ரஜினியின் 171வது படம்- புதிய அப்டேட் வெளியானது!

அண்ணாத்த படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தில் படையப்பாவுக்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் இணைந்து இருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். இந்த படத்தை அடுத்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் ரஜினிகாந்த். அதில் ஒரு படத்தை டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்குவதாகவும், இன்னொரு படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது சிபி சக்ரவர்த்தி சொன்ன கதை … Read more

அணு ஆயுத சோதனையை கையலில் எடுத்து கிறிஸ்டோபர் நோலன்

தி டார்க் நைட் ரைசஸ், இன்டர்ஸ்டெல்லார், இன்செப்ஷன், டன்க்ரிக், டெனட் படங்கள் மூலம் புகழ்பெற்றவர் கிறிஸ்டோபர் நோலன். இவர் படங்களை புரிந்து கொள்ளவே தனி அறிவு வேண்டும் என்கிற அளவிற்கு புகழ்பெற்றவர். அவரது அடுத்த படம் 'ஓப்பன்ஹெய்மர்'. அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹைமர் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் ஜே.ராபர்ட் ஓப்பன்ஹைமர் கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகர் சிலியன் மர்பி நடிக்கிறார். அயர்ன்மேன் புகழ் ராபர்ட் டவுனி ஜூனியர், எமிலி பிளன்ட், மேட் டேமன் … Read more

என் காதல் எல்லாம் கணவர் தான்: நயன்தாரா நெகிழ்ச்சி

பொதுவாக நயன்தாரா அவர் நடிக்கும் படங்களின் எந்த விதமான புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கும் வர மாட்டார். எவ்வளவு பெரிய ஹீரோ ஜோடியாக நடித்தாலும் அப்படங்களுக்காக ஒப்பந்தம் போடும் போதே எந்த நிகழ்ச்சிக்கும் வர மாட்டேன் என குறிப்பிட்டுவிடுவார் என்று திரையுலகத்தில் சொல்வார்கள். இந்நிலையில் 'கனெக்ட்' படத்தின் சிறப்புக் காட்சிகளை சமீபத்தில் சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றில் இரண்டு காட்சிகளாக நடத்தினார்கள். முதல் காட்சி பத்திரிகையாளர்களுக்காகவும், இரண்டாவது காட்சி படக் குழுவினர், சினிமா பிரபலங்களுக்காகவும் நடத்தினார்கள். அவற்றில் நயன்தாரா கலந்து … Read more

ஓடிடி சினிமாவை அழித்து விடும்: அடூர் கோபாலகிருஷ்ணன் எச்சரிக்கை

இந்தியாவின் புகழ்பெற்ற இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன். இயக்கியது 10 படங்கள்தான், ஆனால் வாங்கியது 17 தேசிய விருதுகள் உள்பட 50க்கும் மேற்பட்ட விருதுகள். வங்க இயக்குனர்கள் ஷியாம் பெனகல், சத்யஜித்ரேவுக்கு நிகராக மதிக்கப்படுகிறவர். அவர் ஓடிடி தளங்கள் குறித்து வெளியிட்டிருக்கும் கருத்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: திரைப்படங்கள் என்பது திரையரங்குகளின் காட்சி அனுபவத்திற்காக உருவாக்கப்படுகின்றன. அதை எப்படி சுருக்கி சிறிய திரையில் காட்ட முடியும்? சினிமா என்பது இருண்ட திரையரங்கில் இணைந்து … Read more

திரையுலக பயணத்தில் 20 வருடங்களை கடந்த பாவனா

தமிழில் சித்திரம் பேசுதடி என்கிற படத்தில் இயக்குனர் மிஸ்கினால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை பாவனா. தொடர்ந்து தீபாவளி, ஆர்யா, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடந்த 2002ல் டிச.,20ல் மலையாளத்தில் வெளியான நம்மள் என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் பாவனா. இந்த படத்தை பிரபல இயக்குனர் கமல் இயக்கியிருந்தார். இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து மலையாள திரையுலகில் பிசியான நடிகையாக மாறினார் பாவனா. தற்போது தனது திரையுலக பயணத்தில் இருபது வருடங்களை தான் கடந்துள்ளது … Read more

விஜய் – அட்லி இணையும் படம் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது!

