முதன்முறையாக கன்னடத்தில் நுழைந்த கல்யாணி பிரியதர்ஷன்

வாரிசு ஹீரோக்கள் சினிமாவில் நிலைத்து நிற்கும் அளவுக்கு வாரிசு ஹீரோயின்கள் பெரும்பாலும் திரையுலகில் தாக்குப்பிடித்து நிற்பது இல்லை. அதிர்ஷ்டத்துடன் திறமையும் இருந்தால் மட்டுமே அவர்களால் தொடர்ந்து சாதிக்க முடிகிறது. அந்த வகையில் ஸ்ருதிஹாசன், வரலட்சுமி, கீர்த்தி சுரேஷ் ஆகியோரை தொடர்ந்து இயக்குனர் பிரியதர்ஷன் – நடிகை லிசி தம்பதியின் மகளான கல்யாணி பிரியதர்ஷன் தொடர்ந்து படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். கடந்த வருடம் வெளியான மாநாடு படத்தின் வெற்றி, இந்த வருடம் மலையாளத்தில் அவர் நடிப்பில் வெளியான … Read more

தோல்வியில் முடிந்த பலவருட சினிமா பயணம் ; கைக்கொடுத்த சீரியல் : பாக்கியலெட்சுமி சுசித்ராவின் லைப் ஸ்டோரி

சினிமா மற்றும் சின்னத்திரையில் பல வருடங்களாக நடித்து வரும் சுசித்ரா, 14 வயதிலேயே கன்னட சினிமாவில் அறிமுகாமாகி பல படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான சைவம் படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் தமிழ் சின்னத்திரையிலும் 2008ம் ஆண்டிலேயே 'நாணல்' என்ற தொடரின் மூலம் அறிமுகமாகியிருந்தார். ஆனால், அப்போதெல்லாம் இவர் இந்த அளவுக்கு பிரபலமாகவில்லை. சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலெட்சுமி' தொடர் சுசித்ராவுக்கு செலிபிரேட்டி அந்தஸ்தை … Read more

நான் வந்துட்டேன் மக்களே – ரித்திகா

சின்னத்திரை நடிகை ரித்திகா தமிழ்செல்வி விஜய் டிவியின் 'பாக்கியலெட்சுமி' தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ரித்திகாவும் விஜய் டிவியின் கிரியேட்டிவ் ப்ரொடியூசர் வினுவும் ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ஹினிமூனுக்காக ரித்திகா கணவருடன் மாலத்தீவுக்கு சென்றுவிட்டார். இதன்காரணமாக 'பாக்கியலெட்சுமி' தொடரிலிருந்து ரித்திகா விலகிவிட்டார் என்றும், இனி அந்த கதாபாத்திரத்தில் வேறு நடிகை தான் நடிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், அதேசமயம் ரித்திகாவோ, … Read more

டிரெண்டிங்கில் இடம்பிடித்த பிக்பாஸ் தனலெட்சுமி : நேர்மையற்ற எவிக்சனால் கடுப்பான ரசிகர்கள்

பிக்பாஸ் வீட்டில் ஜி.பி.முத்துவுடன் சண்டை போட்டதன் காரணமாக மக்களின் கடுமையான எதிர்ப்பை சந்தித்தார் தனலெட்சுமி. இருப்பினும் அடுத்தடுத்த வாரங்களில் தன்னை திருத்திக் கொண்டு நன்றாக விளையாடி வந்தார். கடந்த வார எலிமினேஷனில் தனலெட்சுமி யாரும் எதிர்பாரத வகையில் வெளியேற்றப்பட்டதால் பிக்பாஸ் ரசிகர்கள் அப்செட்டாகியுள்ளனர். நாமினேஷனில் இடம்பெற்ற கதிரவன், ரட்சிதா, மைனா ஆகியோர் ஆரம்பத்திலிருந்தே சேப் கேம் விளையாடி தப்பித்து வந்ததால் அவர்களில் யாராவது ஒருவர் தான் எலிமினேட் செய்யப்படுவார்கள் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், முற்றிலும் மாறாக … Read more

விஜய் 67 படத்தில் நடிப்பதை உறுதிசெய்த மன்சூர் அலிகான்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தில் கமல் மொபைலில் பயன்படுத்தும் ஒரு ரிங்டோனாக மன்சூர் அலிகான் நடனமாடி நடித்திருந்த சக்கு சக்கு ஒத்திக்கிச்சு என்கிற பாடல் இடம்பெற்று அது ரசிகர்களிடமும் வைரலாக பரவியது. அதைத்தொடர்ந்து வெளியான பேட்டிகளில் லோகேஷ் கனகராஜிடம் மன்சூரலிகான் பாடல் இடம் பெற்றது குறித்து கேட்கப்பட்டபோது, தான் மன்சூர் அலிகானின் தீவிர ரசிகர் என்றும் கைதி படத்தில் கூட முதலில் கார்த்தி நடித்த … Read more

