்சூரலிகான், இயக்குனர் உரியடி விஜயகுமார் உள்பட பலர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இப்படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிடும் பணிகளில் … Read more

இருள் நிரம்பிய அறையில் ஆதித்தன்! கையில் வாளுடன் நந்தினி! மாஸ்ஸாக வெளியான PS-2 அப்டேட்!

மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி வசூலை குவித்த நிலையில், எதிர்ப்பார்ப்புகளுடன் கூடிய இரண்டாவது பாகத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தழுவி இயக்குநர் மணிரத்னத்தின் வெர்ஷனில், ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக த்ரிஷா நடித்து கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிய பொன்னியின் செல்வன் திரைப்படம், உலக அரங்கில் 500கோடி ரூபாய் வசூல் … Read more

துணை என்பது கானல் நீர் – யூகங்களை ஏற்படுத்திய செல்வராகவன் டுவீட்

தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை கடைசியாக இயக்கிய செல்வராகவன், சாணிக்காயுதம், பீஸ்ட் படங்களைத் தொடர்ந்து தற்போது பகாசூரன் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சமீபகாலமாக சமூகவலைதளங்களில் பல வாழ்க்கை தத்துவங்களை உதிர்த்து வருகிறார் செல்வராகவன். அந்த வரிசையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த பதிவில், ‛‛தனியாகத்தான் வந்தோம், தனியாகத்தான் போவோம், நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது? துணை என்பது கானல் நீர், நெருங்க நெருங்க தூரம் … Read more

சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக் பணியில் ஜி.வி.பிரகாஷ் சுறுசுறுப்பு

சுதா கெங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் சூரரைப்போற்று. 5 தேசிய விருதுகளை வென்ற இந்த படத்தை தற்போது ஹிந்தியில் அக்சய் குமாரை வைத்து ரீமேக் செய்து வருகிறார் சுதா. இப்படத்தில் சூர்யாவும் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். சில மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் தற்போது சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார் அப்படம் குறித்து ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். அதில், … Read more

தென்காசியில் பைக் ரைடு செய்தாரா அஜித்?

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் நிலையில், அடுத்தபடியாக விக்னேஷ்சிவன் இயக்கும் தனது 62வது படத்தில் நடிக்கிறார் அஜித். அதையடுத்து ஒன்றரை ஆண்டுகளுக்கு சினிமாவில் நடிப்பதற்கு பிரேக் கொடுத்து விட்டு உலகம் முழுக்க பைக் ரைடு நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார். இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களுக்கும் பைக் ரைடு சென்று விட்ட அஜித், தற்போது தமிழகத்தின் சில தென் மாவட்டங்களில் பைக் ரைடு செய்து வருகிறார். தற்போது அவர் தென்காசியில் பைக் … Read more

2022 – வசூலில் கிளப்பிய ‛டாப் 10' தமிழ்த் திரைப்படங்கள்

2022ம் ஆண்டில் தியேட்டர்களில் வெளியான படங்களின் எண்ணிக்கை இந்த வாரத்துடன் 200ஐ நெருங்க வாய்ப்புள்ளது. ஓடிடி தளங்களில் 27 படங்கள் வரை வெளியாகி உள்ளன. வழக்கம் போலவே சுமார் பத்து, பதினைந்து படங்கள் மட்டும்தான் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. இந்த 200 படங்களில் சுமார் 100 படங்கள் வரை எதற்காகத் தயாரிக்கப்பட்டது, எதற்காக வெளியானது என்பது அந்தப் படங்களை எடுத்தவர்களுக்கே தெரியும். அதில் சில படங்களின் டிரைலர்கள் கூட யூ டியூபில் கிடையாது. சில படங்களைப் பற்றி … Read more

பிரபுதேவா நடிக்கும் 'வுல்ஃப்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் பிரபுதேவா, அனுசுயா பரத்வாஜ், ராய் லக்ஷ்மி, வசிஷ்ட சிம்ஹா, ஆர் ஜே ரமேஷ் மற்றும் அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘வுல்ஃப்’ படத்தின் மூலம் கன்னட திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்க உள்ளது. எஸ் ஜே சூர்யாவின் உதவி இயக்குநராக பணியாற்றி சிண்ட்ரெல்லா திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தற்போது வுல்ஃப் படத்தை இயக்கி வரும் வினு வெங்கடேஷ் கூறுகையில், “இப்படம் … Read more