வாரிசு OTT-யில் எப்போது வெளியாகும்? வெளியானது தகவல்!

Varisu OTT Release Date: 2023ம் ஆண்டின் தொடக்கமே விஜய் மற்றும் அஜித் என இரண்டு பெரிய நட்சத்திரங்களின் படங்களும் மோதிக்கொண்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், கொண்டாட்டத்தையும் கொடுத்தது.  ஜனவரி 11ம் தேதியன்று விஜய்யின் ‘வாரிசு’ படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுவரை ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களின் ஆரவாரத்துடன் ஹவுஸ்ஃபுல்லாக இருந்து வருகின்றது.  அஜித்தின் துணிவு படத்தோடு மோதிய விஜய்யின் ‘வாரிசு’ படம் பாக்ஸ் ஆபிசில் சிறந்த முறையில் கல்லா கட்டி வருகின்றது.  இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் … Read more

Vijay sethupathy: பிரபல நடிகரிடம் மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி..இதுக்கெல்லாம் மன்னிப்பா ?

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருகின்றார் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் எந்த வித ரோலாக இருந்தாலும் தயங்காமல் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்று வருகின்றார் விஜய் சேதுபதி. ஒரு பக்கம் ஹீரோவாகவும், மறுபக்கம் வில்லனாகவும் கலக்கி வரும் விஜய் சேதுபதி தற்போது ஒரே சமயத்தில் பல படங்களில் நடித்து வருகின்றார். ரஜினி, விஜய், கமல் என முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து மிரட்டிய விஜய் சேதுபதி தற்போது ஷாருக்கான் … Read more

மோதலுக்கு தயாரான ரொனால்டோ, மெஸ்ஸி! நேரில் வாழ்த்தை பகிர்ந்த அமிதாப் பச்சன்

சவுதி அரேபியாவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி ஆகிய இருவருக்கும் அமிதாப் பச்சன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன. அண்மையில் நடந்து முடிந்த ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி, பிரான்ஸ் அணியை வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது.  அதேவேளையில், மெஸ்ஸியின் கடுமையான போட்டியாளராக இருந்த கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி, இந்த உலகக்கோப்பையின் காலிறுதியில் மொரோக்கோ அணியிடம் தோல்வியைத் தழுவி வெளியேறியது. இதனைத் … Read more

Thunivu – Varisu: அஜித் – விஜய் ரசிகர்களின் மோதல்கள்..வெளிப்படையாக பேசிய பிரபல நடிகர்..!

தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்களின் படங்கள் தனித்தனியே வந்தாலே ரசிகர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு அளவே இருக்காது. ஆனால் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரு நடிகர்களின் படங்களும் ஒரே தினத்தில் வெளியானது. அஜித்தின் துணிவும், விஜய்யின் வாரிசு திரைப்படமும் கடந்த வாரம் வெளியானது. ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் ஒரே தினத்தில் வெளியானதால் பரபரப்பான சூழல் நிலவி வந்தது. பல இடங்களில் இரு ரசிகர்களுக்கும் இடையே மோதல்கள் … Read more

மஞ்சு வாரியர் ஓட்டுநர் உரிமம் பெற்றதை புரமோசனுக்கு பயன்படுத்திய படக்குழு

சமீபத்தில் வெளியான துணிவு படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தார் மஞ்சு வாரியர். இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற போது அஜித் உள்ளிட்ட குழுவினருடன் இணைந்து கிட்டத்தட்ட 1000 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றுப்பயணம் செய்தார் மஞ்சு வாரியர். இந்த பயண அனுபவம் குறித்து அவர் கூறும்போது விரைவில் தான் ஓட்டுனர் உரிமம் பெற்று விடுவேன் என்றும், அடுத்த முறை தானே பைக் ஓட்டி செல்வேன் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது அவருக்கு இரு … Read more