நேற்று முன்தினம் சென்னையில் இயக்குனர் அட்லியின் மனைவி பிரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அட்லீ- பிரியாவை வாழ்த்திய விஜய், தனது சார்பில் பிரியாவுக்கு ஒரு அழகிய ஓவியத்தை பரிசாக வழங்கி இருக்கிறார். இந்த நிலையில் ஏற்கனவே விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கி உள்ள அட்லி, விஜய் நடிக்கும் 68வது படத்தை ரூ.400 கோடி பட்ஜெட்டில் இயக்குவதாகவும், அந்த படத்திற்கான ஒப்பந்தம் முடிந்து விட்டதாகவும் தற்போது புதிய … Read more

தங்கலான் படத்திற்காக சிலம்பம் பயிற்சி எடுத்த மாளவிகா மோகனன்!

விஜய்யின் மாஸ்டர், தனுஷின் மாறன் போன்ற படங்களில் நடித்த மாளவிகா மோகனன் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். கோலார் தங்க வயலில் நடக்கும் பிரச்னையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் இந்த படத்திற்காக தற்போது தீவிரமாக சிலம்பப் பயிற்சி எடுத்து வருகிறார் மாளவிகா மோகனன். தான் பயிற்சி பெரும் வீடியோ ஒன்றை தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். அதோடு, முதல் நாளில் இந்த சிலம்பத்தை கையில் பிடித்தது சிறந்த … Read more

விரைவில் வெளியாகிறது துணிவு படத்தின் மூன்றாவது பாடல் ‛கேங்ஸ்டா'

2023ம் ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு ஆகிய இரண்டு படங்களும் திரைக்கு வரும் நிலையில் வாரிசு படத்தில் இடம் பெற்ற ரஞ்சிதமே, தீ தளபதி, அம்மா பாடல் என மூன்று பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதேபோல் அஜித்தின் துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள சில்லா சில்லா, காசேதான் கடவுளடா ஆகிய பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அடுத்த படியாக கேங்ஸ்டா என்று தொடங்கும் பாடல் வெளியாகிறது. இதனை அப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது வலைதளத்தில் அறிவித்திருக்கிறார். பின்னணி பாடகர் சபீர் … Read more

வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் ‛சபரி' படப்பிடிப்பு நிறைவு

டோலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வரக்கூடிய தமிழ் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்கள், கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில், மஹா மூவிஸின் மகேந்திரநாத் கொண்டலா தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அனில் கட்ஸ் இயக்கத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் அவர் நடித்து வரும் படத்திற்கு ‛சபரி' என பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தியில் உருவாகிவந்த இதன் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. படம் பற்றி வரலக்ஷ்மி கூறுகையில், ‛‛எங்கள் 'சபரி' படத்தின் … Read more

டிசம்பர் 29ல் ஐஸ்வர்யா ராஜேஷின் ‛தி கிரேட் இந்தியன் கிச்சன்' ரிலீஸ்!

மலையாளத்தில் நிமிஷா விஜயன் நடிப்பில் வெளியான படம் தி கிரேட் இந்தியன் கிச்சன். இந்த படத்தை ஜியோ பேபி என்பவர் இயக்கினார். சூப்பர் ஹிட்டான அப்படத்தின் தமிழ் ரீமேக்கை தற்போது அதே தலைப்பில் ஆர். கண்ணன் இயக்கியுள்ளார். புதிதாக புகுந்த வீட்டிற்கு வந்த ஒரு பெண் ஆணாதிக்கம் நிறைந்த குடும்பத்தில் படும் கஷ்டங்களை கூறும் கதையில் இப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்க, அவரது கணவராக பாடகி சின்மயின் கணவரான … Read more