இளையராஜா இசையில் 'விடுதலை' பாடல் ; அப்பா அம்மா செய்த புண்ணியம் – சூரி நெகிழ்ச்சி

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக நடிக்கும் படம் 'விடுதலை'. இப்படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராவின் ஆஸ்தான இசையமைப்பாளரான இளையராஜாவுடன் முதல் முறையாக இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார் வெற்றிமாறன். இப்படத்தின் முதல் சிங்கிளான 'ஒன்னோடு நடந்தா' என்ற பாடல் இன்று காலை வெளியானது. சுகா எழுதி தனுஷ், அனன்யா பட் பாடிய இந்தப் பாடலை இசை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். படத்தின் நாயகனாக சூரி அது பற்றி … Read more

லியோ – மீண்டும் காஷ்மீர் சென்ற த்ரிஷா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம்தான் படக்குழுவினர் தனி விமானத்தில் காஷ்மீர் சென்றார்கள். ஆனால், சென்ற சில நாட்களிலேயே த்ரிஷா மீண்டும் சென்னை திரும்பினார். அதற்குள் அது பற்றி சிலர் தேவையில்லாத வதந்திகளைப் பரப்பினார்கள். படத்திலிருந்து த்ரிஷா விலகிவிட்டார் என்பதுதான் அந்த வதந்தி. இந்தப் படம் விஜய்க்கு மட்டும் 67வது படமல்ல, த்ரிஷாவுக்கும் 67வது படம் என்பது சிறப்பு. அப்படியிருக்கும் … Read more

பட வெளியீட்டிற்கு முன்பே ஆர்ஜே பாலாஜிக்கு கிடைத்த பரிசு

'ரன் பேபி ரன்' படத்திற்குப் பிறகு ஆர்ஜே பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'சிங்கப்பூர் சலூன்'. கோகுல் இப்படத்தை இயக்கியுள்ளார். சத்யராஜ், லால் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தைப் பார்த்த படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், படத்தின் கதாநாயகன் ஆர்ஜே பாலாஜிக்கு மோதிரம் ஒன்றைப் பரிசாக அளித்துள்ளார். இன்று நடைபெற்ற 'ரன் பேபி ரன்' படத்தின் நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் இதை பாலாஜி தெரிவித்தார். ஆர்ஜே பாலாஜி கதாநாயகனாக நடித்த 'எல்கேஜி, மூக்குத்தி அம்மன்' … Read more

வரவேற்பை பெற்றுள்ள தனுஷின் வாத்தி ட்ரெய்லர்!!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்துள்ள வாத்தி படத்தில், சமுத்திரக்கனி, சம்யுக்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். வாத்தி திரைப்படம் இம்மாதம் 17 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கல்வியை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் ஆசிரியர் கேரக்டரில் தனுஷ் நடித்துள்ளார். கல்வி வியாபாரமாக … Read more

பான் இந்தியா நடிகர் என சொல்வது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது : விஜய் சேதுபதி

சமீபத்தில் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் வெளியான மைக்கேல் திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி குறைந்த நேரமே வந்து செல்லும் கெஸ்ட் ரோல் ஒன்றில் நடித்திருந்தார். இன்னொரு பக்கம் ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்து வரும் விஜய்சேதுபதி, முதன் முறையாக வெப் சீரிஸ் பக்கமும் களம் இறங்கி பிரபல இயக்குனர்கள் ராஜ்-டி.கே இயக்கத்தில் நடித்து வருகிறார். சமீப காலமாக அவரை பான் இந்தியா நடிகர் என்று திரையுலகினர் குறிப்பிட்டு வருகின்றனர். ஆனால் இப்படி பான் இந்திய … Read more

‘வாத்தி‘ பட டிரைலர் வெளியீடு..!!

வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நடித்து வரும் படம் ‘வாத்தி‘. இந்த படம் தெலுங்கில் ‘சார்‘ என்ற பெயரில் வெளியாகிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்ற நிலையில், பிப்ரவரி 17-ம் தேதி படம் ரிலீஸாகிறது என தகவல் வெளியானது. … Read more

Lokesh kanagaraj: சம்பளத்தில் ஷங்கரை நெருங்கிய லோகேஷ்..லியோ படத்திற்கு இவ்வளவா ? அடேங்கப்பா..!

மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் லோகேஷ் கனகராஜ். முதல் படமே அவருக்கு மிகப்பெரிய வெற்றி படம் என்பதால் அடுத்ததாக அவர் இயக்கிய கைதி படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பையும் மீறி கைதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இவ்விரு வெற்றிகளும் லோகேஷிற்கு விஜய்யை இயக்கும் வாய்ப்பை பெற்று தந்தது. மாநகரம் மற்றும் கைதி திரைப்படங்கள் கமர்ஷியல் சினிமாவிற்கு அப்பாற்பட்டு லோகேஷ் இயக்கியிருந்ததால் விஜய் படத்தை எவ்வாறு இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. … Read more

‘லியோ’ படத்தில் இருந்து விலகிய த்ரிஷா? – தீயாய் பரவிய தகவலும், உண்மையும்!

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘லியோ’ படத்திலிருந்து நடிகை த்ரிஷா விலகியதாக தகவல் வெளியான நிலையில், அது உண்மையில்லை எனத் தெரியவந்துள்ளது. ‘மாஸ்டர்’ வெற்றிக்குப் பிறகு விஜய் – லோகேஷ் – அனிருத் இணைந்துள்ள திரைப்படம் ‘லியோ’. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தப் படம் உருவாகி வருகிறது. 2022-ம் ஆண்டே இந்தப் படம் உறுதி செய்யப்பட்டு சென்னை மற்றும் கொடைக்கானலில் படப்பிடிப்பு நடந்து வந்தாலும், கடந்த மாதம் 30-ம் தேதி தான் படம் குறித்த … Read more

80ஸ் நாயகிகளுடன் ‛பதான்' படம் பார்த்த கமல்

ஹிந்தியில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாரூக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரஹாம் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‛பதான்'. பாய்காட், காவி சர்ச்சை போன்ற எதிர்ப்புகளை தாண்டி படம் உலகளவில் ரூ.800 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளது. இது ஷாரூக்கானை மட்டுமல்ல பாலிவுட் திரையுலகினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. காரணம் கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் திரையுலகம் வசூலில் தடுமாறி வந்த நிலையில் இந்த படத்தின் வசூல் அனைவருக்கும் புது தெம்பை வழங்கி உள்ளது. இந்த படத்திற்கு … Read more

Gautham Menon: தூசு தட்டப்படும் கிடப்பில் போடப்பட்ட படம்: மீண்டும் கெளதமுடன் இணையும் விஜய்.!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் கெளதம் மேனன். தற்போது பிசியான நடிகராகவும் இருந்து வருகிறார். இவர் அண்மையில் சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மைக்கேல் படத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து தற்போது லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் உருவாகும் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். கெளதம் மேனன் நடிப்பில் கடந்த வருடம் ‘வெந்து தணிந்தது காடு’ படாம் வெளியானது. விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு … Read more