Thalapathy vijay: பகையை மறந்து கூட்டணி அமைக்கும் நடிகர் விஜய்..இதை யாரும் எதிர்பார்களையே..!

தளபதி விஜய் தற்போது வம்சியின் இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். bஇப்படத்தின் பாடல்கள் மற்றும் நடிகர்களின் தகவல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதைத்தொடர்ந்து இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகவுள்ளது. இதையடுத்து விஜய் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவில் மிகவும் எளிமையான முறையில் நடத்தப்பட்டது. Varisu: வாரிசு படத்தில் விஜய்க்கு பிடித்த விஷயங்கள்..வெளியான சுவாரஸ்யமான தகவல்..! … Read more

'கனெக்ட்' படத்திற்காக மீடியாவுடன் கனெக்ட் ஆன நயன்தாரா

இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா ஆகியோர் அவர்களது சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் மூலம் தயாரித்துள்ள படம் 'கனெக்ட்'. அஷ்வின் சரவணன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, சத்யராஜ், அனுபம் கேர் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்த வாரம் டிசம்பர் 23ம் தேதி இப்படம் தியேட்டர்களில் வெளியாகிறது. பொதுவாக நயன்தாரா அவர் நடிக்கும் படங்களின் எந்த விதமான புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கும் வர மாட்டார். எவ்வளவு பெரிய ஹீரோ ஜோடியாக நடித்தாலும் அப்படங்களுக்காக ஒப்பந்தம் போடும் … Read more

Jailer Update: ஆட்டத்தை ஆரம்பித்த தலைவர்: வேகமெடுக்கும் 'ஜெயிலர்'..!

ரஜினியின் ‘அண்ணாத்த’ படம் பலவித நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை படைத்தது. ஆனாலும் ரஜினி ரசிகர்களுக்கு இந்தப்படம் பலத்த ஏமாற்றத்தை அளித்தது. இதனை தொடர்ந்து ரஜினியின் அடுத்த பட இயக்குனர்களின் பட்டியலில் பல இளம் இயக்குனர்களின் பெயர்கள் அடிப்பட்டது. இந்நிலையில் விஜய்யின் ‘பீஸ்ட்’ படம் வெளியாவதற்கு முன்பாகவே ரஜினியை இயக்கும் வாய்ப்பை கைப்பற்றினார் நெல்சன். கடந்த ஏப்ரல் மாதம் வெளியான ‘பீஸ்ட்’ படம் குறித்து பலவிதமான நெகட்டிவ் விமர்சனங்கள் இணையத்தில் குவித்தது. இதனால் … Read more

என்.டி.ராமராவுக்கு அமெரிக்காவில் சிலை

பழம்பெரும் தெலுங்கு நடிகர் என்.டி.ராமராவ். கிருஷ்ணர் வேடத்தில் அதிகம் நடித்ததால் ஆந்திர மக்களால் கடவுளாகவே பார்க்கப்பட்டவர். ஆந்திர மாநில முதல்வராக 3 முறை பதவி வகித்தவர். அவரது நூற்றாண்டு விழா தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் உள்ள எடிசன் நகரில் என்.டி.ராமராவின் உருவச்சிலை வைக்கப்பட இருக்கிறது. அமெரிக்காவில் வசிக்கும் இந்திய தொழிலதிபரும் முன்னணி தயாரிப்பாளருமான டிஜி விஸ்வ பிரசாத் என்டிஆர் சிலையை வைக்க ஏற்பாடு … Read more

நடிகை சமந்தா சினிமாவில் இருந்து ஓய்வு.?..ரசிகர்கள் அதிர்ச்சி!

அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகை சமந்தா, முழுமையாக குணமடையும் வரை நடிப்பிலிருந்து தற்காலிகமாக ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தென்னிந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள அவரது திரைப்படங்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. கடைசியாக சமந்தாவின் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படமும் நல்ல ஆதரவை பெற்றது. இந்நிலையில், தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா … Read more

Pichaikkaran2: விஜய் ஆண்டனியின் புதிய அவதாரம்: 'பிச்சைக்காரன் 2' படத்தின் தாறுமாறு அப்டேட்.!

2016-ம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கத்தில் வெளியான படம் ‘பிச்சைக்காரன்’. விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையமைத்திருந்த இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. நீண்ட காலமாக பேச்சு வார்த்தையில் இருந்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு அண்மையில் அதிகாப்பூர்வமாக வெளியானது. இசை அமைப்பாளராக பல்வேறு அதிரடியான வெற்றிபெற்ற ஆல்பங்களின் மூலம், பிரமிக்க வைக்கும் சாதனை படைத்தவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகர் மற்றும் … Read more

விஜய்சேதுபதி மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

வைஷ்னவ் தேவ், கிர்த்தி ஷெட்டி ஆகியோர் நடிப்பில் உருவான தெலுங்கு படம் உப்பெனா. இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். படம் நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கு மொழியில் வெளியான இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனம் வாங்கியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய விஜய் சேதுபதிக்கு தடை விதிக்கக் கோரி தேனியை சேர்ந்த டல்ஹவுசி பிரபு என்பவர் … Read more

டாம் குரூஸை கண்டு வியந்த நடிகர் சூர்யா!….

ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸின் ஸ்டன்ட் காட்சியை கண்டு நடிகர் சூர்யா ஆச்சரியம் அடைந்துள்ளார். ஹாலிவுட் சினிமாவின் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர் டாம் குரூஸ் அடுத்தடுத்து அதிரடியான ஆக் ஷன் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில், அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் மிஷன் இம்பாசிபிள் 7.   டாம் குரூஸ் மிகவும் ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். மேலும் சிறப்பான விஷயம் அவரின் சண்டைக் காட்சிகளுக்கு டூப் வைத்து நடிக்காமல் அனைத்து … Read more

Soul Of Varisu: 'வாரிசு' படத்தின் தாலாட்டு பாடல்: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

பீஸ்ட் படத்தின் ரிலீசுக்கு முன்பாகவே தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில்’ தளபதி 66′ படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. ‘பீஸ்ட்’ படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால், விஜய் தற்போது நடித்து முடித்துள்ள ‘வாரிசு’ படத்தை அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள். ‘வாரிசு’ படத்தினை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்த … Read more

சினிமாவுக்கு நீண்ட பிரேக் விடும் சமந்தா? – பாலிவுட் படங்களிலிருந்து விலகிய பின்னணி என்ன?

தனது உடல்நிலை முழுமையாக குணமாகும்வரை, சினிமாவில் நடிப்பதில் இருந்து இடைவெளி எடுத்துக்கொள்ள சமந்தா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் கடைசியாக, அறிமுக இயக்குநர்கள் ஹரி-ஹரிஷ் இயக்கிய ‘யசோதா’ படத்தில் கடைசியாக நடித்திருந்தார். 5 மொழிகளில் உருவாகியிருந்த இந்தப் படம் கடந்த மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சமந்தா, வரலஷ்மி சரத்குமார் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. … Read more