என்ன செய்வேன் தெரியுமா…? பாலியல் வன்கொடுமை குறித்து கீர்த்தி சுரேஷ்

பாலியல் துன்புறுத்தலும், அத்துமீறலும் அனைத்து திரையுலகிலும் என்றும் ஒலிக்கும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஆனால், அதை வெளியே பகிரங்கமாக அறிவிப்பது மிகவும் குறைவானவர்களே. தென்னிந்தியாவில் மலையாள திரைப்பட உலகில் பாலியல் குற்றச்சாட்டு சமீப ஆண்டுகளில் பெரும் பூகம்பங்கள் வெடித்துள்ளது.  இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து, நடிகை கீர்த்தி சுரேஷிடம் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, அவர் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்,”என்னுடன் பணிபுரியும் பலர் என்னுடன் பாலியல் துன்புறுத்தல் குறித்து பகிரங்கமாக விவாதித்துள்ளனர். ஆனால் அது … Read more

டிரென்டிங் போட்டியில் 'தீ தளபதி….,' மற்றும் 'சில்லா..சில்லா..'

2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்துள்ள 'வாரிசு', அஜித் நடித்துள்ள 'துணிவு' ஆகிய இரண்டு படங்களும் போட்டியிட உள்ளன. அந்த வெளியீட்டுப் போட்டிக்கு முன்னதாகவே பாடல்கள் மூலம் இப்போது போட்டி ஆரம்பமாகியுள்ளது. 'வாரிசு' படத்தின் முதல் சிங்கிள் 'ரஞ்சிதமே' ஒரு மாதத்திற்கு முன்பு வெளிவந்து 90 மில்லியன் பார்வைகளை யு டியூபில் கடந்து ஹிட் லிஸ்ட்டில் இடம் பிடித்துவிட்டது. அதற்கடுத்து இரண்டாவது சிங்கிளான 'தீ தளபதி..' பாடல் ஒரு வாரம் முன்னதாக வெளியாகி 20 … Read more

பாபா ரீ ரிலீஸ் முதல் நாள் வசூல்… அப்செட்டில் ரஜினி?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுதி தயாரித்த படம் பாபா. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான இந்தப் படமானது அப்போது படுதோல்வியடைந்தது. ஆன்மீகத் தன்மையோடு வெளியான படத்தை ரஜினி ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததாலும், படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களுடன் கனெக்ட் ஆகாததும்தான் தோல்விக்கு காரணம் என கூறப்பட்டது. பெரும் தொகை கொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்கள் எல்லாம் போர்க்கொடி தூக்க அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் பணத்தையும் கொடுத்தார் … Read more

இறவாக்காலம் குறித்து அஸ்வின் சரவணன் நம்பிக்கை

நயன்தாரா நடித்த மாயா என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வின் சரவணன். அதைத்தொடர்ந்து டாப்ஸி நடித்த கேம் ஓவர் படத்தை இயக்கிய இவர் தற்போது மீண்டும் நயன்தாரா நடிப்பில் கனெக்ட் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதேசமயம் இந்த படத்திற்கு முன்னதாக அவர் எஸ்ஜே சூர்யாவை வைத்து இறவாக்காலம் என்கிற படத்தை இயக்கியிருந்தார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து இருந்த அந்த படம் சில காரணங்களால் எப்போது ரிலீசாகும் என்பது தெரியாமல் … Read more

மருத்துவமனையில் நடிகர் சரத்குமார்! அறிக்கையில் விளக்கம்

தமிழகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சரத்குமார். ஸ்டார் அந்தஸ்தில் இருந்த சரத்குமார் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். சில ஆண்டுகள் நடிப்பதில் இருந்து விலகியிருந்த அவர், அண்மைக்காலமாக தொடர்ச்சியாக வெப்சீரீஸ், திரைப்படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திலும் பெரிய பழுவேட்டரையராக நடித்திருந்தார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் வாரிசு படத்திலும் நடித்திருக்கிறார். இந்நிலையில், திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் நடிகர் சரத்குமார் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீர்சத்து குறைப்பாடு உள்ளிட்ட காரணங்களால் அவர் … Read more

