ஜானி மாஸ்டர் to பிரகாஷ்ராஜ்; வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் பேசியதன் முழுவிபரம்

வாரிசு திரைப்படம் இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் அவசியமானது என்றும், படம் வாழ்க்கையைப் பற்றிய நேர்மறையான விஷயத்தை பகிர்ந்து கொள்ளும் என்று தெரிவித்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ். நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, சங்கீதா, சரத்குமார், ஸ்ரீகாந்த், ஷாம், பிரகாஷ்ராஜ், குஷ்பு, ஜெயசுதா உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் நடிப்பில், தமிழில் ‘வாரிசு’ என்றப் பெயரிலும், தெலுங்கில் ‘வாரசுடு’ என்ற பெயரிலும் இருமொழிகளில் உருவாகியுள்ளது விஜயின் 67ஆவது படமான வாரிசு. இந்தத் திரைப்படத்தை தெலுங்கு இயக்குநரான வம்சி … Read more

கிண்டல், கேலி பற்றி குட்டி கதை சொன்ன அஜித்

இந்தியாவில் பைக் சுற்றுப் பயணத்தை முடித்துள்ள அஜித் அடுத்து உலக பயணத்தை தொடர இருக்கிறார். இந்த நிலையில் இந்திய சுற்று பயணத்தில் அவருடன் இருந்த நண்பர் உதயகுமார், அஜித்துடன் நடந்த உரையாடல் குறித்து தனது சமூகவலைதளத்தில் எழுதியிருப்பதாவது: எதிர்மறையான விமர்சனங்கள், வெறுப்பூட்டும் செய்திகள், ட்ரோல்கள், எதிர்மறையான மீம்ஸ்கள் ஆகியவற்றை எப்படி எதிர்கொள்கிறார் என்று அஜித்திடம் கேட்டேன். அதற்கு அவர் ஒரு குட்டி கதையை பதிலாக சொன்னார். இத்தகைய செயல்களை நிறுத்துமாறு சொல்வது, இறைச்சிக்காக விலங்குகளைக் கொல்வதை நிறுத்துமாறு … Read more

Varisu Audio Launch: "சிம்பு மட்டுமல்ல, அனிருத்தும் ஒரு பாட்டு பாடியிருக்கார்!" – தமன் நெகிழ்ச்சி

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் `வாரிசு’ இசை வெளியீட்டு விழா ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் ‘வாரிசு’ திரைப்படம் குறித்தும் விஜய் குறித்தும் நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ். “ஹாய் செல்லம், லவ் யூ…” என ‘கில்லி’ பட சிக்னேச்சர் டைலாக்குடன் தனது பேச்சை ஆரம்பித்த பிரகாஷ் ராஜ், “ரொம்ப சந்தோஷமா இருக்கு… நான் தளபதியோட 14 வருஷத்துக்கு அப்புறம் ஒரு படம் பண்றேன். சரத்குமார் என் இளைய தம்பி, வயசே ஆகாது … Read more

மீண்டும் நடிக்கத் தொடங்கினார் மீனா

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 90களில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீனா. மீனா பெங்களூருவை சேர்ந்த மென் பொறியாளர் வித்யாசாகர் என்பவரை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நுரையீரல் பிரச்சனை ஏற்பட்டதையடுத்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மரணம் அடைந்தார் வித்யாசாகர். 48 வயதே ஆன வித்யாசாகரின் மரணம் ஒட்டு மொத்த சினிமாத்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வித்யாசாகர் … Read more

20 வயது இளம் நடிகை தற்கொலை!!

20 வயதே ஆகும் இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் சண்டிகரை சேர்ந்த சீரியல் நடிகை துனிஷா ஷர்மா (20), மகாராஷ்டிரா மாநிலத்தில் தொலைக்காட்சி தொடர் ஒன்றின் படப்பிடிப்பு தளத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேக்கப் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கடந்த சில … Read more

