காசி தமிழ் சங்க விழாவில் கர்ணன், திருவிளையாடல், மாமனிதன்

மத்திய அரசு சார்பில் 'ஒரே பாரதம் – உன்னத பாரதம்' இயக்கத்தின்கீழ், தமிழகத்துக்கும், காசிக்கும் உள்ள வரலாற்று தொடர்பை எடுத்துரைக்கும் வகையில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த மாதம் 17ம் தேதி முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. வருகிற 16ம் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 3 திரைப்படங்கள் அங்கு திரையிடப்படுகிறது. சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த மாமனிதன் படம் இன்று (12ம் … Read more

Legend Saravanan: சினிமாவை தொடர்ந்து அடுத்த இலக்கு: லெஜண்ட் அண்ணாச்சியின் அதிரடி முடிவு.!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக உருவான படம் ‘தி லெஜண்ட். சரவணன் முதல் முறையாக தயாரித்து நாயகனாக அறிமுகமான இந்தப்படம் கடந்த ஜூலை 2 ஆம் தேதி வெளியானது. ஜேடி-ஜெர்ரி இயக்கிய இந்தப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் வெற்றி படங்களை வினியோகம் செய்யும் அன்புச்செழியனின் கோபுரம் சினிமாஸ், ‘தி லெஜண்ட்’ படத்தை அதிக முன் பணம் கொடுத்து தமிழகம் … Read more

Jailer Teaser: வந்தாச்சி ஜெயிலர் முத்துவேல் பாண்டியன்…குஷியில் ரஜினி ரசிகர்கள்

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாத்த படம் படுதோல்வியடைந்தது. இதனால் அப்செட்டான ரஜினி டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். டாக்டர் வெற்றியை நெல்சனுடன் ரஜினி இணைந்ததை கொண்டாடிய ரசிகர்கள் பீஸ்ட் பட தோல்வியை வைத்து கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்தச் சூழலில் ரஜினி படத்திலிருந்து நெல்சன் நீக்கப்பட்டுவிட்டார் என்றெல்லாம் செய்திகள் பரவின. ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கும் விதமாக ரஜினி – நெல்சன் இணையும் படத்துக்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் … Read more

முத்துவேல் பாண்டியனாக கையில் பட்டாக் கத்தியுடன் ரஜினி! மிரட்டும் ‘ஜெயிலர்’ ப்ரமோ வீடியோ!

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது கதாபாத்திரத்தை அறிமுகம் செய்வதுப் போன்ற சிறப்பு ப்ரோமோ ஒன்றை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரஜினிகாந்தின் 169-வது படமாக உருவாகி வருகிறது ‘ஜெயிலர்’ திரைப்படம். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, நெல்சன் திலீப்குமார் தனது 4-வது படமாக இயக்கி வருகிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் … Read more

கன்னட நடிகர் அபிஷேக் திருமணம் : ஆடை வடிவமைப்பாளரை மணக்கிறார்

பழம்பெரும் கன்னட நடிகரும், அரசியல்வாதியுமான அம்ரீஷ், நடிகை சுமலதா தம்பதிகளின் மகன் அபிஷேக். தற்போது கன்னட படங்களில் பிசியாக நடித்து வரும் அபிஷேக்கிற்கும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் குரு பிரசாத் பிடப்பாவின் மகள் அவியா பிடப்பாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது நிச்சயதார்த்த விழா நேற்று பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டில் ஒன்றில் நடந்தது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் இதில் கலந்து கொண்டனர். அபிஷேக்கின், காதல் மற்றும் திருமணம் குறித்து கடந்த சில வாரங்களாக பல்வேறு தகவல்கள், … Read more

Varisu: ரஜினி, கமல் பாணியில் களமிறங்கிய விஜய்: மாஸ் காட்டும் 'வாரிசு' படக்குழு.!

நெல்சன் இயக்கிய ‘பீஸ்ட்’ படத்தின் ரிலீசுக்கு முன்பாகவே தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில்’ தளபதி 66′ படத்தில் விஜய் நடிக்க கமிட் ஆனார் விஜய். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியானது. இந்தப்படத்தில் விஜய்யின் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ‘வாரிசு’ படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட … Read more

மது பழக்கத்துக்கு அடிமையானேன் – மனிஷா கொய்ராலா

தமிழில் பம்பாய், இந்தியன், முதல்வன், பாபா, ஆளவந்தான் என பல படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா. அதன்பிறகு 2011ல் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் அவரது மாமியார் வேடத்தில் நடித்தார். கடந்த 2010ல் சாம்ராட் என்பவரை திருமணம் செய்து கொண்ட மனிஷா கொய்ராலா இரண்டு ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்றார். பின்னர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு அதிலிருந்து மீண்டார். இந்தநிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ஆரம்பத்தில் கேமரா முன்பு தைரியமாக நடிப்பதற்காக … Read more

லவ் டுடே வெற்றி எதிர்பார்த்ததுதான்: பிரதீப் ரங்கநாதன்

ஜெயம்ரவி நடித்த கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள லவ் டுடே திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, தற்போது ஓடிடி தளத்திலும் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது. படத்தில் பணியாற்றியவர்கள் மற்றும் மீடியாக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது: இந்த படத்தின் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை. பர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்தே எங்களுக்கு ஏகப்பட்ட ஆதரவு … Read more