5 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவரும் தாமிரபரணி பானு படம்

மலையாள சினிமாவில் இருந்து விஷால் நடித்த தாமிரபரணி படம் மூலம் தமிழுக்கு வந்தவர் பானு. மலையாளத்தில் முக்தா என்ற இயற்பெயரில் நடித்து வந்தவரை இயக்குனர் ஹரி தமிழுக்காக பானு என்று மாற்றினார். தாமிரபரணிக்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்த பானு சரியான வாய்ப்புகள் இன்றி கேரளாவுக்கே சென்று விட்டார். 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலாவிட்ட பானு அதன் பிறகு பெரிதாக நடிக்க வில்லை 2017ம் ஆண்டு நடித்த பாம்பு சட்டைதான் அவர் கடைசியாக … Read more

”ஒரு நல்ல படத்திற்கு அதுவே புரமோஷன்”.. புரமோஷன் எல்லாம் ஓகே? கதை, திரைக்கதை எங்கே?

“நல்ல படத்துக்கு எதுக்கு புரோமோஷன், நல்ல படமாக இருந்தால் அதன் கதையும் வேலையுமே அதற்கு புரோமோஷன்” என நடிகர் அஜித்குமார் கூறியதாக சமீபத்தில் செய்திகள் பரவின. இப்படி இருக்கையில், அவரது துணிவு படத்துக்கான வேலைகளை படக்குழு தற்போது இறங்கியிருக்கிறது. அதன்படி துபாயில் ஸ்கைடைவிங் மூலமும், நியூயார்க்கின் டைம் ஸ்கொயரிலும் துணிவு பட புரோமோஷன் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, விஜய்யின் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாக் கூட சென்னையில் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி அன்று … Read more

அசீமை சைக்கோ என திட்டிய காஜல் பசுபதி

பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி 78 நாட்கள் முடிந்துவிட்டது. இதுவரை 10 போட்டியாளர்கள் வெளியேறி உள்ள நிலையில், 9 போட்டியாளர்கள் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை நோக்கி விளையாடி வருகிறார்கள். இந்த 9 நபர்களில் பிக்பாஸ் வீட்டில் இருக்க கொஞ்சம் கூட தகுதியேயில்லாத நபர் என்றால் அது அசீம் தான் என ரசிகர்கள் பலரும் சொல்லி வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததிலிருந்தே ஒவ்வொருவரையாக டார்க்கெட் செய்து சண்டையிட்டு, தனது அதிகார தொணியை குறிப்பாக பெண்களிடத்தில் அதிகம் காட்டி வந்தார். இது … Read more

வாரிசு படத்தில் நடனம் அமைத்த பாடலை மறந்துபோன ஷோபி மாஸ்டர்

விஜய்யின் படங்கள் என்றாலே ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது ஆக்சன் காட்சிகளுக்கு அடுத்ததாக நிச்சயம் நடன காட்சிகளை தான். அதற்கேற்றபடி அவரும் ஒவ்வொரு படத்திற்கும் குறைந்தபட்சம் இரண்டு பாடல்களுக்காவது வித்தியாசமான நடனம் ஆடி ரசிகர்களை தவறாமல் மகிழ்வித்து வருகிறார். இதற்கு பின்னணியில் ஜானி, சோபி ஆகிய மாஸ்டர்கள் விஜய்க்கு பக்கபலமாக செயல்பட்டு வருகின்றனர். விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள வாரிசு படத்திலும் ஷோபி மாஸ்டர் ஜிமிக்கி பொண்ணு என்கிற பாடலுக்கு நடனம் வடிவமைத்துள்ளார். ஆனால் வாரிசு பட … Read more

டிசம்பர் 29ல் ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் கோல்ட்

மலையாளத்தில் நேரம், பிரேமம் என இரண்டு ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், கிட்டத்தட்ட 7 வருட இடைவெளிக்குப் பிறகு கோல்ட் என்கிற படத்தை இயக்கி சமீபத்தில் வெளியிட்டார். பிரித்விராஜ், நயன்தாரா என்கிற புதிய காம்பினேஷன் இந்த படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். அதனால் ரிலீசுக்கு முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தியது. ஆனால் படத்தின் சுமாரான கதை காரணமாகவும் மற்றும் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளும் சரிவர ரசிகர்களை சென்றடையததாலும் எதிர்பார்த்த வரவேற்பை பெற … Read more