திரைப்படங்களை புரிந்து கொள்ளுங்கள்: விமர்சகர்களுக்கு விஜய்சேதுபதி வேண்டுகோள்

சென்னையில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் மாமனிதன் படத்தில் நடித்த விஜய்சேதுபதி சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான விருதை பெற்றுக் கொண்ட விஜய்சேதுபதி பரிசுத் தொகையான ஒரு லட்சத்தினை விழாக் குழுவிடமே திருப்பி அளித்தார், பின்னர் அவர் பேசியதாவது: திரைப்படங்களை பார்த்துவிட்டு கடந்துபோய் விடாமல் இயக்குநர்கள் கதையின் வாயிலாக தெரிவிக்க விரும்பும் விஷயங்களை புரிந்துகொள்ளுங்கள். ஆரோக்கியமாக விவாதங்களில் ஈடுபடுங்கள். வாழ்க்கையின் அனுபவங்கள்தான் திரைப்படங்களாகின்றன. முடிந்த அளவு ஒரு திரைப்படத்தை புரிந்துகொள்ள முயற்சியுங்கள். வாழ்க்கையைப் புரிந்துகொள்ள திரைப்படங்கள் உதவுகின்றன. … Read more

ஆஸ்கர் ரேஸில் பங்கேற்கும் இந்திய குறும்படங்கள்

ஆஸ்கர் விருது இறுதி சுற்றுக்கான பரிந்துரை பட்டியலில் அசல் பாடல் பிரிவில் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம்பெற்ற 'நாட்டு கூத்து' பாடலும், சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் குஜராத்தி மொழியில் வெளியான 'செல்லோ ஷோ' படமும் தேர்வாகியுள்ளன. இவை தவிர, 'ஆல் தட் ப்ரீத்ஸ்' ஆவணப்பட பிரிவிலும், 'தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்' ஆவண குறும்படப் பிரிவிலும் தேர்வாகியுள்ளதாக ஆஸ்கர் கமிட்டி அறிவித்துள்ளது. இதில் 'தி எலிபெண்ட் விஸ்பரஸ்' குறும்படத்தை கார்த்திசி கோன்சலஸ் இயக்கி உள்ளார். முதுமலை காப்பகத்தில் உள்ள … Read more

Varisu Audio Launch: விஜய் ரசிகர்களால் காயமடைந்த போலீஸ்: உச்சக்கட்ட பரபரப்பு.!

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர். இவருக்கென தனியொரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது படங்கள் வெளியாகும் சமயத்திலே எல்லாம் திருவிழா போல் கொண்டாடுவார்கள் ரசிகர்கள். இந்நிலையில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள விஜய்யின் ‘வாரிசு’ படத்திற்கான இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. விஜய்யின் ‘வாரிசு’ பட ரிலீசுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான ‘பீஸ்ட்’ படம் நெகட்டிவ் விமர்சனங்களை குவித்ததால், அவர் தற்போது … Read more

Varisu Audio Launch: "`ரஞ்சிதமே…' பாட்டுக்கு சிங்கிள் ஷாட்டில் நடனமாடி அசத்தினார் விஜய்!"- ஜானி

`வாரிசு’ இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இசையமைப்பாளர் தமன், ராஷ்மிகா மந்தானா, இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷ்யாம் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு. இவர்களுடன் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் – ஷோபாவும் வருகை புரிந்துள்ளனர். * ரசிகர்களின் கவுன்டவுனுடன் அரங்கில் நுழைந்தார் நடிகர் விஜய். விழா அரங்கைச் சுற்றி வந்து ரசிகர்களுக்கு கையசைத்து உற்சாகமூட்டினார். அதைத் தொடர்ந்து விஜய் திரையுலகுக்கு வந்து 30 … Read more

மக்களின் மனங்களை வென்றெடுத்த “மக்கள் திலகம்”

கடையேழு வள்ளல்களின் வரிசையில் வந்த கடைசி வள்ளலாக லட்சக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்படும் “மக்கள் திலகம்” எம்ஜிஆரின் 35வது நினைவு தினம் இன்று. அரசியல், சினிமா என்ற இரட்டை குதிரையில் சவாரி செய்து, இரண்டிலும் முழுமையான வெற்றி என்ற இலக்கை அடைந்த ஒரே ஆளுமை. சினிமாவில் இவர் பயணித்த பாதையை பற்றிய சிறு தொகுப்பு…. * 1917ஆம் ஆண்டு ஜனவரி 17 அன்று இலங்கையில் உள்ள கண்டியில், கோபால மேனன் மற்றும் சத்யபாமா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். * … Read more