பாலாவின் சம்பள விவகாரம் ; ஆதாரத்துடன் முற்றுப்புள்ளி வைத்த உன்னி முகுந்தன்

கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாளத்தில் நடிகர் உன்னி முகுந்தன் நடித்த ஷபீக்கிண்டே சந்தோஷம் என்கிற படம் வெளியானது. இந்த படத்தை உன்னி முகுந்தனே தயாரித்து இருந்தார். இந்த படத்தில் இயக்குனர் சிவாவின் தம்பியும் தமிழ் நடிகருமான பாலா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது கதாபாத்திரத்திற்கு வரவேற்பும் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் உன்னி முகுந்தன் தனக்கு பேசியபடி சம்பளத்தொகை கொடுக்கவில்லை என்றும், தனக்கு மட்டும் அல்ல இன்னும் பல தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் சம்பளம் பட்டுவாடா … Read more

ரேவதியின் சலாம் வெங்கியை பாராட்டிய சிரஞ்சீவி

தமிழ், மலையாள சினிமாக்களில் தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துவரும் சீனியர் நடிகை ரேவதி சமீபகாலமாக இந்த இரண்டு மொழிகளிலும் அதிக படங்களில் நடிக்கவில்லை.. காரணம் அவர் ஹிந்தியில் சலாம் வெங்கி என்கிற படத்தை இயக்கி வந்தார். கஜோல் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படம் இந்த வாரம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட இளம் செஸ் விளையாட்டு வீரன் ஒருவனை மையப்படுத்தி இந்தப்படத்தை இயக்கியுள்ளார் ரேவதி. அதேசமயம் வித்தியாசமான கோணத்தில் இந்த … Read more

இறப்பதற்கு முன் முல்லை சித்ரா தோழியிடம் கூறியது என்ன? சக நடிகை பேட்டி

சின்னத்திரை நடிகை வீஜே சித்ரா மிகவும் எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்து மீடியாவில் புகழோடு வாழ்ந்து மறைந்தார். அவரது மரணத்தை இன்று வரை ஜீரணிக்க முடியாமல் ரசிகர்கள் பலரும் அவருக்காக பிரார்த்தித்து வருகின்றனர். கடந்த டிசம்பர் 9ம் தேதி சித்ராவின் இரண்டாமாண்டு துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதனையொட்டி சித்ராவின் தோழியும் சின்னத்திரை நடிகையுமான சரண்யா துராடி நேர்காணல் ஒன்றில் சித்ராவின் மரணம் தற்கொலையாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக கூறியுள்ளார். அந்த பேட்டியில், சித்ராவுக்கும் தனக்குமான நட்பை … Read more

நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா

வடிவேலு தமிழ் சினிமாவின் தன்னிகரில்லா கலைஞன். பல ஆண்டுகள் தமிழ் சினிமாவை ஆட்சி செய்த வடிவேலு சில பிரச்னைகளால் திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். ஒருவழியாக அவருக்குரிய பஞ்சாயத்துக்கள் அனைத்து முடிந்ததை அடுத்து மீண்டும் வைகை புயல் களமிறங்கியிருக்கிறது. அந்தவகையில் மாரி செல்வராஜின் மாமன்னன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் அவர் ஜிவி பிரகாஷின் படத்தில் வில்லனாக நடிக்கவிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. இதனால் வடிவேலுவை மீண்டும் திரையில் காணவிருப்பதை நினைத்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தனது இரண்டாவது இன்னிங்ஸிலும் காமெடி, … Read more

Thunivu: ரஜினிக்கு போட்டியாக களமிறங்கும் அஜித்..கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் கடந்த நாற்பது ஆண்டுகளாக சூப்பர்ஸ்டார் நடிகராக வலம் வருகின்றார் ரஜினி. கமர்ஷியல் படங்களாக தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்த ரஜினி கடந்த சில ஆண்டுகளாக எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் தவித்துவருகின்றார். குறிப்பாக அவரது நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து தற்போது கட்டாய வெற்றியை எதிர்நோக்கி ரஜினி நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். Suriya: பாலாவால் சூர்யா இழந்த விஷயங்கள்..இனி இணைவது கஷ்டம் தான் போலயே..! … Read more