கூலிப்படை தலைவியாக பிரியாமணி

சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னடத்தில் தண்டுபால்யா என்ற படம் வெளிவந்தது. கொடூர கொலைகளை செய்யும் ஒரு கும்பலை பற்றிய படம். அதே போன்று இப்போது உருவாகி உள்ள படம் கொட்டேஷன் கேங். இந்த படத்தில் பிரியாமணி, சன்னி லியோன், ஜாக்கி ஷெராப், சாரா அர்ஜூன், அஷ்ரப் மல்லிசேரி, ஜெய பிரகாஷ், அக்ஷயா, பிரதீப் குமார், விஷ்ணோ வாரியர், சோனல் கில்வானி, கியாரா, சட்டிண்டர், ஷெரின் நடித்துள்ளனர். அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்துள்ளார். டிரம்ஸ் சிவமணி இசை அமைத்துள்ளார். … Read more

'இறைவன்' ஆக்ஷன் திரில்லர் படம்: தயாரிப்பாளர் தகவல்

ஜெயம்ரவி, நயன்தாரா நடித்து முடித்துள்ள படம் இறைவன். வாமணன், என்றென்றும் புன்னகை, மனிதன், ஜனகனமன படங்களை இயக்கிய ஐ.அகமத் இயக்கி உள்ளார். ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன், விஜயலட்சுமி, சார்லி, அழகம் பெருமாள், வினோத் கிஷன், பக்ஸ், படவா கோபி, பொற்கொடி உள்பட பலர் நடித்துள்ளார்கள். ஹரி கே.வேதாந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார், யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். பேஷன் ஸ்டூடியோ சார்பில் சுதன் சுந்தரம், ஜி.ஜெயராம் தயாரித்துள்ளனர். தற்போது படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கி … Read more

டாம் குரூஸ், ஜாக்கிசானை பின்னுக்கு தள்ளிய ஷாருக்கான்!

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தற்போது ஜவான் மற்றும் பதான் போன்ற படங்களில் நடித்து வருகிறார். உலகம் முழுக்க ரசிகர்களைக் கொண்டுள்ள ஷாருக்கான் தற்போது ஆசியாவின் பணக்கார நடிகர் என்றும் உலக அளவில் நான்காவது பெரிய பணக்கார நடிகர் என்றும் ஒரு பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது. உலகின் பணக்கார நடிகர்கள் பட்டியலில் ஹாலிவுட் நடிகர்களான டாம் குரூஸ், ஜாக்கிசான் ஆகியோர்தான் இடம் பெற்றிருந்தார்கள். ஆனால் இப்போது அவர்களை ஷாருக்கான் பின் தள்ளி இருக்கிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு … Read more

Varisu vs Thunivu: இது 'துணிவு' பட ஒப்பீடு அல்ல: 'வாரிசு' பட பிரபலம் பரபரப்பு பதிவு.!

கடந்த 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘துணிவு’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது. அதே போல் ‘வாரிசு’ படம் அதே நாளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த இரண்டு படங்களும் போட்டி போட்டு வசூலில் மாஸ் காட்டி வருகிறது. ‘துணிவு’ படத்தில் அஜித்துடன் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன், தர்ஷன், அமீர், பாவனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள … Read more

திருமணத்திற்கு முன்பே 31 குழந்தைகளுக்கு தாயான ஹன்சிகா!

கடந்த டிசம்பர் நான்காம் தேதி தொழிலதிபர் சோஹைல் கத்துரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை ஹன்சிகா. அதையடுத்து தேனிலவுக்காக பல்வேறு நாடுகளுக்கு சென்றவர் சமீபத்தில் ஒரு விளம்பர படத்தில் நடித்தார். இந்நிலையில் வருகிற 20ம் தேதியிலிருந்து இடைவிடாமல் படங்களில் தான் நடிக்கப் போவதாக அவர் தெரிவித்திருக்கிறார். அதோடு தற்போது தனது கைவசம் ஏழு படங்கள் மட்டுமின்றி 2 வெப் தொடர்களும் இருப்பதாகவும் கூறும் ஹன்சிகா, திருமணத்திற்கு பிறகும் நான் ரொம்ப பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். அது … Read more